சில நாட்களுக்கு முன்பு மும்பை,பாந்தராவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த நம் தங்கத்தமிழச்சி ஸ்ருதிஹாசனை ஒருவர் கையைப் பிடித்து நையப்புடைத்தார் இல்லையா....!. தன் சொந்தப் பிரச்சனைக்காகத் தான் அவரைத் தாக்கினேன் என்று பிறகு கைதான அந்த நபர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னணியில் வேறொரு சங்கதி இருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
அதற்கு முன், தன் மகள் மீதானத் தாக்குதலைப் பற்றி, பத்துமாசம் சுமந்துப் பெத்தெடுத்த ஆத்தா சரிகா என்ன சொன்னார் என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதே மும்பையில், சரிகாவின் இன்னொரு மகளான அக்சராவுடன் சரிகா தங்கியிருக்க, சுருதி மட்டும் ஏன் தனியாக தங்கவேண்டும் என்று சரிகாவிடம் கேட்டபொழுது, வெகு கூலாக அவர் சொன்ன பதில்," ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். என்னுடன் தங்கமாட்டார்.".
உடனே, இதைத்திரித்து வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்வது சரியா என்று நியாயத் தராசை தூக்கிகொண்டு வரப்படாது ஆமா.... முதலில் தாக்குதலுக்கான பின்னணியை டீப்பா ஆராய்ந்துவிட்டு பிற்பாடு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை யோசிப்போம்.
(கமல் எதைப்பார்த்து இப்படி கதறி அழுகிறார் என்பதைத் துல்லியமாக அறிய ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும் ) |
அதாகப்பட்டது, தனது கலைச்சேவையை இந்தியளவில் விரிவாக்கும் பொருட்டு, இந்தித்திரைப்பட உலகிலும் தன் பரந்த கடையை விரிப்பதற்காக சில இந்தி நடிகர்களுக்கு ஸ்ருதி தூண்டில் போட்டதாக சொல்லப்படுகிறது. பின்னே...பாலிவுட்டில் எந்தவொரு நடிகரின் அரவணைப்பும் இல்லாமல் அங்குலம் அளவுகூட நடிகைகள் வளர முடியாது என்பது உலகறிந்த விசயமாச்சே...அதில் வசமாக அந்த 'கான்' நடிகர் சிக்கியதாக பட்சி சொல்கிறது. இந்தியில் அறிமுகமாகும் நிறைய நடிகைகளை அண்ணன்தான் முதலில் 'அரவணைத்து ' வாழ்த்து சொல்லி ஊக்குவிப்பாராம்.
நம்ம ஸ்ருதி வேற கலைஞானியின் கலை வாரிசு இல்லையா..! அதனால் கொஞ்சம் அதிகமாக அரவணைக்க வேண்டியிருந்ததால், தினமும் இரவு ஸ்ருதி தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் தங்கி அரவணைத்து சென்றிருக்கிறார் நம்ம கான் நடிகர். இது எப்படியோ அவரது மனைவியின் காதுக்கு எட்ட, வெகுண்டெழுந்த அந்த அம்மையார் போட்ட பிளான்தான் அதுவாம். ஸ்ருதியுடன் கான் நடிகர் தங்கியிருக்கும் தருணத்தில், ஸ்ருதியைத் தாக்கினால் உள்ளேயிருக்கும் 'கான்' வெளியே வருவார்.அபார்ட்மெண்டில் கூட்டம் கூடும்.கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள் என்பதுதான் அவரின் திட்டமாம். அதற்காக அவர் செட்டப் பண்ணின ஆள்தானாம் அது. ஆனால் தாக்குதல் நடத்தும்பொழுது ஸ்ருதி சுதாரித்துக் கதைவை இழுத்து சாத்திவிட, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். கடைசியில அம்மையார் போட்ட திட்டம் பணால் ஆகிவிட்டதாம்.
தாக்குதல் நடந்த உடனையே ஸ்ருதி தரப்பு போலிசுக்கு போகாததற்கு இதுதான் காரணமாம். பிறகு விஷயம் வெளியே தெரிந்தவுடம், கண்துடைப்புக்காக புகார் கொடுத்துவிட்டு பிற்பாடு பூசுதல், மொழுகுதல் வேலை எல்லாம் நடந்தது ஊரரிந்ததுதான்.
இதிலென்ன இருக்கு.? சினிபீல்டில்,அதுவும் பாலிவுட்டில் இதுபோன்ற சங்கதிகள் நடப்பது ஒன்றும் அதிசயமான நிகழ்வில்லையே..... அப்படினுதான் நீங்க, நான் மட்டுமல்ல....., கமல் கூட நினைத்திருப்பார்..! ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே...! லிவிங் டுகெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றுதான் என்று வாதிடுகிறவராச்சே... !
இவ்வளவு ரகளைக்குப் பின், ' பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்' என்கிற ஒரேயொரு அட்வைஸோடு ஒரு அப்பாவாக அவர் கடமை முடிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஸ்ருதி எந்தப் பின்புலமும் இல்லாதவரா என்ன...? அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன..? . பிறகு எதற்காக வாய்ப்பு வேண்டும் என்று இவ்வளவு தூரத்திற்கு இறங்க வேண்டும். ஒருவேளை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் முன்னணி நடிகையாக ஒரு பெண் வரவேண்டுமென்றால் 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்கின்ற கசப்பான உண்மையை கமல் அறியாமல் இருப்பாரா என்ன..?
கேட்டால், என் வீட்டு பாத்ரூமை எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தர்க்க ரீதியாக கேள்வி எழுப்புவார். நாங்கள் சினிமாக்காரர்களை வெறும் பாத்ரூம் சமாச்சாரமாக மட்டும் பார்த்திருந்தால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எங்கள் தமிழகத்தை சினிமாக்காரர்களின் கைகளில் கொடுத்திருப்போமா...? அடியேன் கலைஞானியின் தீவிர ரசிகன்தான். கலைக்கு ஞானியாக இருப்பவர், கலாச்சாரத்திற்கும் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்த பட்சம் அதைக் கெடுக்காமல் இருக்கலாமே.
உலக நாயகன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்கிற குருட்டு வாதம் இங்கே செல்லாது. இறுதி மூச்சுவரை, தனது மகன்கள்,பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஒரேவீட்டில் வைத்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி காண்பித்திருக்கிறார் நடிப்புக்கே இலக்கணம் எழுதிய ஒருவர். தன் மகனுக்கு கற்பு நடிகையுடன் கனெக்சன் ஏற்பட்டபோது, கவலையால் நொடிந்து போனார் சிம்மக் குரலோன். அதைக் காரணமாக வைத்தே இருவரையும் பிரித்தார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு.
நடிகர்
திலகம் அவர்களின் சிலையை அகற்றப்போவதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பே மூட்டை முடிச்சி எல்லாம்
கட்டிக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதால், அந்தக் கம்பீர சிலையை
கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை
சென்னையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அது ஏர்போர்ட், தி.நகர், ECR
ரோடு என பயணம் திசைமாறி விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே அச்சிலையை
பார்த்திருந்தால் இன்னும் வருத்தம் கூடியிருக்கும்... போகட்டும்...
" கோயிங் ஸ்டெடி பார்ட்னர்.." (3D) |
வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது எவ்வளவு வேதனைக்குரியது..!. போக்குவரத்துக்கு இடைஞ்சல், விபத்து மிகுதியானப் பகுதி என்பதெல்லாம், என்னைக்கேட்டால் சுத்த Humbug.. அப்படிப் பார்த்தால் அம்மையாரின் கோயிங் ஸ்டெடி பார்ட்னர் சிலை கூடத்தான் நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதை அப்புறப்படுத்தட்டுமே...!
' நாங்கள் என்ன சிலையை மொத்தமாக அகற்றவேண்டும் என்றா சொல்கிறோம்..? கொஞ்சம் தள்ளி(!) மெரினா பீச்சில் வைக்கச் சொல்கிறோம். அவ்வளவுதானே' என்று ஒத்தடம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...
ஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான். அதற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்.....? ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்)
ஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான். அதற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்.....? ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்)
என் பக்கத்து சீட்ல ஒரு பிலிப்பைன்ஸ்காரன் இருக்கான் என சொல்லியிருந்தேன் அல்லவா.. நேற்று லஞ்ச் பிரேக்குல பேசிகிட்டு இருந்தப்போ, எதேச்சையாக சைனாகாரனுவ பத்தி பேச்சு வந்தது. முக்கியமாக அவனுக யூஸ் பன்ற 'டிஸ்யூ பேப்பர்' பற்றி.
" இவனுக எப்படித்தான் டாய்லெட்டுக்கு பேப்பர் யூஸ் பன்றானுகளே தெரியில.. என்னதான் இருந்தாலும் தண்ணியை ஊத்தி சும்மா சள சளனு மேட்டர் முடிப்பதில் உள்ள திருப்தி அதில கிடைக்குமா..?.அதுவுமில்லாம, கருமம் புடிச்சவணுக டாய்லெட்ல ஒரு பக்கெட், மக் வைக்கிரானுகளா பாரு. எனக்கெல்லாம் எவ்வளவு அடக்கமுடியா அவசரமாக இருந்தாலும், ஹாஃப் டே லீவ போட்டுட்டு, டாக்சியை புடிச்சாவது வீட்டுக்கு போயி நிம்மதியா போவேனே தவிர, இந்த பப்ளிக் டாய்லட் அல்லது ஆபிஸ் டாய்லட் யூஸ் பண்ணவே மாட்டேன். உனக்கு எப்படி... இந்த பேப்பர் மேட்டர் ரொம்ப சௌகரியமா இருக்கா.." என்று அவனிடம் கேட்டேன்.
" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது. வேற வழியில்லாம யூஸ் பண்றேன் " என்றான் .
" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது. வேற வழியில்லாம யூஸ் பண்றேன் " என்றான் .
"அப்படியா....?! " என்றேன் ஆச்சர்யமாக.
" ஆமாம். பிலிப்பைன்ஸ் பூராவும் தண்ணிதான் யூஸ் பண்ணுவாங்க.. எனக்கும் சள சளனு தண்ணியை ஊத்தி கிளீன் பன்றதுதான் புடிக்கும்.." என்றான்.
என்னவோ தெரியில... அவன் அப்படி சொன்னதிலிருந்து ஏதோ நம்ம சொந்தக்கார பயலை நேரில் பார்த்த மாதிரி ஒரே பீலிங்...!
கடைசியா அவன் தோள்மீது கைபோட்டு சொன்னேன், " நீ என் இனமடா.... ! "
கலாட்டூன் கார்னர்...
இது 3D அனிமேசன் . Photoshop மூலம் முயற்சி செய்தேன்... இதையும் ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும். இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))
--------------------------------------------------------------X------------------------------------------------------
அடிச்சி விடுவோம் பகுதியில இனி, தமிழ் சினிமாவில் அற்புதம் நிகழ்த்திய பல நடன அசைவுகளை கண்டெடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தாக்கலாம் என்றிருக்கிறேன்.
மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை பின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, "டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் " என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.
மானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை பின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, "டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் " என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.
இன்னும் அடிச்சி விடுவோம்..............
கலந்து கட்டி அடிச்சு இருக்கீங்க சூப்பர்
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி சக்கர கட்டி..
Deleteஹி!ஹி!!ஹீ!!!!ரொம்ப,ரொம்ப,ரொம்ப நன்றிங்க!சிரிச்சு முடியல!!!
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி பாஸ்..
Deleteஸ்ருதி விசயத்தில் இவ்வளவு நடந்திருக்கிறதா...?
ReplyDelete3D படங்கள் கலக்கல்...
ஹி!ஹி! கருத்துக்கு மிக்க நன்றி DD
Deleteஅசத்தல் பதிவும் ,கலக்கல் படங்களும் அருமை !
ReplyDeleteதொடரட்டும் உங்கள் திருடி ...தப்பு தப்பு ..3D பதிவு !
த.ம3
கருத்துக்கு மிக்க நன்றி பாஸ்..
Deleteரொல்லு அதிகமாய்டுச்சி....அனா சூப்ப்ர்...
ReplyDeleteஹி!ஹி!....கருத்துக்கு மிக்க நன்றி சக்தி முருகேசன்....
Deleteஅண்ணே, கலக்கிட்டீங்க... 3D படங்கள் சூப்பரு...
ReplyDelete//இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))//
ஹா ஹா.. அடுத்தவாரம் யாரு மாட்டப்போராங்களோ....
வாங்க தம்பி... மிக்க நன்றி
Deleteஸ்ருதி ஏழாம் அறிவில் க்ளிவேஜ் காட்டியபோதே நமக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இப்போது எங்கேயோ போய் விட்டார். அவர் யாரோவாக இருந்தால் பரவாயில்லை. மரியாதைக்குரிய கமலில் மகளாக இருப்பதால், ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteநிச்சயமாக பாஸ்... அதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.
Deleteசிவாஜி சிலையை ஓரமாக வைக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். சிவாஜி சிலையை மட்டுமல்ல, எல்லா சிலைகளையுமே!
ReplyDeleteஇதன் மையப்பிரச்சனையே இதுதான்... சிலைகளை மொத்தமாக அகற்றினால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. முன்பு மாவட்ட தலைநகரத்தில் உள்ள தலைவர்களின் பெயரை ஒட்டுமொத்தமாக கலைஞர் நீக்கியபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. அதேப்போல் மொத்தமாக சிலைகளை அகற்றலாம். ஆனால் எந்த சாதி சங்கத்தாலும் ,அரசியல் அமைப்பாலும் இல்லாமல், கலைத்துறைக்கு தலைமகனாக விளங்கிய ஒருவரை பெருமைப் பபடுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையை மட்டும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்போது ஃபீல் ஸோ சாட்... :-(
Delete