Wednesday 2 January 2013

என்னாச்சி...!?!?!?!?!?.

 
ஒருவேளை நம்ம விஐபி-க்கெல்லாம் 'medulla oblongata '-ல அடிபட்டிருந்தா என்ன ஆயிருக்கும்..!?!?!?!?!?.

======================================================================================
 " என்னாச்சி....!?!?!?!?!?.

சரக்கு அடிச்சோம்.நீதானடா நாயே மிக்ஸ் பண்ணின...திடீர்னு என் பையன் வந்தான்.நான் புதுசா நடிக்கபோற படத்தில உள்ள ஸீன இப்ப நடிச்சி காண்பிக்கபோறேன்னு சொன்னான்.நான் மிரண்டு போயி பின்னாடியே போனேன்.அவன் சட்டையை கழட்டி,கையை விரிச்சி ஏய்....னு ஒரு சவுண்டு விட்டான். நான் அப்படியே பயந்து போயி மல்லாக்க விழுந்தேன்... ஓகே..ஓகே...இங்க அடிபட்டிருக்கும். இங்கதானே மெடுல்லா ஆம்லேட் இருக்கு...."

"அண்ணே.. அது மெடுல்லா ஆம்லேட் இல்ல..மெடுல்லா ஆப்லோங்கட்டா..எங்கே திரும்ப சொல்லுங்க.."

"டேய் ...அத
மெடுல்லா ஆம்லேட்-னும் சொல்லலாம்.நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்.டாக்டர் சொல்ற மாதிரியும் சொல்லலாம்.ஆமா ..என்னாச்சி...!?!?!?!?!?."

======================================================================================

" என்னாச்சி....!?!?!?!?!?.

 உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிகிட்டு இருந்தேன்..திடீர்னு போன் வந்திச்சி...நீதான எடுத்த..எதிர் முனையில சிதம்பரம் பேசினாரு.FDI க்கு ஆதரவு தரலைனா.. கனி..களி..ஸ்பெக்ட்ரம்..திகார்.. அப்புறம் உங்க இஷ்டம்ன்னாரு.

அப்புறம் ஸ்டாலின் பேசினான்.FDI க்கு ஆதரவு தரக்கூடாதுன்னு சொன்னான்.

அப்புறம் கனி கிட்டேயிருந்து போன் வந்தது.FDI க்கு ஆதரவுனு அறிக்கை விடுங்கப்பா. என்னாலெல்லாம் திரும்ப திகார் போகமுடியாதுன்னு சொல்லிச்சு.

பிறகு கலாநிதிமாறன் கிட்டேருந்து போன் வந்தது.FDI க்கு ஆதரவு கொடுக்காதீங்க.செல்வாக்கு சரிஞ்சிடும்னு சொன்னான்.

அப்பறம் அழகிரிகிட்டேருந்து போன் வந்தது.மத்திய அரசை பகைச்சிக்க வேணாம்..என் மந்திரி பதவி போச்சுனா அடுத்த நாளே இந்த ஜெயலலிதா தூக்கி உள்ளே வச்சுடும்.பேசாம FDI க்கு ஆதரவுனு சொல்லிடுங்கனு சொன்னான்.

குழம்பிபோயி அப்படியே பின்னாடி சாய்ந்தேனா....ஓ..இங்க அடிபட்டிருக்கும்.இங்கதான் 'மூளையின் பின்கூறு' இருக்கிறது.அது ஒன்னும் பிரச்சனையில்ல..மானாட மயிலாட பார்த்தால் தானா சரியாகிடும். ஆமா..என்னாச்சி...!?!?!?!?!?." 

======================================================================================
" என்னாச்சி...!?!?!?!?!?

மௌன விரதத்தில இருந்தேன் ( ம்க்கும்...இல்லனா மட்டும்..?! ). ஸ்பெக்ட்ரம் ஊழல்...நிலக்கரி சுரங்கம் ஊழல்ன்னு கத்துனாங்க..வாயத் தொறக்கல...,


ஈழத்திலே ஒரு இனமே அழிக்கப்படுதுனு கதறினாங்க..அப்பவும் வாயத் தொறக்கல..

கருப்பு பணம்,சுவிஸ் பேங்க்னு போராட்டம் நடத்தினாங்க..மூச்சு விடல...

கூடங்குளம் போராட்டம்,தெலுங்கானா போராட்டமெல்லாம் நடத்தினாங்க. ஹைய்யோ...ஹைய்யோனு மனுசுக்குள்ளே சிரிச்சிகிட்டேன்.

அப்புறம் டில்லி மாணவி பலாத்காரம்னு போராட்டம் நடத்தினாங்க.சரி கொஞ்சம் பேசலாம்னு வாயத்தொறந்தேனா... அப்படியே கீழே விழுந்துட்டேன்....ஆமா ..என்னாச்சி..."

"டாக்டர்..இவருக்கு ஏன் இப்படி ஆச்சி..? "

" ரொம்ப வருசமாவே வாயத்திறக்காம திடீர்னு தொறந்ததால,முகத்தில் உள்ள செல்களுக்கு ரத்தம் ஓட்டம் அதிகமாகி அது பின் மண்டையிலுள்ள மெடுல்லா ஆப்லோங்கட்டாவை கடுமையா தாக்கியிருக்கு.அதனால இவருக்கு ' ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் ' ஆகிடிச்சு.அதனாலதான் இப்படி பேசுறாரு...
அது ஒன்னும் பிரச்சனையில்ல..ட்ரீட்மென்ட் எடுத்தா பழயபடி பேசாம செஞ்சிடலாம்.."

" வேணாம் டாக்டர்.ஏதோ இப்ப பேசவாவது செய்யிறாரே...! இப்படியே விட்டுடுங்க.. !"

======================================================================================
 " என்ட்ராச்சி...

பஞ்சாயத்து கூடிச்சி..எல்லாரும் கும்பிடு போட்டானுக.கணக்கு சொம்பை நீட்டினான்.நான் புளிச்சி புளிச்சினு துப்பினேன்.ஆங்...தீர்ப்பு சொன்னேனா...


தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும்.நாம பொறந்த வவுறு வேணும்னா ஒண்ணா இருக்கலாம்.ஆனா ரெண்டு பேருக்கும் வெவ்வேறு வவுறு தானடா..  சொந்த பந்தங்களை எல்லாம் சோத்து பானைக்குள்ள வச்சிடனும்டா...ஒறவுன்னு ஒருத்தன உட்டுப்போட்டா பொறவு நாயம் உருப்டி இல்லாமப் போயிடும்டா....

டீச்சரை கொன்னது என்ட்ர தம்பி இல்லடா...என்ட்ர தம்பி பசுபதி உத்தமண்டா...மானஸ்தன்டா...என்ட்ர வம்சம் ஆணை கட்டி போரடிச்ச வம்சமடா...என்ட்ர தம்பி பசுபதி குத்தவாளி இல்லடா...ஞாயம் செத்துப் போச்சுடா...நீதி அத்துப் போச்சுடா... இன்னையிலேயிலேருந்து  பதினெட்டு வருஷம் உன்னை ஊரைவிட்டு தள்ளி வக்கிறேன்டா..உங்கூட யாரும் அன்னந்தண்ணி பழகக் கூடாது.அப்படி மீறி பழகுனா அவுங்களையும் தள்ளி வைக்கிறேன்டா...இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு. சொல்லிப்போட்டன் ஆமா..

ஆமா என்ட்ராச்சி.."(இவரோட தம்பிக்கு தப்பான தீர்ப்பு சொல்லிட்டாருனு அந்த வெள்ளைப் பொடவை கட்ன ஆத்தா சொல்லி போட்டதால, அப்போ வண்டியில சாய்ஞ்சவருதான்.மெடுல்லா ஆப்லோங்கட்டாவில அடிபட்டு இதையே திருப்பி திருப்பி சொல்லி,கடைசில ஊருல ஒருத்தர் விடாம எல்லோரையும் தள்ளி வச்சிட்டாரு  நாட்டமை..) 
   


------------------------------------------------((((((((((((((((())))))))))))))))))))))))))-----------------------------------

22 comments:

 1. என்னாச்சி....???
  மன் மோகம் என்னாச்சி :P

  ReplyDelete
 2. அட சும்மா சொல்லுப்பா என்னாச்சி அது தான் கேக்குறோமில்ல

  ReplyDelete
  Replies
  1. சொல்லுங்க பாஸ்... ஆமா என்னாச்சி..?

   Delete
 3. Super comedy post..I enjoyed it..thanks for the post..

  ReplyDelete
 4. //ரொம்ப வருசமாவே வாயத்திறக்காம திடீர்னு தொறந்ததால,முகத்தில் உள்ள செல்களுக்கு ரத்தம் ஓட்டம் அதிகமாகி அது பின் மண்டையிலுள்ள மெடுல்லா ஆப்லோங்கட்டாவை கடுமையா தாக்கியிருக்கு //
  கலக்கல் கற்பனை.

  ReplyDelete
 5. கலக்கல் கற்பனை பாஸ் அருமை

  ReplyDelete
 6. கலக்கிட்டீங்க! . சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. gaptain , கலைஞர், மண்ணு மூன்றும் அதி அற்புதம்.

  ReplyDelete
 7. தல சூப்பர் தல ... ஒவ்வொரு தலைவரையும் பின்னி பெடல் எடுத்துட்டீங்க... விஜயகாந்த் நாட்டாம சூப்பர் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி சீனு..

   Delete
 8. 2013 ல் என்னை மிகவும் சிரிக்க வைத்த பதிவு... 2013 ஆரம்பமே அட்டகாசம்.. பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள். உங்கள் கற்பனை மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்..

   Delete
 9. பதிவு எழுதியவருக்கு என்னாச்சி...!?!?!?!?!?.

  ReplyDelete
 10. மெடுல்ல ஆம்லெட்லேந்து ஆரம்பித்து வரிசையா சிரிக்க வச்சுட்டீங்க பாஸ்.கலக்கல்.

  ReplyDelete
 11. அட்டகாசம் போங்கள் ! !
  கலக்கீட்டீங்க ! ! !

  ReplyDelete
 12. அட்டகாசம் .பாஸ் . மேடுல்லா ஆம்லெட்டா சூப்பர்

  ReplyDelete
 13. மணிமாறன் கலக்குறீங்க......

  ஆமா என்னாச்சி??????????

  ReplyDelete