Friday, 16 January 2015

ஆம்பள - அதகளம் ..!

ரு முடிவோடுத்தான் சுந்தர்.C களத்தில் இறங்கியிருக்கார் . இரண்டரை மணி நேரம் ஆடியன்ஸின் கவனத்தை சிதறடிக்காமல் கலகலப்பாக படத்தைக் கொண்டு சென்றாலே போதும். ஓரளவு வெற்றியை தக்கவைத்து விடலாம் என்று தன் திரை அனுபவத்தின் மூலம் அவர் போட்ட கணக்கு இந்த முறையும் தப்பவில்லை. தன் கோட்டையில் இன்னொரு வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார் தமிழ் சினிமாவின் தற்போதைய ஒரே மினிமம் கியாரண்டி இயக்குனர் சுந்தர்.C.

படம் வெளிவரும் முன்பே, உலகத்திலே இப்படியொரு சினிமா வந்ததில்லை என்று ஓவர் பில்டப் கொடுத்து  எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைத்துவிட்டு, திரையரங்கைவிட்டு தொங்கிய முகத்துடன் வரும் ரசிகனைப் பார்த்து, 'படம் புடிக்காவிட்டால் எழுந்து போக வேண்டியதுதானே' என தர்க்கம் பேசும் இயக்குனர்கள் மத்தியில், ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்த்தார்களோ அதை விட கொஞ்சம் அதிகமாகவோ கொடுத்து திருப்திப் படுத்தும் சுந்தர்.C யை அடித்துக்கொள்ள தற்போதைய தமிழ் சினிமாவில் எவரும் இல்லை.

சிம்பிளான குடும்ப செண்டிமெண்ட் கதை - கதையை விட காமெடிக்கு முக்கியத்துவம் - மென்மையான கதாபாத்திரங்கள்-சிரிப்பு வில்லன்கள்- அதிரடி சண்டைக்காட்சிகள்-ஒரு குடும்பப் பாட்டு அதற்கு முன்பு செம குத்துப்பாட்டு -  திகட்டாத கவர்ச்சி என்ற சுந்தர்.C யின் அதே டெம்பிளேட் பர்முலா.. அதை சலிப்படையாமல் சொல்வதுதான் அவரது தனித்தன்மை. ஆம்பளை சொல்லி அடித்திருக்கிறது.

நிமிடத்திற்கு ஒரு தடவை சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்திருக்கிறது ஆம்பள டீம்.


ப்பாவைப் பிரிந்து அம்மாவுடன் வாழும் விஷால், அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் தொழில் செய்கிறார். பிறகு அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் அப்பாவைத் தேடி சொந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்கே ஜமீன்தாராக இருக்க வேண்டிய அப்பா பிரபுவும், தம்பி சதீஷும் ஜேப்படி திருடர்களாக இருக்கிறார்கள். அதன் பின்னணியை ஐந்து நிமிட ஃபிளாஷ்பேக்கில் சொல்கிறார்கள்.

ஜமீன்தார் விஜயகுமாரின் மூத்த மகன் பிரபு.  அவருக்கு  ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் என்று மூன்று தங்கைகள் . தங்கைகள் மேல் கொண்ட பாசத்தால் மொத்த சொத்தையும் அவர்களுக்கு எழுதிவைத்து விடுகிறார். அவர்கள் வீட்டில் கூலிவேலை செய்யும் பிரதீப் ராவத், விஜயகுமார் வகிக்கும் எம்.எல்.ஏ பதவிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கொன்று அப்பழியை பிரபு மேல் போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

அதற்கு முன்பாக, பிரபுவின் பழைய காதலைத் தெரிந்துகொண்ட அவரது மனைவி, முதல் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு ஜெயிலிலிருந்து விடுதலையாகி வரும் பிரபுவை தங்கைகள் வெறுத்து ஒதுக்க,  தன் இளைய மகனுடன் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார். இதுதான் பிளாஷ்பேக்.

பிரபுவின் அந்த மூத்த மகன்தான் விஷால். இளைய மகன் சதீஸ். முன்னாள் காதலிக்குப் பிறந்தவர் வைபவ். அப்பாவைத் தேடி வந்தவர் தனது இரு தம்பிகளையும் கண்டுபிடிக்கிறார். பிரிந்த குடும்பங்கள் பழையபடி சேர வேண்டுமானால், அத்தைகளுக்கு பிறந்த மூன்று பெண்களையும் ஆளுக்கு ஒன்றாக அபேஸ் செய்து கல்யாணம் செய்யவேண்டும் என்ற அப்பாவின் அன்புக் கட்டளையை ஏற்று அந்த ஜமீன் பங்களாவுக்குள் நுழைகிறார்கள் மூவரும்.

அதன்பிறகு நடக்கும் அடிதடிகள் , ஆள் மாறாட்டங்கள், துரத்தல்கள்  என அமர்க்களப்படுத்தி கடைசியில்  எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.


நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற வறட்டு பிடிவாதத்தால் கடந்த வருடத்தில் கோட்டை விட்ட சந்தானத்திற்கு இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்களம். முன்பாதியில் விஷாலைவிட சந்தானம்-மனோபாலா கூட்டணிக்குத்தான் அதிக காட்சிகள். ஆரம்பத்தில் எஸ்.ஐயாக இருந்து டீ புரமோஷன் ஆகிக்கொண்டே வரும் காமெடி ஏற்கனவே வடிவேல் செய்தது ஆச்சே என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் அதை விஷால்- ஹன்சிகா வின் காதல் விளையாட்டுகளோடு பின்னியிருப்பது செம கான்செப்ட்.

மூன்று அத்தைகளில் ஒருவராக கிரனை பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அத்தை கேரக்டர்களே கிளுகிளுப்புக்காகத்தான் என்று பிறகு தெரியவரும்போது மற்ற இரண்டு ஆண்டிகளாக ஒரு ரம்பாவையோ அல்லது நமீதாவையோ போட்டிருக்கலாமே என மனது சஞ்சலப்படுவதை தவிர்க்க முடியவில்லை. ரம்யா கிருஷ்ணன் சவால் விடுவதற்கு என வைத்துக்கொண்டாலும் ரிடையர்ட் ஆன ஐஸ்வர்யாவை இயக்குனர் எதற்காக தேர்ந்தெடுத்தார் என்பதுதான் புலப்படவே இல்லை.

பூனம் பஜ்வா ஒரு குத்துப் பாட்டுக்கு வருகிறார். ஆண்ட்ரியா, விஷால்-ஹன்சிகா காதலைப் பிரிக்கும் ஒரு சீனுக்கு வந்துவிட்டு போகிறார். குஷ்பு கூட டூயட்டின் இடையில் வந்து ஆடிவிட்டு போகிறார். இப்படி படம் முழுக்க ஏதாவது ஒன்றை கலர் கலராக காண்பித்து ஒரு 'ஃப்ரெஷ்னெஸ்' மெயிண்டைன் பண்ணுகிறார் இயக்குனர்.


ஹன்சிகாவை குளோசப்பில் பார்க்கும்போது அடுத்தப் படத்தில் அத்தை கேரக்டருக்குக் கூப்பிட்டுவிடுவாரோ என்கிற அச்சம் ஒருபுறம் வருகிறது. சிங்கிள் ஹீரோயினை வைத்தே சிக்சர் அடிப்பார் சுந்தர்.C. இதில் மூன்று ஜில்பான்சிகள். அடிஷனலாக அத்தைகள் வேறு.. கேட்க வேண்டுமா ..?  சென்டிமென்டான ' பாத் டவல் ' சீனும் உண்டு.

இசை ஹிப்ஹாப் தமிழன் ஆதி. சில பாடல்கள் குத்து ரகம் என்றாலும் எதுவும் போரடிக்கவில்லை. 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். கடைசியாகப் போடப்படும் டைட்டிலில் வருகிறது அப்பாடல். பாடல் முடியும் வரை பார்த்துவிட்டுத்தான் கூட்டம் கலைகிறது.

சுந்தர்.சி படங்கள் என்றாலே ஜாலியாக பீச்சுக்கு காற்று வாங்க போவது போல் தான் . போனோமா என்ஜாய் பண்ணினோமா என்று வரவேண்டும். மாறாக, அங்கு மணல் ஏன் சதுர வடிவில் இருக்கு... கடல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று யோசிக்கக் கூடாது. லாஜிக் என்ற மேட்டரை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இரண்டரை மணிநேரம் ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம்.14 comments:

 1. வணக்கம்

  தங்களின் பார்வையில் நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன்

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி மகேஷ்.. கொஞ்சம் ஜாலிக்காக பார்க்கலாம்

   Delete
 3. மனிமாறனிடமிருந்து ஒரு நியாயமான விமர்சனம். தமிழ் சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாதுதான்.

  ReplyDelete
  Replies

  1. நன்றி கும்மாச்சி சார்..

   Delete
 4. posted photos shows worth to spent. who cares story-screen play...i like the camera (man) angles......

  Arun /Sharjah

  ReplyDelete
 5. #அதே டெம்பிளேட் பர்முலா.. #
  சலிப்பு தராதுதான் ...இன்றைய என் பதிவிலும் இயக்குனரின் ஒரே பார்முலா ஜோக் தான் >>>http://www.jokkaali.in/2015/01/blog-post_16.html">எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?
  த ம +1

  ReplyDelete
 6. ந்தர்.சி படங்கள் என்றாலே ஜாலியாக பீச்சுக்கு காற்று வாங்க போவது போல் தான் . போனோமா என்ஜாய் பண்ணினோமா என்று வரவேண்டும். மாறாக, அங்கு மணல் ஏன் சதுர வடிவில் இருக்கு... கடல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று யோசிக்கக் கூடாது.

  சரி தான்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன் சார்

   Delete