Friday, 2 November 2012

ஜாதிச் சண்டை மைதானமாகும் பேஸ்புக்...


கோதரி சின்மயி கொழுத்திப் போட்ட " so called thaazhthappaattavrkal " என்ற வெடியின் சப்தம் முழுவதும் அடங்குவதற்குள் இன்னொரு வெடி வெடித்திருக்கிறது.இந்த முறை கொழுத்திப் போட்டது 'கிஷோர் சாமி' என்ற முகநூல் நண்பர்.அம்மாவின் தீவிர அபிமானியான இவரின் பெரும்பாலான பதிவுகள் மம்மியை போற்றியோ அல்லது கலைஞர் குடும்பத்தை வசைபாடியோ இருக்கும்.

   சமீபத்தில் தேவர் குருபூஜைக்கு சென்றவர்கள் மீது ஒரு வன்முறை கும்பல் தாக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.இதன் பின்புலம் என்னவென்று இங்கு விளக்கத் தேவையில்லை.சமீப காலங்களாக இரு தரப்பு சாதியினர்களுக்கிடையே தோன்றிய வன்மங்களின் அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் தென் தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.சாதி ஒழியவேண்டும் என போராடிய தலைவர்களை தன் இனக்காவலனாக போற்றும் இவர்கள்,த
ன் தலைவன் போதித்த கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டதுதான் இவர்களின் மிகப்பெரிய சாதனை...!

பரமக்குடி கலவரத்திற்குப் பின் ஓரளவு அமைதியுடன் இருந்த தென் தமிழக பூமி தற்போது குருதி மழையால் கொதித்துக் கொண்டிக்கிருக்கிறது. கலவரத்தை
க் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்க,முகநூலில் சிலர் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் நிலைத் தகவல்களை பதிந்துள்ளனர்.

சமீபத்தில் நண்பர் கிஷோர் சாமி போட்ட நிலைத்தகவல் அப்படிப்பட்ட ஒன்றுதான்..ஒரு வன்முறைக்கும்பல் செய்த செயலுக்கு ஒட்டுமொத்த தாழ்த்தப்படவர்களையே இழிவுபடுத்துவதுபோல அமைந்துள்ளது அவரது நிலைத்தகவல்.

"  இதுங்களை குளிப்பாட்டி நடுக் கூடத்தில் வைத்தாலும்,தன் வேலையைத் தான் காட்டிடும்"

"  வெறிபிடித்த சொறிநாய்கள்,சிறு நீர் கழித்து அவைகளது எல்லையை குறிக்குமாம்,அதைப் போன்ற செயல் தான் இது"
   
வன்முறையைக் கண்டிக்க வேண்டியதுதான்.அதுவே வன்மமாக மாறிவிடும் அளவுக்கு இருக்கக் கூடாது. இதற்கு அவரின் நெருக்கிய நண்பர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.ஆனாலும் அவர் பதிவை நீக்கியதாகத் தெரியவில்லை.கடைசி
யில் விடுதலை சிறுத்தை அமைப்பினர் கமிஷனரிடன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.சாதி,இனம்,மொழி என்று எந்தவித இன பாகுபாடுமின்றி இணையம் மூலம் பரஸ்பர நட்பைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேஸ்புக்,டிவீட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே ஈழம் தொடர்பாக தனிமனித ஆபாசத் தாக்குதல்களால் நாறிப்போய் கிடக்கிறது.தற்போது நடக்கும் செயல்களை வைத்துப் பார்த்தால் இது ஒரு ஜாதிச் சண்டை மைதானமாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.


கிஷோர் சாமியின் நிலைத்தகவல் பற்றி கமிஷனரிடம் விடுதலை சிறுத்தைகள் அளித்த கம்ப்ளைன்ட்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ட பிக்காலிப் பயலுகளா..உங்க சாதி வெறிக்கு அளவே இல்லையா..விட்டா ராஜராஜசோழன் பெயரில் ஜாதிக்கட்சி ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க.ஆமா எங்கே ராஜராஜசோழ அய்யங்கார் போஸ்டரைக் காணோம்.ஒருவேளை 'அவா' கண்ணில் இது படவில்லையா..ச்சே...தெரிந்திருந்தால் இவரும் 'HIGH..YENKAAR' ஆகியிருப்பாரே...!!! 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

லகமே அன்பு சகோதரி சின்மயி-யின் (ஒரு வழியா பேரு வாயில் வந்திடுச்சுங்க...) துணிச்சலைப் பற்றியும்,அவரின் பொது அறிவைப் பற்றியும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்க,அப்படி என்னதான் எழுதுகிறார் என்று அவரின் டிவீட்டர் பக்கம் போய் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். பார்த்தவுடனேயே தலை சுற்றி போனது..!!!

"என்னது ...அன்பேசிவம் படம் சுந்தர்.C டைரக்ட் பண்ணினதா..?" என்று அதுவும்  குஷ்புவிடம் அவர் கேட்ட அந்த ஒரு கேள்வியிலேயே நான் கதிகலங்கிப் போனேன்.ஆத்தாடி.. இனிமேல் அந்தப்பக்கமே போகக் கூடாது..பாவம் குஷ்பு மேடம்(பப்ளிக்..பப்ளிக்...) எப்படி சங்கடப் பட்டிருப்பாங்களோ ...!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 நாங்கெல்லாம் அப்பவே ப்படி..!!!


ஆசிரியர்     :     நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ...?
மாணவன்  :     கல்யாணம் பண்ணுவேன்.

ஆசிரியர்     :    இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
மாணவன்  :    மாப்பிள்ளை ஆகுவேன்..

ஆசிரியர்     :    அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
மாணவன்  :    லவ் பண்ணுவேன்..

ஆசிரியர்     :   முட்டாள்..
முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
மாணவன்   :   நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.

ஆசிரியர்      :   அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்
ப்பாங்க..?
மாணவன்   :   பேரன் பேத்திகள்..

ஆசிரியர்      :   கடவுளே.... முடியில..!! உன் வாழ்க்கை
க் குறிக்கோள்தான் என்னடா..?
மாணவன்   :  நாம் இருவர்..நமக்கு இருவர்..

## ஹி..ஹி..நாங்கெல்லாம் அப்பவே
ப்படி..!!!வணக்கங்களுடன் ....
மணிமாறன்..

------------------------------------------------------(((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))------------------------------------- 

14 comments:

 1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 2. பரமக்குடி கலலவரத்திற்கு பின் மின் வெட்டு ப்ரச்னையால மக்கள் கவனம் கொஞ்சம் மாறியிருந்தது.இப்பம் அதுவும் பழகிப் போச்சு.அதனால திரும்பவும் ஆரம்பிச்சியிருக்காய்ங்க போல.(பேஸ்புக்ல இருப்பத)கண்டும் (நிஜத்தில் நடப்பதை)காணாமல் வாழ்க்கைய ஓட்ட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. இப்பெல்லாம் பேஸ்புக் பக்கம் போகவே பயமா இருக்கு பாஸ்.லைக் போட்டவங்களைக் கூட புடிக்குராங்கலாம்.

   Delete
 3. அப்பவே அப்படி - செம கலக்கல்...

  நன்றி...
  tm2

  ReplyDelete
 4. பாஸ் அப்பவேவா...அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. மாணவன் தெளிவாத்தான் இருக்கான்.

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..நன்றி நண்பரே..

   Delete
 6. நடக்கற விஷயங்கள பார்த்தா போற காலத்துல எதுவும் கருத்து கூட சொல்ல முடியாது போலேயே....

  ReplyDelete
  Replies
  1. 66A வை மாற்றி அமைத்தால் தான் உண்டு..நன்றி நண்பரே,,

   Delete
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாஸ்...ரொம்ப தாமதமாகத்தான் இதைப் பார்த்தேன்..நன்றி..

   Delete
 8. எவ்வளவு பிசகும் விடயத்தை சுவைப்பட நச்சினு கொடுத்திருக்கீங்க. பேஸ்புக்கில் சாதியம் ( இனவெறிக்குள் அடக்கம் ) குறித்து முறைப்பாடு செய்யலாம். அவரது கணக்கு முடக்கப்படும். ஒன்றிணைந்து புகார் செய்வோமாக.

  ReplyDelete