Saturday 2 June 2012

திருந்தவே திருந்தாதா தினமலர்...?

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு சென்று திரும்பியபோது வழியில் ஒரு சுவரொட்டியில் இருந்த வாசகம் என் கண்ணில்பட்டு உற்று நோக்கவைத்தது. அது ஒரு கண்டன வாசகம்.கருப்பு வண்ணத்தில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. "இனி நீ தினமலர் அல்ல..தினமலம்".இந்தக் கீழ்த்தரமான செயலை செய்தது யார்? எதனால் எழுதப்பட்டது? என்று ஆராய்வதற்கு அது ஓன்றும் ஆச்சர்யமான விசயமாக தெரியவில்லை. ஆனால் ஓன்று மட்டும் சர்வ நிச்சயம்.எந்த ஒரு தினசரி நாளிதழும் இந்த அளவிற்கு கண்டனத்துக்கு உட்பட்டிருக்காது.

  இணைய ஊடக வெளிகளில் கிட்டத்தட்ட முதல் இடத்தில் இருக்கும் தமிழ் இணையதளம்.அலெக்ஸா தரவரிசையில் உலக அளவில் இரண்டாயிரத்துக்கு கீழ்,இந்திய அளவில் ஒன்பதாவது இடம் என்று இதன் இணையவேர் உலகம் முழுவதும் மிக ஆழமாக ஊடுருவியிருக்கிறது.அதேவேளையில்,தான் ஒரு 'உண்மையின் உரைகல்' என்று சூளுரைக்கும் இதன் தரத்திற்குப் பின்னால் மிகப்பெரிய கேள்விக்குறி இடவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

     பொதுவாகவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெரும்பான்மையான தினசரி நாளிதழ்கள் சுதி தப்பாமல் தாளம் போடுவது உலக இயல்புதான்.ஆனால் அந்தக் கட்சி சார்ந்த பத்திரிக்கையே பொட்டலம் கட்டி பார்சல் அனுப்பும் அளவுக்கு நடுநிலை நாளிதழ் என தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஒரு பத்திரிகை, சுதி,ஜதி,லயம் மாறா ஜால்ரா போடுகிறதென்றால் அது 'பொய்மையின் பொறைக்கல்' தினமலர் தான் என்பது மிகையல்ல.
   
   நமது எம்ஜியார் வெர்சன் -9 ஆக தன்னை உலக அளவில் பிரபலப்படுத்திக் கொள்ளவும்,அம்மாவின் அடி வருடிகளின் ஆசீர்வாதத்தைப் பெறவும்,இணைய வெளி வாசர்களை அதிகப்படுத்திக் கொள்ளவும் இது கையாளும் தந்திரம்,ஒரு பாரம்பரியமிக்க பத்திரிக்கைகளுக்கென்றே இருக்கும் நியாயமானத் தகுதிகளைக்  கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

இதன் இணையதளத்தில் ஒரு செய்தியோ அல்லது கட்டுரையோ வெளியிடப்படுகிறதென்றால் அதன் ஆயுட்காலம் ஒருநாள்.சமூக பிரச்சனைப் பற்றிய பதிவென்றால் இரண்டு நாள்.ஆனால் கடந்த நான்கு நாட்களாக வெறும் கற்பனையில் வடிக்கக் கூடிய ஒரு செய்தியை வெளியிட்டு அதன் மூலம் யாரையோ திருப்திப்படுத்தும் துர்பாக்கிய நிலைமைக்கு இது தள்ளப்பட்டிருக்கிறது.  

      அப்படியென்ன சமூகம் சார்ந்த பிரச்சனை அது....?.அதன் வழ(ள)மையான வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்...

"கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை"

அரசியல் புலனாய்வுப்பழம் தின்று,கிசு கிசு கொட்டைப்போட்ட பல இரண்டாம் தரப் பத்திரிக்கைகளுக்குக் கூட எட்டாத இந்த யோசனை,அன்றாட  நிகழ்வுகளையும் செய்திகளையும் வெளியிடும் ஒரு தினசரிப் பத்திரிக்கைக்கு எப்படி உதித்தது?
      
இந்தப்பத்திரிக்கையின் தலையாயப் பணியே,அன்றாட நிகழ்வுகளை ஏதோ ஒரு வழியில் கருணாநிதியுடனும்,அவரது குடும்பத்தினருடனும் சம்மந்தப்படுத்தி அசிங்கமாக எழுதி அதன் மூலம் ஜென்ப சாபல்யம் அடைவதே!.ஒருவேளை,இப்படியொரு யோசனை இவர்கள் வெளியிட்டப் பின்பு தான் கருணாநிதிக்கே உதித்திருக்கும்.

ஒருவேளை "கருணாநிதியின் பிரதமர் ஆசை" என்று தலைப்பிட்டிருந்தால் கூட ஓரளவு நம்பும்படியாக இருந்திருக்கும்.அதிலும் இவர்கள் கருணாநிதியைக் கேவப்படுத்தி எந்த செய்தி வெளியிட்டாலும் உடனே சொம்பைத்தூக்கிக் கொண்டு கமென்ட் போட ஒரு கூட்டம் தலைதெறிக்க ஓடிவரும்.செய்தியில் என்ன இருக்கிறது என்று கூட படிக்க நேரமிருக்காது இவர்களுக்கு.ஆனால் வாய்க்கூசும் அளவுக்கு கமென்ட்களை அங்கே வாந்தி எடுத்து விட்டு ஓடி ஒளிந்து விடும்.உடனே இவர்களும் 'எலியைப்பிடிக்க பதுங்கியிருக்கும் பூனை போல, 'அது மாதிரி' கமென்ட்களைகளை மட்டும் 'லபக்கி' பிரசுரித்து விட்டு,அடுத்த எலி வரும் வரைக் காத்திருப்பார்கள்.ஆனால் நடுநிலைமையான,நியாயமான கமெண்டுகளுக்கு இங்கே அனுமதி இல்லை. அதிலும் சிங்கப்பூரிலிருக்கும் ஒரு பக்கிதான் இதன் வாடிக்கையான கமென்டாளர்.கலைஞரைத் தாக்கியோ அல்லது அம்மாவைப்போற்றியோ எந்த செய்திவந்தாலும் கழிவறையில் இருந்தாலும் இவர் மூக்கு வியர்த்து விடும். பாதியிலே ஓடிவந்து இதிலும் கொஞ்சம் கக்கிவிட்டு போனால் தான் அவருக்கும் நிம்மதி. இவர்களுக்கும் ஆத்மதிருப்தி.இவ்வாறாக வெளியிடப்படும் செய்திகளும்,அடிவருடிகளின் கமெண்டுகளும் மேலிடத்தை ஓரளவு திருப்தி படுத்திவிட்ட செய்தி இவர்களின் செவிகளுக்கு எட்டிய பிறகுதான் இந்தப் பதிவு முற்றிலுமாக நீக்கப்படும்.

    அதிலும் இதன் முதல் பக்கத்தில் வெளியிடப்படும் கார்ட்டூன் எல்லாமே கருணாநிதியை சம்மந்தப்படுத்தியே இருக்கும்.இதற்கு மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவதாக தகவல்(நாங்களும் எழுதுவோம்ல..)இன்னும் சில மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிறது.கண்டிப்பாக இப்படியொரு தலைப்பை அந்த பத்திரிகையில் நீங்கள் எதிர்பார்க்கலாம். "கருணாநிதியின் அமெரிக்க ஜனாதிபதி ஆசை".

அதன் உள்செய்தி இவ்வாறு இருக்கலாம்."வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக நமக்கு செய்தி கிடைத்தது.அதற்காக ஆறுபேர் கொண்ட எம்பிக்களின் குழு நேற்று அமெரிக்க சென்று மோனிகா லெவின்ஸ்கி மூலம் பில் கிளிண்டனை சந்தித்தது.அவர் ஷாக்காகி கட்டிலில் சாய்ந்தவர்தான் (தனியாத்தான்.....). இன்னும் எழுந்திரிக்கவேயில்லை.இந்த வயதில் கருணாநிதிக்கு இது தேவையா?"  

இந்த செய்தியப் படித்த சொம்புகள்,உடனே "ஆமா இது கிழத்திற்கு தேவையா ?" என்ற ரீதியில் கக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  


சமகால மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போவதுதான் ஊடகம்.ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த நேரம். தமிழமே கொந்தளிப்பில் இருந்தது.தமிழ் அச்சு ஊடகங்களனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக சீற்றத்துடன் எழுதித் தள்ளியது.ஆனால் இவர்கள் மட்டும் பிரபாகரனைப்பற்றி தவறான செய்திகளை, "துரோகி கருணா"வின்  பேட்டியின் மூலம் பாகம்,பாகமாக வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

கடந்த வருடம் கேரளாவில் ரயிலில் சென்ற ஒரு கல்லூரி மாணவியை, பாலியல் துன்புறத்தல் செய்யும் நோக்கோடு,ரயில் இருந்து  கீழே தள்ளிவிட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நிலையிலும் அந்தப்பெண்ணை  பலாத்காரம் செய்து கொன்ற ஒரு பிக்பாக்கட் பொருக்கி காமுகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.அவன் நம் மாநிலத்தை சேர்த்தவன் என்பதால்,ராஜீவ் கொலையாளிகளிக்கு போராடும் தமிழர்கள் இதுக்கு ஏன் போராடவில்லை என்று "நமது சிறப்பு நிருபர்" மூலம் ஒரு கட்டுரை வெளியிட்டு,பல பேரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

இப்படி மக்களின் எண்ணங்களோடு ஒத்துப்போகாத விசயங்களை வெறும் பரப்பரப்புக்காக எழுதி,இது என்ன தமிழ்மணத்தின் சூடான செய்திகளில் இடம்பிடிக்கப் போகிறதா?

கிராமங்களில்,செழுமையான மரங்களின் கிளைகளில் திடீரென்று ஒட்டுண்ணி வகை தாவரம் தொற்றிக் கொள்ளும்.நாளடைவில் இது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அந்த மரத்தையே அழித்துவிடும்.அதற்காக முன் கூட்டியே அந்தக்கிளைகளை வெட்டி எறிந்து விடுவார்கள்.அதுபோல இந்த நாளிதழில் "நமது சிறப்பு நிருபர்"என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஒட்டுண்ணிகளை அப்புறப்படுத்தினால் தான் 'உண்மையின் உரைகல்' உண்மையிலேயே உரக்க ஒலிக்கும்.

----------------------------------------------(((((((((((((((()))))))))))))))))))))))))))))))------------------------      


19 comments:

  1. Arumayana pathivu. Ivargalellam (braminargal) eppothu thirunthuvargal. Unmaiyai veliyitta ungalukku nandri.

    ReplyDelete
  2. Arumayana pathivu. Ivargal eppothu (biraminargal) thirunthuvargal. Thinamalar alla Thinamalam nichayam unmai. Unmaiyai velippaduthiya ungaluku nandri. (susicute85.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி நண்பா..

      Delete
  3. பாஸ்... நச் போஸ்ட்..... தொடருங்க

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பிரகாஷ் ..

      Delete
  4. பரபரப்பா செய்திகள் போட்டு ஆதாயம் தேடும் அதிபுத்திசாலி இந்த தினமலர்..இரண்டு நாள் முன்பு கூட பிசுபிசுத்த பந்த் என்ற தலைப்பு செய்தி...

    ReplyDelete
    Replies
    1. தன்னை முதல்தர பத்திரிகை என்று சொல்லிக்கொள்ளும் இதன் தலைப்பு செய்திகள் யாவும் மூன்றாம் தரமாக இருக்கும்.கருத்துக்கு நன்றி ஜீவா.

      Delete
  5. பார்ப்பான், பார்ப்பான்னு அவனை ஏசுவதால் - அவன் இத்தகைய வேலைகளை செய்கிறான். அவன் பொய் பிராடு என்றால், பொதுமக்களின் ஆதரவு எப்படி கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  6. nalla pathuvu dhinamalarai purakanikka vendum athai naa seiyaa aarabiththu vitten matravargalum naattu nalanukkaaga naattu maakalin nalanukkaaka dinamalarai pura kanikka vendum

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி நண்பா..

      Delete
  7. நீங்கள் சொல்லுவது 100 வீதம் உண்மை.தமது கருத்துக்களை நாசுக்காக செய்திகளில் திணிப்பதில்
    மன்னர்கள்.

    கரிகாலன்

    www.karikaalan.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது சரிதான் நண்பரே.நன்றி

      Delete
  8. அநேகமாக தினமலர் தமிழர்களான அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி கொண்டே அவர்களிடமே வெற்றிகரமாக பத்திரிக்கை நடத்தி வருகிறது................ இதே செயலை ஆங்கிலத்தில் ஹிந்து பத்திரிக்கை செய்கிறது........... இவர்கலை நாம் பார்பனர்கள் என்று திட்டி கொண்டே நாம் அவர்களை ஆதரிக்கிறோம் ஏன் இந்த முரண்பாடு ?

    ReplyDelete
  9. அநேகமாக தினமலர் தமிழர்களான அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி கொண்டே அவர்களிடமே வெற்றிகரமாக பத்திரிக்கை நடத்தி வருகிறது................ இதே செயலை ஆங்கிலத்தில் ஹிந்து பத்திரிக்கை செய்கிறது........... இவர்கலை நாம் பார்பனர்கள் என்று திட்டி கொண்டே நாம் அவர்களை ஆதரிக்கிறோம் ஏன் இந்த முரண்பாடு ?

    ReplyDelete
    Replies
    1. இவைகள் என்றுமே தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கிடையாது.யாரையோ திருப்திப் படுத்த வேண்டிய சூழ்நிலையும் அவர்களிடமிருந்துக் கிடைக்கும் எச்சக்காசுக்காகவும் இவ்வாறு எழுத வேண்டிய கட்டாயம்.கருத்துக்கு நன்றி நண்பரே,

      Delete
  10. //செய்தியில் என்ன இருக்கிறது என்று கூட படிக்க நேரமிருக்காது இவர்களுக்கு.ஆனால் வாய்க்கூசும் அளவுக்கு கமென்ட்களை அங்கே வாந்தி எடுத்து விட்டு ஓடி ஒளிந்து விடும்//

    உண்மை சிங்கப்பூர் சொம்புகள் செய்யும் கூத்து அளவில் அடங்காது

    ReplyDelete
  11. சிங்கப்பூர் சொம்புகள்

    ReplyDelete