Saturday 14 January 2012

சச்சின் சதம் அடிக்க பத்து யோசனைகள்...

"வருசத்துக்கு ஆறேழு செஞ்சுரி அடிச்சிகிட்டு இருந்தேன் ..இந்த சனியன் புடிச்ச அ.'.ப்ரிடி என்னைக்கு வாய வச்சானோ தெரியில ...ஒரு செஞ்சுரி அடிக்கிறதுக்குள்ள உசிரே  போவுதே....." அனேகமா சச்சினோட லேட்டஸ்ட் புலம்பல் இதுவாகத்தான் இருக்கும்.சச்சினுக்கு இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்....சச்சினின் சதத்தில் சதம்... உலகமே எதிர்பாக்குது...அதனாலையோ என்னவோ சச்சினுக்கு டென்சன் எகிறுது ..உலகின் நெ. 1 பேட்ஸ்மேன்.... கிரிகெட்டின் அடையாளம்...  யாருமே கிட்ட வரமுடியாத சாதனைகள்...ஆனா என்ன....90 ரன்ன தாண்டினாத்தான் கொஞ்சம் பேஸ்மென்ட் வீக்..


அவரோட டென்சன குறைக்கிறதுக்கும்,சதம் அடிக்கிறதுக்கும் என்னால் முடிஞ்ச யோசனையை I.C.C க்கு ஒரு கோரிக்கையா வைக்கலாம்னு  இருக்கேன்,கண்டிப்பா சச்சினுக்காக இத பரிசீலனை செய்வாங்கன்னு நெனைக்கிறேன். 

1 .ஒவ்வொரு சீரிஸ் ஆரம்பிக்கும் போது,அபசகுனமாக,"இந்த தொடரில் சச்சின் சதமடிப்பார்" என்று நாக்குல சனியோட திருவாய் மலரும் தோனியை இனிமேல்"இந்த தொடரில் சச்சின் சதம் அடிக்க வாய்ப்பே இல்ல"ன்னு மாத்தி சொல்ல வைக்கணும்.

2 .  உடனடியாக கென்யா,பெர்முடா,U.A.E போன்ற நாடுகளுடன் ஐந்து டெஸ்ட் மற்றும் பத்து ஒரு நாள் போட்டி நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அதுவும் இந்திய மண்ணில்.

3 .சச்சின் விளையாடும் போது அப்பப்போ கேமரா,லைட்டிங்,ரெண்டு மூணு மாடல் அம்மணிங்க  எல்லாம் சச்சின் கண்ணுக்கு தெரியும்படி வந்து போக வேண்டும். இடை இடையே 'பஸ் டயர' குறுக்கால நெடுக்காலையும் ஒருவர் ஓட்டி செல்ல வேண்டும்.கண்டிப்பாக அடிக்கடி 'கட்' சொல்லவேண்டும். இதெல்லாம் விளம்பர படம் எடுக்கிற ஒரு செட்டப் உருவாக்கத்தான்.( பின்ன ... அதுலதானே எல்லோரும்  சிக்ஸர் அடிக்கிறாங்கபா ...)

4 .சச்சின் பேட்டிங் செய்யும் போது 'பீல்டிங் செட்' பண்ணும் உரிமை சச்சினுக்குதான் கொடுக்கவேண்டும்....

5 .சச்சின் அடிக்கிற பாலை டைவ் அடிச்சோ ,ஓடிவந்தோ பிடிக்கக் கூடாது.கைக்கு தானாக வந்தால் மட்டுமே பிடிக்க வேண்டும்.அப்படியும் மீறி புடிச்சா...புடிச்சவுங்க அவுட்.(இது எப்படி இருக்கு...?) 

6 .சச்சின் 80 ரன்னை தொட்ட  பிறகு அடுத்தடுத்து   யார் 'பவலிங்' செய்யனும்னு சச்சின்தான் முடிவு செய்வார்...

7 .ரெண்டு காலிலேயும் 'லெக் கார்ட்ஸ்' க்கு பதில் 'பேட்ட' கட்டிக்க அனுமதிக்க வேண்டும். .'.புட் பால்ல எப்படி நெஞ்சு,தலையால  பால அடிக்கலாமோ அதே மாதிரி இங்க காலாலையும்,தலையாலையும் 'பேட்டிங்'பண்ண அனுமதிக்க வேண்டும்... 

 8 .சச்சின் 'பேட்டிங்' பண்ணுவாரே தவிர 'ரன்' எடுக்க ஓட மாட்டார். அவருக்கு கொறஞ்சது மூணு  பேராவது 'பை ரன்'னரா  களத்தில் எப்போதும்  இருக்கவேண்டும். இவர்கள் 'ரிலே ரேஸ்' முறையில் ஓடி ரன் எடுப்பார்கள்.

9 . 'டெஸ்ட் போட்டி' யில  நாலு இன்னிங்க்ஸ், 'ஓன் டே' யில ரெண்டு இன்னிங்க்ஸ் விளையாடசச்சினுக்கு மட்டும்  அனுமதி கொடுக்கணும்.... 

இப்படியும் முடியலயா.....கடைசியாக..

10 .சச்சினை 'அவுட்' செய்பவருக்கு கிரிகெட் விளையாட மூன்று   வருஷம்  தடை விதிக்கப்படும் னு அறிவிக்க வேண்டும்.

(ஹி ஹி..இதெல்லாம் சச்சின் நூறாவது சதம் அடிக்க மட்டும்தான்.  அடிச்சிட்டாரு......அப்பறம் எந்த கொம்பனாலையும்   சச்சின அவுட்டாக்க முடியாது...)
-------------------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி: சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் ....சதத்தில் சதமடிப்பார் என்று ஆவலோடு எதிர்பார்க்கும் கோடானுகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன்...சீக்கிரமே எனக்கு 'பெரிய பல்ப்' கிடைக்க சச்சிதானந்த ஸ்வாமிகள் அருள் புரிவாராக....

5 comments:

 1. // உடனடியாக கென்யா,பெர்முடா,U.A.E போன்ற நாடுகளுடன் ஐந்து டெஸ்ட் மற்றும் பத்து ஒரு நாள் போட்டி நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அதுவும் இந்திய மண்ணில். //

  ஏன் ஸ்ரீலங்கா??? போற நிலைமைய பாத்தா அந்த நிலையில தான் இருக்கு. ஏன்தான் நம்ம டீம் இப்படி போகுதோ?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 2. என்ன அவசரம் சச்சின் சதம் அடிக்க இன்னும் 60 வருஷம் இருக்கே !!!!.

  ReplyDelete
 3. வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி..உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்....

   Delete