வருடக் கடைசியில் எல்லோரும் ' டாப் 10 ' போட்டுக் கலக்க,நம்ம லெவலுக்கு நம்மால் முடிந்த 2012 -க்கான விருதுகள்.
===========================================================================================
கடந்த ஆட்சியில் கலைஞருக்கு எதிராக முஷ்டியை முறுக்கி,காலை பரப்பி,தலையை சிலிப்பி வீராவேசமாக நீட்டி முழங்கிய தமிழ்நாட்டின் ஒரே செந்தம்ப்ளர் சீமானை கொஞ்ச நாளாகவே காணல.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்கா பேசியவரை யாரோ சைலண்ட் மோடில் போட்டுவிட்டதால் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
===========================================================================================
வீடுவரை உறவு.. வீதி வரை மனைவி... காடுவரை பிள்ளை.. கடைசிவரை மதிமுக..என நெஞ்சை நிமிர்த்திப் பாடிய நாஞ்சில் சம்பத்தை,விதி இன்னோவா ரூபத்தில் தாக்கி,இனி காலம் முழுவதும் மூங்கில் சொம்பத்தாக பர்பாமான்ஸ் பண்ணப் பணித்ததால் இந்த விருது.
' நம்ம இனத்துப் பெண்ணை எவன் காதலிச்சாலும் வெட்டுங்க...' என வடதமிழக மக்கள் அமைதியாக வாழ அறிவுரை சொன்ன பாமகவின் தலையாரி மோடுமுட்டி ச்சீ.. காடுவெட்டி குருவுக்கு இந்த விருது.
===========================================================================================
"எவனாயிருந்தாலும் வெட்டுவேன்..எவனாயிருந்தாலும் வெட்டுவேன்.."விருது.' நம்ம இனத்துப் பெண்ணை எவன் காதலிச்சாலும் வெட்டுங்க...' என வடதமிழக மக்கள் அமைதியாக வாழ அறிவுரை சொன்ன பாமகவின் தலையாரி மோடுமுட்டி ச்சீ.. காடுவெட்டி குருவுக்கு இந்த விருது.
===========================================================================================
' சம்முவம்... உட்ரா வண்டிய ' விருது.
ஊருக்குள்ள எது நடந்தாலும் அன்னைக்கு சாயந்திரமே அறச்சீற்றம் அடைந்து, ஏதாவது ஒரு டிவி ஸ்டேசனுக்கு வண்டிய உட்டு " நாம் என்ன மாதிரியான சமூக கலாச்சார கட்டமைப்பு உடைய சமுதாய சமதர்ம பொதுவெளியின் கலாச்சார மரபின் பின்னணியற்ற சமூகப் பண்பாட்டுப் பற்றிய பொதுப்புத்தி இல்லாத சமூகத்தில் வாழ்ந்தாலும் அதன் பின்புலம் என்னவென்றே அறியாத சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமது அடுத்த தலைமுறையின் கலாச்சார சமுதாய சமதர்ம........... " என ஓயாமல் வகுப்பெடுத்த எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு இந்த விருது.

" ட்வீட் போட்டா சின்னாத்தா.. எகிறி குதிச்சா மங்காத்தா..." விருது.
"நான் ஆபாசத்தின் சிறப்பு... பாயாசத்தின் பருப்பு.." போன்ற எழுச்சிமிக்க
சமூகப் புரட்சி பாடல்களைப் பாடி இளைய சமுதாயத்தை உசுப்பேற்றி, இணைய சுதந்திரத்தை காவு வாங்கிய கலியுக
காளிகாம்பாளுக்கு இந்த விருது.
===========================================================================================
"அது போன மாசம்..இது இந்த மாசம்" விருது...
கூடங்குளம் அணு மின் சக்தியைவிட இவர் விடும் அறிக்கை பலமடங்கு பீதியைக் கிளப்பக் கூடியது." இன்னும் பதினைந்து நாளில்..." என ஓவ்வொரு மாதமும் தன் ஏழாம் அறிவின் மூலம் கணித்து இவர் அடிக்கும் பன்ச் டயலாக் சமகால தமிழ் சினிமா கூட கண்டிராது.எவர் தடுத்தாலும் ஏர்போர்ட் வாசலில் உளரும் உன்னத கொள்கையைக் கைவிடாத ஓட்டவாய் நாராயணசாமிக்கு இந்த விருது.
===========================================================================================
"ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்குனும்டா." விருது.
கடந்த ஆட்சிக்காலத்தில்,கூட்டணியில் இருந்தாலும் திமுகவை வம்படியாக இழுத்து கழுவிக் கழுவி ஊத்தி அவர்களின் பொறுமையின் எல்லைக்கே சென்று எள்ளி நகையாடிவர்...அடுத்தப் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது பம்முவதால் இந்த விருது.
கடந்த ஆட்சிக்காலத்தில்,கூட்டணியில் இருந்தாலும் திமுகவை வம்படியாக இழுத்து கழுவிக் கழுவி ஊத்தி அவர்களின் பொறுமையின் எல்லைக்கே சென்று எள்ளி நகையாடிவர்...அடுத்தப் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது பம்முவதால் இந்த விருது.
===========================================================================================
"மல்டிபிள் டிஸ்ஆர்டர் பர்சனாலிட்டி.." விருது..
' பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியோருவோம்' என மூக்கு புடைத்தவர் அடுத்த இரண்டு மணிநேரத்தில் 'நான் அப்படி சொல்லவே இல்லை' என்பதில் தொடங்கி,'கலாம் என்றால் கலகம் என்று பொருள்....','டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரப்படாது...','வால் மார்ட்டுக்கு மாநிலத்தில் எதிர்ப்பு ஆனால் மத்தியில் ஆதரவு' என இந்த வருட இறுதி வரை அந்தர்பல்டி அடித்து இந்த ஆண்டுக்கான "மல்டிபிள் டிஸ்ஆர்டர் பர்சனாலிட்டி.."க்கான விருதை போட்டியின்றித் தட்டிச்செல்கிறார் தலைவர்.

" ஒரு கல் ஒரு களவாணி.." விருது...
மதுரையில் வெற்றிக்கொடிகட்டிய ரியல் படையப்பாவின் கிரானைட் குவாரியைத் தோண்ட தோண்ட கிளம்பிய மோசடி பூதத்தால்,' படையப்பா.... ஜெயிலுக்கு நடையப்பா' ஆனாதால் இந்த விருது.
===========================================================================================
' டெங்கு கொசு ' விருது.
கடந்த கால சாதிய வன்முறைகளையும் பகையுணர்வையும் மறந்து சகோதர மனப்பான்மையுடன் பழகும் இரண்டு சமூகத்தினரிடையே மீண்டும் சாதிவெறியைத்தூண்டி அந்தத்தீயில் அரசியல் குளிர் காயத்துடிக்கும் தமிழ்க்குடி தாங்கி(!?) அய்யாவுக்கு இந்த விருது.சாதிக்கு எதிராக(?!) இவர் விட்ட ஒவ்வொரு அறிக்கையும் டெங்கு காய்ச்சலைவிட கொடூரப் பீதியைக் கிளப்பியதுடன் "இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியில நாராயணா.." என மக்கள் புலம்புவதாலும் இந்த வருடத்திற்கான ' டெங்கு கொசு ' விருது ஐயாவுக்கு அளிக்கப்படுகிறது.

" காதலை சிதைப்பது எப்படி...? " விருது.
80-90 களில் வந்த தமிழ் சினிமா வில்லன்களை அப்படியே அச்சு அசலாக நம் கண் முன் நிறுத்தினால் எப்படியிருக்கும்..? காதலுக்கு எதிராக இவர்கள் கடைசியாகக் கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசு "தமிழர் பண்பாட்டில் காதலே இல்லை" . போகுற போக்கைப் பார்த்தால் "காதல்" என்ற சொல்லை தமிழ் அகராதியிலிருந்தே நீக்கவேண்டும் என போராட்டம் நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இந்த விருதை இருவரும் பகிர்ந்துக் கொள்கிறார்கள்....

" ஒஸ்தி " விருது.
தருமபுரி சம்பவத்தால் வடதமிழக மக்களுக்கிடையே கலவர பீதி தொற்றியுள்ள சிக்கலான சூழலில்,எரியிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல் ஊர் ஊராகச் சென்று தலித்துகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசித் தன் சமூகத்தினரிடையே சாதிய வன்மத்தை உருவாக்கும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டிருந்தாலும்,எக்காரணம் கொண்டும் தன் பின்னால் உள்ள இளைஞர்கள் சாதிய வன்மம் கொண்டுவிடக் கூடாது என்ற நோக்கில் மிகவும் பக்குவமாகவும்,வார்த்தைகளை கவனமாகவும் பேசும் திருமாவுக்கு இந்த விருது.

"ஆத்தா அண்டா வாங்கினா..குண்டா வாங்கினா..ஆத்துக்கு ஒரு 'சொம்பு' வாங்கல...அதுக்குப் பதிலாத்தானே..." விருது.
இந்த விருதுக்கு கடுமையானப் போட்டி இருந்த நிலையில் சொம்பு தூக்கிய விதத்திலும் அதிலுள்ள சாராம்ச சமாச்சார விகிதத்தையும் கணக்கில் கொண்டு மூன்று பேருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.நூலிழையில் இந்த விருதைத் தவறவிட்டவர் மூங்கில் சொம்பத்.. :-((
===========================================================================================
' சாருலதா ' விருது.
"சாட்டையை சுழற்றிவிட்டார் அம்மா..உயிர்த்தோழிக்கு வைத்துவிட்டார் உலை.தோட்டத்தை விட்டே துரத்தப்பட்டது மன்னார்குடி மாபியா கும்பல்.." என ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகத் தாண்டவமாடி இனிப்புப் பரிமாறிக் கொண்ட சந்தோசம் கொஞ்ச நாட்கள் கூட நீடிக்கவில்லை.வழக்கம் போலவே இதுவும் " சும்மா லுலுலா.."தான் என நிருபித்த உயிர்த்தோழிகளுக்கு இந்த விருது.
===========================================================================================
"அழகிரிசாமியின் குதிரை..." விருது.
வழக்குகளுக்கு அஞ்சி அப்பா எட்டடி பாய்ந்தால் மகன் எண்பது அடி பாய வேண்டாமா..? அஞ்சாநெஞ்சனின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு மதுரையில் குட்டி ராஜ்ஜியமே நடத்திய இந்த சின்ன பி.ஆர்.பி, ''விண்ணைத்தாண்டி' ஒளிந்தது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த 'தமிழ்படம்' .===========================================================================================
" ஊத்திக்கினு கடிச்சிக்கவா...கடிச்சிக்கனு ஊத்திக்கவா.." விருது.
வருட ஆரம்பத்திலேயே சட்டமன்றத்தில் பதினெட்டுப் பட்டி ஜனங்கள் முன்னிலையில், கண்கள் சிவக்க நாக்கு மேல பல்லைப்போட்டு கடிச்ச இந்த சக்கரைக் கவுண்டர்," நீயாட சம்பளம் கொடுக்கிற... ங்கொயால.." என்று ஏர்போட்டில் முஷ்டியை முறுக்கிய சம்பவங்கள் வரை கேப்டன் எப்போ எந்த மூடில்(?!) இருப்பார் என அவருக்கே தெரியாததால் இந்த விருது.

" இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே.."விருது.
செம காமெடியான பதிவு என நினைத்துக்கொண்டு இந்த வருடத்தில் எழுதிய எல்லா பதிவுகளும் கடைசியில் படு மொக்கையானதால்,இந்த விருதை போட்டியின்றித் தட்டிச்செல்பவர் நானேதான்...!

வணக்கங்களுடன்...
மணிமாறன்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!