Sunday 26 October 2014

கத்தியும் அதன் மீதான எதிர்வினைகளும்..


விஜய் ரசிகர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் துப்பாக்கியையும் கத்தியையும் நீக்கிவிட்டு பார்த்தால் அனைத்தும் மொக்கை வகையறாக்கள். அதிலும் கத்தி பட அளவுக்கு இதுவரை எந்தப் படத்தின் டீசரும் இப்படி கலாய்க்கப் பட்டதில்லை. கத்தியில் விஜய்யை பத்திரமாக சுமந்து கரை சேர்த்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் .

படத்தின் மூலக்கதை வேறொருவருக்கு சொந்தமானது என்று இணையத்தில் செய்தி பரவுகிறது. கதைக்கு சொந்தமானவர் நிறைய நண்பர்களிடம் இக்கதையை சொல்லியிருக்கிறார் போல. " இரண்டு வருடத்திற்கு முன்பு நண்பர் கோபி அவர்கள் என்னிடம் இந்தக்கதையை சொன்னார் .." என்கிற ரீதியில் நிறைய பதிவுகள் பேஸ்புக்கில் காண முடிகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கார்பரேட் முதலாளிகளுக்கும் அந்நிலங்களின் உரிமையாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை முழு திரைக்கதையாக்கி  ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லியிருக்கிறார் கோபி.

புழல்,வீராணம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்லும் அனைத்து தண்ணீர் குழாய்களையும்  தகர்த்தெறிவது வரை அவரது திரைக்கதையில் இருந்திருக்கிறது. இரட்டை வேடங்கள் என்கிற சிறிய மாற்றத்தை மட்டும் திரைக்கதையில் செய்து கத்தியாக படைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மற்றவரின் படைப்பை, உழைப்பை களவாடி கத்தியாக களமாடியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு இயக்குநர் மீது சுமத்தப் பட்டாலும் களவாடப்பட்ட அனைத்து கதைகளும் இங்கு வெற்றிபெறுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். தற்போது இது சம்மந்தமாக வழக்கு நடைபெறுகிறது என்று தெரிகிறது. இது அவர்களது பிரச்சனை. நாம் நம் வேலையை பார்ப்போம்.

கதையை பல விமர்சனங்களில் படித்திருப்பீர்கள். படம் ரிலீசாகி  அடுத்த நாளே இணையத்தில் வெளியாகி விட்டதால் அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள் . இருந்தாலும் நம் கடமை என்று ஒன்று இருக்கிறதல்லவா... ! ஆகையால்...


கத்தி - செம ஷார்ப்...

டைப்பு ரீதியாக கத்தி சிறந்த படம்தான். இந்தக் கதையை கையாள்வதற்கே தனித்திறன் வேண்டும். மணிரத்னம்,சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு சில ஆளுமைகள் மட்டுமே தொடக்கூடிய சப்ஜெக்ட் இது. 

வறண்டு கிடக்கும் நஞ்சை பூமியின் அடியில் உள்ள நீராதாரத்தை அறியும் கார்ப்பரேட் கும்பல் ஒன்று அந்நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலை கட்ட முயல்கிறது. எங்களுக்கு சோறுபோட்ட இந்த புண்ணிய பூமியில்  விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலையும் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அந்நிலத்தில் காலங்காலமாக விவசாயம் செய்துவரும் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். பணபலம், மிரட்டல்,வன்முறை என்று அத்தனை ஆயுதங்களையும் அந்த ஏழை விவசாயிகள் மீது ஏவி விடுகிறது கார்ப்பரேட் கும்பல். இறுதியில் சட்டத்தின் கதவு தட்டப்படுகிறது. அந்தக் கதவு யாருக்கு திறந்தது என்பதே படத்தின் இறுதிக் கட்டம்.

கதிரேசன்(கத்தி), ஜீவானந்தம் என்று இரு கெட்டப் விஜய்க்கு. வழக்கம்போல எந்த வித்தியாசமும் காட்டாமல் ( பாஸ்.. ஒரு மருவாவது ஒட்டி வச்சிருக்கக் கூடாதா..?). கதைக்கருவில் இரண்டு விஜய்க்கான அவசியம் இல்லைதான். ஆனால் கமர்சியல் கன்றாவி என்று ஓன்று இருக்கிறதே. டூயட், ரொமான்ஸ் இன்னபிற வணிக சமாச்சாரங்களை எல்லாம் இடைச்செருகல் செய்ய  கதிரேசன் தேவைப்பட்டிருக்கலாம்.

சண்டை, நடனம்,காமெடி காட்சிகளில் கலக்கும் வழக்கமான அதே விஜய்யாக கதிரேசன். அந்த பிரஸ்மீட் காட்சியில் மட்டும் அதகளப்படுத்துகிறார்.

ஆனால், ஜீவானந்தம் கேரக்டர் உண்மையிலேயே விஜய் கேரியரில் ஒரு மைல்கல். ஒரு பாடாவதி படத்துக்கு
'தலைவா' என்று பெயர்வைத்ததற்குப் பதிலாக இந்தப் படத்திற்கு  வைத்திருக்கலாம். ஓரளவு நடிப்பதற்கு வாய்ப்புள்ள பாத்திரம். ஆனால் அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்ட மாதிரி தெரியவில்லை. இறந்தவர்களின் கட்டைவிரலில் மைதடவி அவர்களின் நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என்று அறிந்தவுடன் கதறி அழும் அந்தவொரு காட்சி மட்டும் அட்டகாசம். 

நஸ்ரியா செட்டில் ஆனதால் இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி சமந்தா என்பதில் துளியளவு(!) கூட சந்தேகமில்லை. அழகுப் பதுமையாக வந்து விஜய்யோடு டூயட் ஆடுவதோடு இவர் வேலை முடிந்தது. 


சில இடங்களில் பின்னணி இசையில் செம கலக்கு கலக்கியிருக்கார் அனிருத் (என்ன..படம் முடிந்து வெளியே வரும்போது காதுக்குள்ள  ங்கொய்..ன்னு ஒரு சத்தம்) . 

சமகாலப் பிரச்சனையை நுட்பமாக கையாண்டிருப்பதால் இயக்குனருக்குத்தான் அத்தனைப் பாராட்டுகளும். வசனம் படத்திற்கு மிருக பலத்தை சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில் கத்தி தொடர்பான எதிர்கருத்துகளும் மறுபுறம் வந்து கொண்டே இருக்கிறது. 

கதிரேசனாக வரும் விஜய் ஒரு போக்கிரி. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத ஊதாரி. அவர் ஜீவானந்தத்தின் இடத்திற்கு வரும்போதுதான்  சமந்தாவும் அங்கு வருவார். அதன்பின்னர் தான் அங்கு என்ன பிரச்சனை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அறிவார். அப்போதெல்லாம் கூடவே இருக்கும் சமந்தாவுக்கு அவர் ஜீவானந்தம் அல்ல என்கிற விஷயம் எப்படி தெரியாமல் போயிற்று..? 

ஜெயிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியை தன் மதிநுட்பத்தால் பிடித்துக் கொடுக்கிறார் விஜய். அதனால் விஜய்யை கண்டுபிடித்து பழிவாங்க ஜெயிலில் இருக்கும் மற்றொரு விஜய்யுடன் இன்னும் இருவரையும் சேர்த்து தப்பிக்க வைக்கிறான் அந்தத் தீவிரவாதி. இவ்வளவு ரிஸ்க் எடுப்பவன் ஏன் அவனே தப்பிக்கக் கூடாது...? 

அப்படி வந்த மற்ற இருவரும் திடீரென்று காட்சியிலிருந்து காணாமல் போகிறார்களே... ?

இவ்வளவு பெரிய கார்பரேட் கம்பெனியின் C.E.O வாக இருப்பவர் நேரடியாக களத்தில் இறங்கியா சண்டை போடுவார்..?

ஐந்து கோடி பணத்தை திருப்பிக்கொடுக்க செல்லும் விஜய்  ஏதோ பெட்டிக்கடை வாசலில் நிற்பவரிடம் கொடுப்பது போல கொடுத்துவிட்டு வருகிறார்.

ஏரிகளிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பைப்பினுள் அமர்ந்து மூன்று நாட்கள்  போராட்டம் என்பதெல்லாம் சாத்தியமா..? காற்றோட்டமே இல்லாத அதன் உள்ளே அரை மணிநேரம் கூட உட்காரமுடியாதே..

இதுபோல லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் இணையத்தில் வேறுமாதிரியான எதிர்வினைகள் விவாதிக்கபடுகிறது.

கோகோ  கோலா விளம்பரத்தில் நடித்து நம்மை கோக் குடிக்க சொல்லி வற்புறுத்திய விஜய், எப்படி கோக் கம்பெனி தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதைப் பற்றி பேசலாம். 'நீங்கள் குடிக்கும் குளிர்பானம் ஏழைகளின் ரத்தம்' என்றுவேறு பன்ச் அடிக்கிறார்.

விஜய்யிடம் கேட்டால் , 'இதில் என்னங்ண்ணா தப்பு இருக்கு. கோக் குடிங்க-ன்னு சொல்றதுக்கும் அந்தக் கம்பெனி தண்ணீர் எடுப்பதைக் கண்டிப்பதும்  ஒன்றா '  என்று கேட்பார். சரிதான்.

விஜய் என்பவர் ஒரு தொழில்முறை நடிகர். பணத்தைத் தவிர நடிகனுக்கு வேறு கொள்கை இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அந்தந்த காலகட்டத்தில் அரசியல் சூழலுக்கேற்ப கலைஞரில் ஆரம்பித்து மோடி வரை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் இளைய தளபதி அவர்கள். அவரிடம் போய் கோக் விளம்பரத்தில் நடித்தீர்களே என்று தர்க்க ரீதியாகக் கேள்வி கேட்டால் பாவம் என்ன பதில் சொல்வார்...?

இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார். அப்படியே ஈழப்படுகொலையை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்த காங்கிரஸ்-ன் துணைத்தலைவர் ராகுல்
காந்தியை சந்தித்துவிட்டு துண்டு போட்டுவிட்டு வருவார். ஒரே ஒரு வாசகத்துகாக தான் நடித்த படத்தையே தடை செய்யும் அரசுக்கு எதிராக எதுவும் பேசமாட்டார். ஆனால் அவரை ஆறுகோடி மக்களின் தாய்.. என் தாயை பழிக்கலாமா என்று புலம்புவார். ராஜபக்சேவை கண்டிப்பார். அவரது பினாமியின் படத்திலே நடிப்பார். இப்படி தனக்கென்று சுயமாக கொள்கை வகுக்காதவரிடம் போய் கோககோலா விளம்பரத்தில் நடித்து சரியா என்று அறச்சீற்றத்துடன் கேள்வி எழுப்பினால் பாவம் பச்சப்புள்ள என்ன பதில் சொல்லும்..?

நாம் கேள்வி கேட்க வேண்டியது இவரிடமில்லை. தான் ஒரு நடிகர் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். இவர் நைனா ஒருத்தர் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வரு
வார். வந்தவுடன் மக்கள் சக்தி விஜய்.. அடுத்த முதல்வர் விஜய் என உலர ஆரம்பிப்பார். அப்போது வைத்துக் கொள்ளலாம். 

சரி..படத்தில் மையக்கருவுக்கும் இதில் விஜய் பேசும் வசனத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?. "என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க" என்கிறார். இந்தப்படம் விவசாயத்தைப் பற்றி எங்கே பேசுகிறது..? விவசாயத்தின் அவசியத்தைப் பற்றி எங்கே பேசுகிறது. விவசாயிகள் படும் அவலத்தைப் பற்றி எங்கே பேசுகிறது ?. நிலத்தடி நீராதாரம் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிட முடியுமா..?. 

தஞ்சை,திருவாரூர் , நாகை டெல்டா  பகுதிகளில் இல்லாத நீராதாரமா..? 20 அடியில் தண்ணீர் கிடைக்கிறது . 50 அடி தோண்டினால் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. கிராமந்தோறும் இலவச மின் இணைப்பில், இலவச மின்சார மோட்டார் அமைத்துக் கொள்ளும்படி அரசு மன்றாடுகிறது. அதை எத்தனைப் பேர் பயன்படுத்திக் கொள்கின்றனர். விவசாயம் செய்வதற்காகன அனைத்து வசதிகள் இருந்தும் ஏன் விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாறிக்கொண்டிருக்கிறது..? இதற்கெல்லாம் தீர்வு சொல்லிவிட்டு விவசாயத்தை விட்டுடாதீங்க என்று கதறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

இதைவிட ஒரு அபத்தமான காட்சி படத்தில் இருக்கிறது. விஜய் அங்கிருந்தபடியே சிங்கப்பூர், மலேசியா , வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் பேசுவார். அவர்கள் எல்லோரும் 'ஊருக்கு வந்து வயலில் இறங்கி எப்படா வேலை செய்வோம் என இருக்கு' என்பார்களாம். உண்மையிலேயே வெளிநாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களிடம் எத்தனைப் பேர் ஊரில் சென்று விவசாயம் செய்ய விரும்புகிறார்கள் என கேளுங்கள். ஊரிலிருந்தால் வயல்வேலை செய்ய சொல்வார்கள் என்பதால்தான் வெளிநாட்டுக்கு வந்தேன் என்று அநேக
ம் பேர் சொல்வார்கள். அவர்கள் எதற்காக விவசாயத்தை வெறுக்கிறார்கள் என்பதை விளக்கிவிட்டு, விவசாயத்தை விட்டுடாதீங்க என்று கதறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பது சரி.. ஆனால் நான்கு வருட காண்ட்ராக்டில் இருப்பவர்கள் இடையில் ஊருக்கு வரவே முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல.

பிரஸ்மீட் காட்சியில் கதைக்கு தேவையான எல்லா புள்ளி விவரங்களையும் சொல்லிவிட்டு கடைசியாக ஒரு 'அபவுட் டேர்ன்' போடுவார். தற்போது கேமரா, விஜய்யின் முகத்தையும் இதுவரை எதிரே நின்றுகொண்டிருந்த பிரஸின் முகங்களையும் ஒரே நேரத்தில் ஃபோகஸ் செய்யும் . ஏதோ கதைக்கு மிக முக்கியமான விஷயம் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் '2G ன்னா என்னான்னு தெரியுமா' என்பார்.  அப்படி என்றால் அந்த பிரஸ்மீட்டின் மைய நோக்கம் 2G யைப் பற்றியதா..?

கதைக்கருவுக்கும் 2G -க்கும் என்னய்யா சம்மந்தம்...? திமுகவைத் தாக்கி வசனம் வைப்பவர்கள்  ஏன் ஜெயலலிதாவின் வழக்கைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள் என்று கேட்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி சம்மந்தப்பட்ட, இன்னமும் ஊழல் என்று நிரூபிக்கப்படாத ஒரு வழக்கைப் பற்றி எதற்காக இந்த இடத்தில் பேசவேண்டும்...? ஒருவேளை, கடைசிவரை படம் வெளிவருமா என்கிற பதட்டத்தில் இருந்தவர்கள் இந்த ஒரு காட்சியை அம்மாவுக்கு போட்டுக் காட்டி அனுமதி வாங்கியிருக்கலாம். 

அது ஏனோ தெரியவில்லை.. அதுவரை கத்தியின் நுனியில் கம்பீரமாக நின்ற A.R.முருகதாஸ் அந்த ஒரு காட்சிக்குப்பிறகு மம்மியை கண்ட மினிஸ்டர் போல் கூனிக்குறுகி காட்சியளிக்கிறார்.

ஹி ..ஹி

27 comments:

 1. virivaana alasal sir.
  nallaa eluthi irukkuringa.

  thodarnthu ezuthungal.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மகேஷ்

   Delete
 2. Replies
  1. அதே..அதே.. மிக்க நன்றி

   Delete
 3. mr. arivali unga thala nadicha padatha parunga, logic ellam nalla irukum. better luck next time.

  ReplyDelete
  Replies
  1. தல மட்டும் வானத்திலிருந்தா குதிச்சார். அவர் படத்தையும் தோலுரிப்போம்.

   Delete
  2. nalla tholurinka .. but film ah nalla paathutu tholureenka yevan film ah irunthalum...illana unka review ini naanga thooluripom..

   Delete
 4. last 5 years la vijay nadichathula what about nanban and kavalan? summa vijaya kuttam soluratha vittutu nalla padam nadicha paratra valiya parunga, illa ajith padam parthu jollya irunga...

  ReplyDelete
  Replies
  1. Arivu nu oonu iruntha thana ivankaluku... :-)

   Delete
 5. peasama poringala illa arrambam, veeram padam pakkuringala, silly ajith fan...

  ReplyDelete
 6. ivan'la oru nadigan, ivannuku vaera naalu punchu dialogue, kodi rasigargal.

  ReplyDelete
 7. முருகதாஸ் ஒரு சிறந்த சமையல் காரர். மளிகை சாமான்களை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். ஆனால் எந்த சமையல் சாமானுமே அவருடையது இல்லை. எல்லாமே திருடியதுதான்

  புரிகிறதா.

  கதைக் கருவிலிருந்து காடசியமைப்பு வரை எல்லாமே சுட்டது. ஆனால் அதை திறமையாகப் பரிமாரத் தெரிந்தவர்.

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரி... மிக்க நன்றி

   Delete
 8. போடாங்... நீ எல்லாம் விமர்சனம் எழுத‌லைன்னு யார் அழுதா..? படத்துல நடிக்குரசங்க ரியல் லைஃப்லயும் அப்படியேதான் இருக்கனும்னு நெனைச்சா ஒரு பய கூட இங்க சினிமால நடிக்க முடியாது.. விஜய் ஒரு கட்டத்துல கோக் விளம்பரத்துல நடிச்சது உண்மைதான், ஆனா உண்மை தெரிஞ்சபிறகு அது தப்புன்னு புரிஞ்சு அந்த விளம்பரத்துல‌ நடிக்குரத விட்டுட்டாருல்ல, அப்புறம் என்ன நொன்னைக்கு அழுவுர..? நீ என்ன கார்ப்பரேட் கைக்கூலியா..?

  ReplyDelete
  Replies
  1. உங்க விஜய்ண்ணா அப்படியே நடிகரா இருந்துட்டா யார் கேட்கப்போறா ..? சினிமாவை வைத்து அரசியலுக்கு வருபவர்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு..?

   Delete

  2. தம்பி நீ யார்னு தெரியும் . ஒரிஜினல் பேர்ல வாப்பா..

   Delete
  3. Ne appo vijay arasiyaluku vanthappuram ipadi yeluthu...ipo vijay actor only thana? appuram yen muttal mathiri yeluthura?

   Delete
 9. Romba nalla pathivu.yen manathil patta vishayangal konjamthan.aanal ungal pathivu super.nalla .......nandri.
  Abidhek.Akilan.

  ReplyDelete
 10. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்/கலாய்த்திருக்கிறீர்கள்,ஹ!ஹ!!ஹா!!!///வீடியோ ...........செம,சிரிச்சு மாளல!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பாஸ்..

   Delete
 11. hello sir.., nenga solratha la crt..but VJ twiter la ena sona " nanum normal human, appo antha add la nadichathu THAPPU nu thonuthu,so intha scene la nadicha nu sonanru," atheye yen ulta va mathi poduringa.....

  VJ nadicha add pathu neenga COKE kudika start paniningala solunga.. kutham solanum na nama mela 1000 kuttram solalam... ivalavu kutram solra neenga 1st ungala pakkanum..

  ReplyDelete
 12. ஜெயிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியை தன் மதிநுட்பத்தால் பிடித்துக் கொடுக்கிறார் விஜய். அதனால் விஜய்யை கண்டுபிடித்து பழிவாங்க ஜெயிலில் இருக்கும் மற்றொரு விஜய்யுடன் இன்னும் இருவரையும் சேர்த்து தப்பிக்க வைக்கிறான் அந்தத் தீவிரவாதி. இவ்வளவு ரிஸ்க் எடுப்பவன் ஏன் அவனே தப்பிக்கக் கூடாது...?

  அப்படி வந்த மற்ற இருவரும் திடீரென்று காட்சியிலிருந்து காணாமல் போகிறார்களே... ?

  இவ்வளவு பெரிய கார்பரேட் கம்பெனியின் C.E.O வாக இருப்பவர் நேரடியாக களத்தில் இறங்கியா சண்டை போடுவார்..?

  ஐந்து கோடி பணத்தை திருப்பிக்கொடுக்க செல்லும் விஜய் ஏதோ பெட்டிக்கடை வாசலில் நிற்பவரிடம் கொடுப்பது போல கொடுத்துவிட்டு வருகிறார்.

  ஏரிகளிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பைப்பினுள் அமர்ந்து மூன்று நாட்கள் போராட்டம் என்பதெல்லாம் சாத்தியமா..? காற்றோட்டமே இல்லாத அதன் உள்ளே அரை மணிநேரம் கூட உட்காரமுடியாதே..

  இதுபோல லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் இணையத்தில் வேறுமாதிரியான எதிர்வினைகள் விவாதிக்கபடுகிறது.

  My answers for your worthless question about logic.
  Yellorum review yeluthalam . but athuku munnadi naama yeluthura review correct ah irukanu paathukanum.

  1.jaila antha villanuku kaalula adipatturum ( starting la police avan kaalula shoot pannuvanka..) athanla yennala intha kaaloda thappika mudiyathu. so na yen aatkal 2 pera unkuda anupurenu vijaykita sovan.

  2.Antha 2 perum police stationku velila wait pannuvanuka. vijay police kita katiresan paththi sollitu police kuda jeepla velila poiruvan. athuku appuram avanunka vijay a thedanumna neenga poi than avnkaluku help pannanum.

  3. Vijay and his groups pipe ku ulla pokurapa food and water yeduthu pokalanu unkaluku yeppadi theriyum? avanka 3 days saapdama irunthankanu film la yenkayum sollala... ivlo plan panni pora avankaluku food yeduthu poka theriyatha?

  4. pipe kula avanka porathe pipe mela irukura hole valiyathan.. athu open aaki than irukum. appadi iruka pipekulla kaathu pookalanu yeppadi neenga solreenga?

  Vijay a kalaikuravankalam oru muttalnkurathuku neenga oru example. unka logic questionlaye logic illa.. ithula film logic pathi neenga pesureenka... better you stop writing review... then na unkakita ketkura oru kelvi.. Unkaluku therincha logic ulla oru padathoda name sollunka... na antha padatha paathutu unka kita athe padathula ulla logic oottai pathi ketkuren...

  ReplyDelete