Sunday 16 December 2012

இளையராஜா கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசும், 'புல்ஷிட் புல்டாக்கு' என்கிற சமூக விளையாட்டும்.


மீபத்தில் குமுதம் வார இதழில் ராகதேவன் இசைஞானி அவர்களின் பேட்டி வெளியாகியிருந்தது.மனதில் பட்டதை எந்தவித ஒளிமறைவின்றி,தைரியமாக ' நறுக்' கென்று சொல்வதில் அவருக்கு நிகர் அவரே..! அவரின் மேடைப்பேச்சுகள் பலமுறை பலரை சங்கடப்படுத்தியிருக்கிறது.அதற்காகவே பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதைத் தவிர்க்கிறேன் என்று கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார். சமீபத்தியப் பேட்டியில் கூட அப்படியொரு அதிர்ச்சிப் பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

தற்கால வாழ்க்கை முறையில் தாங்கள் வெறுக்கும் விஷயம் எது ..?  என்றகேள்விக்கு அவர் அளித்த பதில் ..

"என் பிறப்பு..."


இதை எப்படி எடுத்துக் கொள்வது..? இசைக்காவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.இந்திய அளவில் திரைத்துறையில் இசைச் சக்ரவர்த்தியாகக் கோலேச்சியவர்.இனம்,ஜாதி,மொழி கடந்து தன் இசையால் ரசிகர்களை கிறங்கடித்தவர்.இப்படி நீண்டு கொண்டே செல்லும் சாதனைகளை,எந்தவித அடிப்படை இசையறிவும்,இசைப் பாரம்பரிய பின்புலமும் இல்லாத ஒருவர் நிகழ்த்தியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல.அப்படிப்பட்ட ஒருவரை சமூக ரீதியாகத் தனிமைப் படுத்திப்பார்ப்பது சரியில்லைதான்.சாதீய ரீதியாக அடையாளப் படுத்துவதும் முறையில்லைதான்.அதற்காக தன் பிறப்பையே வெறுக்கும் அளவுக்கு அவரைக் காயப்படுத்தியது எது..?

தலித் முரசு என்ற இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும்,மிகச்சிறந்த மக்கள் பாடகரும்,புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும்,பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன், இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார்.அந்தத் தொடரை  "இசைமொழியும் இளையராஜாவும்" என்ற தலைப்பில் புத்தமாக வெளியிட்டபோது,இசைக்கு வெளியே சென்று இளையராஜாவைப் பற்றி கடுமையான விமர்சனங்களை அதன் இறுதிப் பாகத்தில் வைத்திருந்தார்.

' இளையராஜா தலித் என்னும் தன் அடையாளத்தை மாற்றவும் சிதைக்கவும் முற்படுகிறார். எனினும் இளையராஜா போல் தலித் அடையாளத்தை அனைவரும் மாற்றிக்கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ மறுதலித்துக் கொள்ளவோ தயாராக இல்லை ' என்று கே.ஏ.குணசேகரன் எழுதியிருந்தார்.இதற்கு மறுப்பு அறிக்கையோ,விளக்கமோ தராமல் அவர் மீது வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.கடைசியில் அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதாக அறிந்தேன்.அதைத் தொடர்ந்து தன் சமூகத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இளையராஜா என்ன செய்தார் என்ற ரீதியிலும் அப்போது விமர்சனங்கள் எழுந்தது.  

தலித் மக்களுக்கு எதிராக தன்னை 'ஆண்ட சாதிகள்' என சொல்லிக்கொண்டு சில ஆதிக்கசாதி அமைப்புகள் ஒன்றுதிரண்டுள்ள இந்த வேளையில் இளையராஜாவின் இந்த பதில்,சாதி வெறியர்களால் சிதை மூட்டப்பட்ட தலித் இன மக்களின் இதயத்தில் சீமெண்ணெயை ஊற்றுவது போல் இல்லையா..? 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
      மக்கெல்லாம் வயதாகிவிட்டது என்பதை இந்த நடிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.இந்த இரண்டு படத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம் கூட கிடையாது.கம்பீரம் படத்தில் நம்ம சித்தப்புவுக்கு மகளாக  நடித்த அதே பெண்தான்,இப்படி வளர்ந்து தயாராக நிற்கிறது திரைக்கு முன் 'திறமை' காட்ட...!!!.அம்மணி ஒரு படத்தில் ஹீரோயினா நடிக்கிராங்களாம்.அது சரி... இந்த ஸ்கூல், காலேஜ்,படிப்பு இப்படி மேற்படி விசயங்கள் இருப்பது இதுங்கள பெத்தவுங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா..? எப்படியோ சித்தப்புவுக்கே ஹீரோயினாகி,பிற்பாடு அக்காவாகி,அப்புறம் அம்மாவாகி கடைசியில ஏதோ ஆகி கலைச்சேவைப் புரிய வாழ்த்துக்கள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ப்ளிங்,கஞ்சன் ஜங்கா,ஜலபுல ஜங்க்ஸ்,ஸ்பூன்லிங்,டிக்கிலோனா இப்படிப்பட்ட சர்வதேச 'சமூக நல்லிணக்க' விளையாட்டுகளை நீங்க பார்த்திருப்பீங்க.சில பேர் விளையாடவும் செஞ்சிருப்பீங்க.ஆனால் இதைப் பார்த்திருக்கமாட்டீங்க..


இது என்ன புது விளையாட்டு என யோசிக்காதீங்க.இதுக்குப் பேருதான் 'புல்ஷிட் புல்டாக்கு'.அதாவது மூணு மாசம் குளிப்பாட்டாத,எழும்பும் தோலுமா உள்ள ஒரு பசு மாட்டை,தெரு முச்சந்தியில கட்டி வச்சி அதுக்கு கீழால மூணு தடவை புகுந்து புகுந்து வரணும்.அப்படியே அது போடுற சாணியையும்,மூ.......யும் எடுத்துட்டு போயி உங்க வீட்டு வாசலில தெளிச்சு வச்சீங்கனா,மூனே வருசத்தில உங்கள் தோஷமெல்லாம் நீங்கி, செல்வம் பெருகிப்பெருகி........கடைசில ரிலையன்ஸ் ஓனர்  வீட்டிலே அலையன்ஸ் பார்க்கிற அளவுக்கு ஒசந்துடுவீங்களாம்...

அடேய் ..பல வருசமா எங்க ஊர்ல சாணி அள்ளுற பேச்சியம்மாவும்,முனியம்மாவும் இப்படித்தான் ஒரு நாளைக்கு பத்து தடவை புகுந்து புகுந்து போறாங்க.எங்க ஊரு பால்பாண்டி அண்ணன் அந்தப்பக்கமும்
ந்தப்பக்கமும் புகுந்து போயிதான் தினமும் பால் கறக்கிறாரு.அப்படிப்பாத்தா இந்நேரம் அவுங்க பில்கேட்சோடு உட்கார்ந்து பிரேக்பாஸ்ட் அல்லவா சாப்பிட்டிருக்கணும்..? உங்களை எத்தனை பெ............. ம்ஹும்... முடியவே முடியாது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
  
இந்த வாரம் வலைச்சரத்தில் என் தளத்தைப்பற்றி நண்பர் NKS.ஹாஜா மைதீன் குறிப்பிட்டிருக்கிறார்.இதற்கு முன்பு திரு பாலா அவர்களும்,முரளிதரன் அவர்களும் குறிப்பிட்டிருந்தனர்.எனக்குக் கிடைத்த பாலோயர்களில் சிலர் வலைச்சரம் மூலம் கிடைத்தவர்களே.அந்த வகையில் என் தளத்தைக் குறிப்பிட்ட நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரிலாக்ஸ் ப்ளீஸ்...


-------------------------x ------------------------

இது கேப்டனின் மங்காத்தா...A Captain Game...!!!வணக்கங்களுடன் ...
மணிமாறன்.

---------------------------------------------------------------------((((((((((((((()))))))))))))))))))))------------------------------------------

16 comments:

 1. //அதைத் தொடர்ந்து தன் சமூகத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இளையராஜா என்ன செய்தார் என்ற ரீதியிலும் அப்போது விமர்சனங்கள் எழுந்தது.//
  எல்லா சாதியினரையும் தன் இசைக்கு அடிமைப்படுத்தி வைத்திருப்பதே ஒரு சாதனைதான்

  ReplyDelete
 2. இது இசைக்கு அப்பால் எழுப்பப்பட்ட விமர்சனமாக இருந்திருக்கலாம்.

  இளையராஜாவை சாதீய வட்டத்துக்குள் கொண்டுவருவது மிகத்தவறான செயல் என்பதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.இன்னமும் சில பகுதிகளில் அடிமையாக நடத்தப்படும் ஒரு சமூகத்தில் பிறந்தது பெருமை என்று சொல்ல வேண்டாம்.குறைந்த பட்சம் அதைப் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம்.இந்தக் கேள்விக்கு இப்படியொரு பதில் சொல்லியிருக்க வேண்டாமே..

  ReplyDelete
 3. சாதிகளை கடந்ததே சங்கீதம்.

  ReplyDelete
 4. மணிமாறன்,

  இளையராஜா சொன்னது மெய்யியல்,இறையியல் சித்தாந்தத்தின் அடிப்படையில், மனித பிறப்பை இழிவானதாக எண்ணி , தெய்வீக நிலையை அடைய வேண்டும் , பிறப்பில்லா பெருவாழ்வு அதுவே மோட்சம் என பல சமய வல்லுனர்கள் எழுதியுள்ளார்கள்.

  நாயினும் கடையேன், குப்பையாக தோன்றியவன் என்றெல்லாம் பல இடங்களில் தங்களையே சொல்லிக்கொண்ட ஆன்மிக அறிஞர்கள் உண்டு.

  சாக்ரட்டீஸ் 2400 ஆண்டுகளுக்கு முன்னரே "மனிதனின் வீழ்ச்சியே உலகில் பிறப்பது,மனிதன் செய்த தவறுகளால், மேல் உலகில் இருந்து பூமிக்கு பிறக்க சபிக்கப்படுகிறான், இறப்புக்கு பின் அவனது பூர்வீக வாழ்விடம் மேல் உலகிற்கு செல்கிறான்" என்று தான் சொல்லியுள்ளார்.

  அருணகிரி,பட்டினத்தார் ,வள்ளலார் பாடல்களில் இது போல மானிட பிறப்பை இழிவாக கருதி ,வெறுக்கும் பாடல்கள் நிறைய காணலாம்.

  இது போன்ற இறையியல் தத்துவத்தினால் உந்தப்பட்டே ராஜா, இப்பிறப்பை வெறுப்பதாக சொல்லியிருக்க வேண்டும், நீங்கள் சொன்னது போல தொடர்பு படுத்துவது குறுக்குசால் ஓட்டுவதாகும்,

  ஹி...ஹி இதுவே ஒரு மேட்டுக்குடி மனிதர் சொல்லி இருந்தால், அது ஆன்மீக தத்துவம் என்று புரிந்துகொண்டிருப்பீர்களாக்கும் :-))

  ReplyDelete
  Replies


  1. வருகைக்கு நன்றி வவ்வால்.இதை எப்படி எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வியைத்தான் ஆரம்பத்திலே கேட்டிருக்கிறேன்.அவரின் இந்தப்பதிலுக்கு குமுதத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய, தமிழில் குறிப்பிடும்படியான அந்த கார்டூனிஸ்ட் தன் முகப்புத்தகத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்து இவ்வாறு எழுதியிருந்தார் .

   " தன் இசையால் உலகையே வசியம் செய்த ஒரு மாபெரும் இசைக்கலைஞன், தன் பிறப்பையே வெறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறான் என்றால், இந்தச் சாதி சூழ் உலகு எந்தளவுக்கு அவனை அவமானப்படுத்தியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.. அந்த அவமானங்களை உங்களால் உணர முடிகிறதா நண்பர்களே.. "

   அவருக்கான பதில்தான் இது.மற்றபடி குறுக்குசால் ஓட்டுவது என் இயல்பல்ல.

   Delete
  2. நன்றி நண்பரே..

   Delete
 5. கடைசி மேட்டர் சூப்பர்...

  ReplyDelete
 6. இளையராஜா அவர்கள் பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்ததாக ஒரு செய்தி உண்டு.ஒரு சமயம் அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் சொன்னாரோ என்னவோ?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் யுகம் கூட சரியாக இருக்கலாம்,..நன்றி நண்பரே...

   Delete
 7. Replies
  1. நன்றி கும்மாச்சி ...

   Delete
 8. இசை ஞானி தன்னை ஒரு தமிழனாக மட்டும் அடையாளப் படுத்திக் கொண்டிருந்தால் இந்த அளவு மன விரக்திக்கு ஆளாகி இருக்கமாட்டார். மாறாக தன்னை ஒரு முழு இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டதே அவர் செய்த மிகப் பெரிய தவறு எனலாம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக ..ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரி...

   Delete
 9. Mr.Mani, Illayaraja patri ivalo arindhu vaithirukum neengal, avar aanmeegathil migavum naatamullavar enpathai kandipaaga arindhirupeer..aanmeegathil naatamirukum anaivarume pirappu iladha maranathaiye virumbuvaargal..oru piraviyil naam seyyum paavangale namaku adutha piravi eduka kaaranam aagiradhu..adhanaal dhan thuravigal, aanmeegathil naatam ulla anaivarume piravi paavangalai pookki adhutha piravi ilamal iruka venduvaargal..avarkalai poruthavarai pirappu enapathe namudaya murpiravi paavangalukaaga kadavul kudukum oru dhandanayai pola..

  ilayaraja..en pirapu enaku pidavillai enra pathilum indha ennathileye koori irukiraar..aanal ela karuthayum jaathi paarvayileye paarkum ungalai pola sila per avar pathilai purindhu kollamal..ipadi vimarsanam ezhugureer..enudaya pirappu endru sonnare thavira..enoudaya jaathiyil pirandhadhu enru sollavillai avar..

  oru siriya gramathil irundhu kadum paadu paatu indru ivalavu periya idathil irukum oruvarudaya thiramayai potri puzhaga villai endraalum kuda parava ila..aanal avarai pondra manidharakalai patri ipadi vimarsanam seyaadheergal..udane naanum avarudaya jaathi adhanal avaruku paridhuraikiren nu maru vimarsanam seyaa vendam..

  ReplyDelete