Wednesday 19 December 2012

உங்கள் பன் டிவி வழங்கும் உலக அழிவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்( நம்ம பங்குக்கு ஏதாவது பீதியைக் கிளப்ப வேண்டாமா...?)

ங்கள் பன் டிவியில்..... 21-12-12  அன்று உலக அழிவு தினத்தை முன்னிட்டு பன் டிவி வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்...

காலை 6 மணிக்கு...

"அமங்கல இசை"...வழங்குபவர்கள்  சாவு மேளம் சாமிக்கண்ணு ,கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம், தீச்சட்டி கோவிந்தன்,சங்கு சண்முகம் குழுவினர்.

காலை 7 மணிக்கு..

"சாவைக் கண்டு பயமேன் .." பூந்தி பயேந்திரர் சாமிகள் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு. 

காலை 8 மணிக்கு..

'' உலகம் அழியுமா'' 15 நாள் டைம் கொடுப்பாங்களா? பிரபல ஜோதிடர் கூடன்குளம் நாராயணசாமி தனது ஏழாம் அறிவு மூலமாக கணிக்கிறார்.

காலை 9.30 மணிக்கு...

"மண்டையை போட்ட பின்பு... மண்ணில் புதைப்பது சிறந்ததா..மண்ணெண்ணையை ஊற்றி எரிப்பது சிறந்ததா.." பேராசிரியர் வாளமீன் ஆப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம்.


காலை 11 மணிக்கு...

"செத்து செத்து விளையாடுவோம் வாங்க..." நடிகர் முத்துக்காளை தொகுத்து வழங்கும் மாறுபட்ட கேம் ஷோ.....மலைஉச்சி,பாழுங்கிணறு,ரயில் தண்டவாளம்  இங்கெல்லாம் அழைத்துச்சென்று, நைசாக பின்னால் இருந்து தள்ளி விட்டு விளையாடும் புத்தம் புது நிகழ்ச்சி.   


நண்பகல் 12.00 மணிக்கு...

"உன்னையே  நீ எண்ணிப் பாரு.."  பாடல் உருவான விதம் பற்றி இயக்குனர் பீலா உங்களை  சுடுகாட்டுக்கே அழைத்துச் சென்று விளக்குகிறார்.

பிற்பகல் 1 மணிக்கு...

"ஒப்பாரி வைக்கலாம் வாங்க..."  தனியாக ஒப்பாரி வைப்பது எப்படி..? சொந்தங்களுடன் ஒப்பாரி வைப்பது எப்படி..?,ஊர் கூடி ஒப்பாரி வைப்பது எப்படி..? என்பதைப்பற்றி எழவு விழுந்த வீட்டுக்கே சென்று ஒப்பாரி வைத்துக் காட்டுகிறார் தேனி குஞ்சம்மாள்.

பிற்பகல் 1.30 மணிக்கு...

'' பேய் புடிக்கலாம் வாங்க '' கண்னம்மா பேட்டையில் தூங்கி
க் கொண்டிருப்பவர்களுடன் ஆவி அமுதா பங்கு பெரும் கலகலப்பான நிகழ்ச்சி .

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை...


" பியுசைப் புடுங்குவோம் நாங்க.. "

தமிழ் நாடு அரசு மற்றும் நாத்தம் புஸ்வனாதன் கு
ழுவினர் வழங்கும் ''பவர்கட்''. தமிழ்நாட்டின் சம்பிரதாய, பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி .

மாலை 6 மணிக்கு...


இந்திய
த் தொலைகாட்சி வர‌லாற்றில் முதல் முறையாக திரைக்கு வருமா என்று கூடத் தெரியாத அகில உலக பவர் ஸ்டார் நடித்த 'மாணவன்' திரைப்படம்.

அழிவு தினத்தில் எஞ்சியிருக்கிற ஒரு சில பேரும் இந்தப்படத்தைக் கண்டு சாவத்தவறாதீர்கள்.


இரவு 11 மணிக்கு ...

அகில அண்டத் தொலைக்கட்சியில் கடைசி முறையாக,பன் டிவி கடைசியாக வழங்கும் " பாசக்கயிறு..." .
எமதர்மன் எருமையுடன் வந்து தன் பாசக்கயிறால் எல்லோரையும் கட்டியிழுக்கும் தத்ரூபக் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகும்.....

நேயர்களே 21-12-12 அன்று உலக அழிவை முன்னிட்டு உங்கள் பன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை அனைத்தையும் கண்டு களியுங்கள்....சாவு பண்டிகையை குடும்பத்துடன் ஆனந்தமாய் கொண்டாடுங்கள்...

-----------------------------------------((((((((((((((((((()))))))))))))))))))))))))))))------------------------------------------------------

11 comments:

 1. உண்மையில் சிரித்து சிரித்து ரசித்து படித்தேன்...

  ReplyDelete
 2. Replies

  1. மிக்க நன்றி...உங்கள் வலைப்பூ ஜம்ப் ஆகி ஓடுகிறது.படிக்க முடிவதில்லை..

   Delete
 3. பான் டிவியின் கடைசி தின நிகழ்ச்சி நிரல சூப்பர் மணிமாறன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே......

   Delete
 4. பாஸ் செம கலக்கல் - இதை முக நூலில் வாசித்தேன் - உங்கள் படைப்பா...பாராட்டுக்கள் நல்லாவே ஜிந்திக்கிரீங்க

  ReplyDelete
 5. இவ்வளவு நாள் கழிச்சி இப்பதான் படிச்சேன். சூப்பர்.

  ReplyDelete