Saturday, 30 June 2012

இதை நான் எதிர் பார்க்கவில்லை.....!!!!


     சிந்திக்க வைக்கக் கூடிய பதிவைப் போட்டால் ஒருவரும் சீண்டமாட்டார்கள். மொக்கை பதிவுகளுக்கும் சினிமா சம்மந்தமான பதிவுகளுக்கு மட்டுமே கமெண்டுகளும்,ஹிட்ஸ்களும், வரவேற்பும் இருக்கும் என்ற என் மட எண்ணத்தை தவிடு பொடியாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி.....

பதிவு இதோ...
  முதல்ல ஒரு தாழ்மையான வேண்டுகோள்...இந்தப்பதிவை போட்ட நான் ஒரு அப்பாடக்கர் கிடையாது.ஆனால் நான் சார்ந்திருக்கும் துறையில் அதிகமா உபயோகப்படுத்துவதால் அல்ஜிப்ராவிலும் முக்கோணவியலிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.சாதாரண பதிவாகத்தான் இதை எழுதினேன்.ஆனால் இதற்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ்,ரொம்பவே ஆச்சர்யப் படவைத்தது.மேலும் இதுபோல் எழுதி மீண்டும் உங்களை குழப்ப விரும்பவில்லை.நண்பர்கள் தொடர்பதிவு போல் எழுதினால் சந்தோசமே...

    பொதுவாகவே ஒரு பதிவு எழுதும்போது நாம் தலையை உருட்டி,மூளையை கசக்கி(!),தகவல்கள் திரட்டி,கண்விழித்து எழுதுவோம்.ஆனால் அதை படிப்பவர்கள் ஐந்து நிமிடத்தில் படித்து முடித்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவார்கள்.ஆனால் இந்தப் பதிவு நேரெதிர்....

பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றியை பின்னூட்டமாகவே இடலாம் என்றிருந்தேன்.ஆனால் படித்தோமா..போனோமா என்றில்லாமல் முயற்சி செய்த உங்கள் அனைவருக்கும் என் ராயல் சல்யுட்....

முதலில் இதற்கு முயற்சி செய்து பின்னூட்டம் இட்ட நண்பர்கள்.

வரலாற்று சுவடுகள்
கோவை நேரம்
தமிழ்வாசி பிரகாஷ்
வவ்வால்
வை.கோபாலகிருஷ்ணன் சார்
பிரபு கிருஷ்ணா
ராஜா
வடிவேலன்
ஜோசப் ஜார்ஜ்
Shi-Live
T.N.MURALIDHARAN
MUTHU
சீனு
நித்திலன்
சார்வாகன்
JEYAKUMAR
sivalingamtamilsource 
 
K.Ganapathisubramanian
Raja
மற்றும் ஐந்து அனானி நண்பர்கள்....
(இந்தப் பதிவு போடும் வரை)
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி...நன்றி...நன்றி...

-----------------------------------------------------------------------------------------
சரி இதற்கான சரியான விடைகள்...

1 .வை.கோபாலகிருஷ்ணன் சார் இட்ட பின்னூட்டத்தையே இதற்கு பதிலாக போடுகிறேன்.ஆக்சுவலா சார் RETIRED ACCOUNTS OFFICER.அதனால பதிவிட்டு சில மணித்துளிகளிலே இதற்கான பதிலை சொல்லி விட்டார்.

அவர் காசோலையில் எழுதிய தொகை 18.56 [ரூபாய் பதினெட்டும் பைசா ஐம்பத்தாறும்.]

அவர் காசோலையில் எழுதிக்கொடுத்துக்கேட்ட தொகையான ரூ.18.56 க்கு பதிலாக தவறுதலாக ரூ. 56.18 அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் 50 காசுக்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்ட பிறகு அவரிடம் உள்ள தொகை ரூ. 55.68 பைசா.

இந்த ரூபாய் 55.68 பைசா என்பது, காசோலைத்தொகையான ரூ.18.56 ஐப்போல மூன்று மடங்கு.

---------------------------------------------------------------------

2 .இதற்கான விடையை நண்பர் 'கற்போம்' பிரபு கிருஷ்ணா முதலில் சரியாக சொல்லியிருந்தார்.இதை விளக்கமாக நண்பர்கள் சார்வாகன் & நித்திலன் சொல்லியிருந்தார்கள்.இதற்கான விடை 12.

அவர்களின் பின்னூட்டம்.....

Geometric mean of 8,18
8*18=12^2

(r_1 x r_5)^(1/2) = (8 x 18)^(1/2) = 12. 

அதாவது இதற்கு Geometric mean எடுத்தாலே போதும். ஏனென்றால் எல்லா கோலிகளின் Ratio of RADIUS ஒரு Constant. அது அந்த பைப்பின் Slope -ஐப் பொறுத்து மாறும்.
 
SQ RT OF (8X18) =12. 

இன்னொரு வழியிலும் கண்டுபிடிக்கலாம்.அந்த Constant -ஐ 'C ' னு வச்சுங்க...
இப்ப  18=8 * C^4

ie.. C=SQ RT OF (3/2) .

கீழிருந்து முதல் கோலியின் ஆரம்=8
இரண்டாவது கோலியின் ஆரம் - 8 * C
மூன்றாவது கோலியின் ஆரம்- 8 * C^2
நான்காவது  கோலியின் ஆரம் - 8 * C^3
ஐந்தாவது  கோலியின் ஆரம்-8* C^4

-------------------------------------------------------------------------------------

3.இது கிட்டத்தட்ட எல்லாருமே சரியா சொல்லியிருக்கீங்க... 

A bat and ball cost $1.10 in total. The bat costs $1 more than the ball. How much does the ball cost?

இப்படித்தான் முகப்புத்தகத்தில் வந்தது..படித்தவுடனேயே நமக்கு ஒரு டாலர் என்றுதான் சொல்லத்தோணும்.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான் அட.. ஆமா என்று சொல்ல நேரிடும்.

சரியான பதில்

பேட் விலை ரூ.105.00

பால் விலை ரூ.5.00

--------------------------------------------------------------------------------------------

மூன்றுக்குமே சரியான பதிலைச்சொன்ன கணிதப்புலிகள்...


 வை.கோபாலகிருஷ்ணன் சார்








நண்பேண்டா...ராஜா
--------------------------------------------------------------------------------------------

இரண்டிற்கு சரியான பதில் சொன்ன கணித சிறுத்தைகள்...

------------------------------------------------------------------------------------------

பால்-பேட் பதிலை சரியாக சொன்ன எக்ஸ்பெர்ட்ஸ்....

sivalingamtamilsource       

JEYAKUMAR



 
T.N.MURALIDHARAN


 K.Ganapathisubramanian

  Raja

----------------------------------------------------------------------------------------------------

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

Thursday, 28 June 2012

கணிதத்தில் நீங்க பெரிய அப்பாடக்கரா?..இதற்கு விடை சொல்லுங்கள்....


   

 1.    சில நாட்களுக்கு முன்பு பேங்க் போயிருந்தபோது சின்ன குழப்பம் ஒன்னு ஏற்பட்டது.நான் காசோலையில் பணத்தை எழுதி காசாளரிடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில் எனக்கு பணம் அளிக்கப்பட்டது.நான் ஏதோ அவசத்தில் பணத்தை சட்டைப்பையில் வைத்துவிட்டு  எண்ணிப்பார்க்கக் கூட ஞாபகம் இல்லாமல் வெளியே வந்து விட்டேன்.அதிலிருந்து ஐம்பது பைசா எடுத்து பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் சாக்லட் ஒன்று வாங்கி சாப்பிட்டேன். பிறகுதான் பணத்தை சரிபார்க்காமல்விட்டது ஞாபகம் வந்தது.உடனே என் சட்டைப்பையில் உள்ள பணத்தை எண்ணிப் பார்த்தேன்.எனக்கு ஒரே ஆச்சர்யம்.நான் எழுதிக்கொடுத்த பணத்தைவிட மூன்று மடங்கு பணம் அதில் இருந்தது.நான் மிகவும் நேர்மையானவன்(?!) என்பதால் உடனே பேங்க்குக்கு திரும்பிச்சென்று விவரத்தைத் தெரிவித்தேன். பிறகுதான் அது காசாளரின் தவறால் நடந்தது எனத் தெரியவந்தது.அதாவது நான் காசோலையில் எழுதிக்கொடுத்ததை,ரூபாய்க்குப் பதில் காசாகவும்,காசுக்குப் பதில் ரூபாயாகவும்  மாற்றிக் கொடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது.(உதாரணமாக RS  32.50 என்பதை 50.32 என்று) .தன் தவறுக்கு வருந்தி,என் நேர்மையைப் பாராட்டினார் அந்த காசாளர்.அது சரி......நான் காசோலையில் எவ்வளவு பணம் எழுதிக்கொடுத்தேன்?........(அது உங்களுக்கும் காசாளருக்கும் தான் தெரியும் என மொக்கைப் போடாமல் கண்டுபிடிங்கள் பார்ப்போம்).இது கொஞ்சம் சவாலானது.

--------------------------------------------------------------------------------

 2.





 கூம்பு வடிவ பைப்பில் ஐந்து கோலிகள் போடப்பட்டுள்ளது.எல்லா கோலிகளும் பைப்பின் உட்புற சுவரைத் தொட்டுக்கொண்டுள்ளது. மேலேயும் அடியிலும் உள்ள கோலிகளின் ஆரம்(RADIUS) கொடுக்கப்பட்டுள்ளது (ie..18 & 8).

     நடுவில் இருக்கும்  சிவப்பு வண்ணம் கொண்ட கோலியின் ஆரம்(RADIUS ) என்ன?







---------------------------------------------------------------------------------------

3 .
     (இது முகப்புத்தகத்தில் வந்தது...கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது.பார்க்க சுலபமாகத்தான் தெரியும்.ஆனால் பல ஜீனியஸ்கள் இதற்கு தப்பாகத்தான் பதில் சொல்லியிருக்கிறார்கள்)

ஒரு பேட்டும் பாலும் (BAT &BALL ) சேர்ந்து 110  ரூபாய். பாலின் விலையைவிட பேட்டின் விலை  100  ரூபாய் அதிகம் என்றால்,பாலின் விலை என்ன?



-----------------------------------------------------------------------------

மேலே உள்ளவை யாவும்  மொக்கைக் கணக்குகள் அல்ல.... கொஞ்சம் கடினமானதுதான் (3 ஐத் தவிர)...விடை தெரிந்தால் அடியில் பின்னூட்டமாக இடவும்..


-------------------------------------------------------------------------------

சரி....இதெல்லாம் கண்டுபித்தால் என்ன தருவீக....இதானே உங்கள் கேள்வி?

மூன்றுக்கும் சரியான விடை சொன்னால்.,முக்கோணவியலில் முக்கி முத்தெடுத்த அண்ணன் 'பிதாகோரஸ்' பயன்படுத்திய அழகிய சுவர் கெடிகாரம்.அப்படியே பிரேம் பண்ணி வீட்டில மாட்டிக்கிங்க....


 -------------------------------------------

           இரண்டுக்கு மட்டும் விடை சொன்னால்...' பை 'யை கண்டுபிடித்த பாசத்துக்குரிய பையா 'ஆர்கிமிடிஸ்' வீட்டில் மாட்டியிருந்த மற்றொரு சுவர் கெடிகாரம்...  


 -------------------------------------------------------


ஒன்றுக்கு மட்டும் விடைசொன்னால் ஆறுதல் பரிசாக அண்ணன் அல்ஜிப்ரா பாபிலோநியஸ் வீட்டு பரணில் கிடந்த மற்றொரு சுவர் கெடிகாரம்....


 ---------------------------------------------------------------------------------------

 மேலே சொன்ன கணக்கு  தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால் வாழ்க்கைக் கணக்குனு ஒன்னு இருக்கு பாருங்க...அதை எல்லாரும் சரியா செஞ்சிடனும்....


 

டிஸ்கி..
          சரியான விடைகள் ஸ்பாம் செய்யப்படுகிறது.பிறகு கௌரவிக்கப்படுவார்கள்(!)........... 


அனைத்து நண்பர்களுக்கும்  என் நெஞ்சார்ந்த நன்றி
இதற்கான விளக்கங்களை  இங்கேசென்று படியுங்கள்.

-------------------------------------------(((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))--------------------

Monday, 25 June 2012

மனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா?

சில நாட்களுக்கு முன்பு கவிஞரும் உயிர்மை இதழின் ஆசிரியருமான திரு மனுஷ்ய புத்திரன் அவர்கள் பாடல் எழுதிய கலியுகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.தற்போதெல்லாம் பாடல் வெளியீட்டு விழா என்றாலே புதுப்பாடல்களுடன் சச்சரவும் வாக்குவாதமும் சேர்த்தே வெளியிடப்படும் என்பது எழுதாத விதியாக உள்ளது.திரைத்துறையினர்  தங்கள் மனக்குமறலை வீசி இறைக்கும் இடமாகத்தான் பாடல் வெளியீட்டு விழா மேடையை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மை.

    அப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் நடந்தது.சமீபத்தில் வெளியான குங்குமம் இதழில் 'வழக்கு
எண்' படத்தைப் பற்றி திரு மனுஷ்யப் புத்திரன் அவர்கள், அவரின் எண்ண ஓட்டத்தில் உள்ள கருத்துகளை அவருடைய பார்வையில் எழுதியிருந்தார்.இந்த விமர்சனம்தான் கலியுகம் பாடல் வெளியீட்டு மேடையில் வாக்குவாதமாக முடிந்தது.அவரின் விமர்சனத்தை கண்டித்த கவிஞர் அறிவுமதி,எங்களை கை காட்ட உங்களுக்கு அருகதை இல்லை என்ற ரீதியில் பேசியிருந்தார்.அதற்கான காணொளியையும் அதன் தொடர்பான விளக்கங்களும் கீழே...



 ( நன்றி-நக்கீரன் )



வழக்கு எண் 18/9 பற்றி திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள்  குங்குமத்தில் எழுதியது இதுதான்.

ஏழை படும் பாடு

    கொஞ்ச நாளாக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். தலைப்பு. ’ஏழை படும் பாடு’ ஒன்லைனர் சொல்லி விடுகிறேன்.ஏழைகள் ஏழைகளைக் காதலிப்பார்கள். பிளாட்பாரத்திலேயே வசிப்பார்கள். ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள்.சமூகம் எப்போதும் ஏழைகளைக் கொடுமைப்படுத்தும்.ஏழைகள் கொடுமை தாங்காமல் செத்துப்போவார்கள் அல்லது யாராவது ஒரு ஏழை ஒரு பணக்காரனையோ அரசியல்வாதியையோ போலீஸ்காரனையோ கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவான். ஆடியன்ஸ் பாப்கார்ன்,ஐஸ்க்ரீம்,ஏ.சி சகிதமாக குற்ற உணர்வுடன் கைதட்டி ஆரவாரிப்பார்கள். வசூலும் அவார்டுகளும் பாராட்டுகளும் நிச்சயம்.

ஏழைகளுக்கும் நிறைய சுக துக்கங்கள் இருக்கின்றன.அவர்களுக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது.வறுமையைத் தவிரவும் அவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.அதிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.நாம் அதையெல்லாம் எப்போது பார்க்கப் போகிறோம்? எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம்? வாழ்க்கை என்பதும் கலை என்பதும் பணம்,வறுமை என்கிற ஒற்றைப்டையான கறுப்பு- வெள்ளை சித்திரமல்ல. நமது குற்ற உணர்வை சொரிந்துகொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் அவர்களுக்காக செய்யப் போவதுமில்லை.

வழக்கு எண் 18/9 இந்த ஆண்டின் சிறந்த படமாகக் கருதப்படுகிறது...

  
  சினிமாவும் பத்திரிக்கையும் கலைத்தாயின் தவப்புதல்வர்கள்.சினிமாவுக்கு முன் பத்திரிகை தோன்றிற்று. அந்த வகையில் சினிமாவுக்கு பத்திரிக்கைகள் அண்ணன்கள்.தம்பி தவறு செய்யும் போது அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தவறை சுட்டிகாட்டுவது எந்தவிதத்தில் குற்றமாயிற்று?

    சினிமாவை பற்றி ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை சமூக நோக்கோடு இருக்க வேண்டும்.அது சொல்லிய விசயத்தை விட சொல்ல வந்த விஷயம் என்ன என்பதை ஆராயும் பொறுப்பு பத்திரிக்கையாளனுக்கு கண்டிப்பாக இருக்கிறது.புரியவில்லை என்றால்..பல வருடங்களுக்கு முன் ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இங்கே ஒரு உதாரணமாக தெரியப்படுத்த விழைகிறேன்.
 
    1996 -97  ல் வந்த படம் என்று நினைக்கிறேன்.கார்த்திக் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் கிழக்குமுகம். 'உள்ளத்தை அள்ளித்தா' படமும் இதுவும் ஒரே நாளில் வெளியாக,இரண்டு படத்தயாரிப்பாளர்களும் கோர்ட் படியேறி, கடைசியில் உள்ளத்தை அள்ளித்தா முதலில் வெளிவர,அதற்கடுத்த வாரம் இந்தப்படம் வெளியானது.பிரச்சனை
இதுல்ல....
 
      நான் சொல்லப்போவது கிழக்குமுகம் படத்தின் கதையைப் பற்றிதான்.இந்தப் படத்தின் கதைக்கரு தீண்டாமை ஒழிப்புப் பற்றியது.தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டுவதுடன்,தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவன் உயர்சாதிப் பெண்ணை ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுவதுடன் அதற்கான தீர்வையும் இந்தப் படம் மக்களுக்கு ஒரு பாடமாகக் கற்பிக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய டைரக்டரை கேட்டிருந்தால் இப்படி
த்தான் விளக்கியிருப்பார்.

      இந்தப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தொலைக்கட்சியில் ஒரு காட்சியை தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.கல்லூரியில் படிக்கும் கார்த்திக்-ன் தங்கையை,உடன் படிக்கும் சக மாணவர்கள் ஜாதியைச் சொல்லி கேலிசெய்து விடுவார்கள்.கல்லூரிக்குச் செல்லமாட்டேன் என்று தன் அண்ணனான கார்த்திக்கிடம் தெரிவிக்க,அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட கார்த்திக், அவரை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்கு செல்வார்.அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை நிறுத்தச்சொல்லிவிட்டு,தன் தங்கையுடன் மேடை ஏறுவார் கார்த்திக்.அங்கே உள்ள கரும்பலகையின் மேலே"ஜாதிகள் இல்லையடி பாப்பா..."எனத் தொடங்கும் பாரதியின் புரட்சி வரிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் காண்பித்து ஒரு உபதேசம் கொடுப்பார் கார்த்திக்.இறுதியில் அந்த மாணவர்கள் தலைகுனிவதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.அந்தக்
காட்சி அவ்வளவு உணர்ச்சி மயமாய் இருக்காது.ஆனால் ஏதோ ஒரு சமுதாய பிரச்னையை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அந்தப் படத்திற்கு சென்றேன்.

  அந்தப்படத்தின் கதை இதுதான்.படத்தின் நாயகன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன்.பிணம் எரிக்கும் வெட்டியான் தொழில் செய்பவன்.அவனின் தங்கை படிக்கும் கல்லூரியில்தான் படத்தின் நாயகியும் படிக்கிறாள்.தன் தங்கை அவளால் 'ஈவ்டீசிங்' செய்யப்பட,அதன் மூலம் நாயகனுக்கும் நாயகிக்கும் மோதல் வந்து கடைசியில் காதலாக மாறிவிடுகிறது.அந்த நாயகி,உயர் சாதிக் குடும்பத்தை சேர்ந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகள்.

  இந்த விஷயம் அவருக்கு தெரிய வர,ஒரு தாழ்த்தப்பட்டவனா தனக்கு மாப்பிளையாக வருவது என்று கடும் சினம் கொண்டு,அவர் சாதியை சேர்ந்த இன்னொருவருக்கு நிச்சயம் செய்து விடுகிறார்.இதற்குப் பிறகுதான் கதையில் திருப்புமுனை.நாயகியின் தாய் மாமனுக்கும் நாயகனுக்கும் வேறொரு விசயத்தில் பிரச்சனையாகி பஞ்சாயத்து வரை செல்ல,அப்போதுதான் நாயகனின் பிளாஷ்பேக் சொல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது..அது அவர் ரத்தத்தில் சமஸ்கிருதம் 'ஊறி' இருப்பதாக தெரிய வரும் போது.......

      பிளாஷ்பேக்கில் அவர் ஒரு பிராமணர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தன் தாய் தந்தையை இழந்து விட,ஒரு அரிஜன பெண்ணால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன்தான் நம் நாயகன்.இந்த விஷயம் பஞ்சாயத்து தலைவருக்கு தெரிய வர,பிறப்பால் பிராமணான நாயகனுக்கு தன மகளை கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறார்.இதற்கிடையே நாயகனின் தங்கையை நாயகியின் தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட அந்த அரிசனப் பெண் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இறுதியில் நாயகனு
க்கும் நாயகிக்கும் திருமணம் நடக்கிறது.சுபம்.

     இந்தப் படத்தைப் பார்த்தபிறகு என்னுள் எழும்பிய ஆதங்கம் இதுதான்... இவர்கள் சொல்ல வந்த கருத்து என்ன?..

     ஹரிஜன் என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒருவன் பிறப்பால் பிராமிணன் என்றால் அவர் உயர்சாதிக்காரன்...அல்லது  உன்னை ஹரிஜன் என்று நினைத்தேன் ஆனால் உன் உடம்பில் ஓடுவது பிராமின ரத்தம் அதனால் நீ உயர்ந்தவன் என்றா?... ஒருவேளை இயக்குனர் கதை சொல்லும்போது இப்படி சொல்லியிருப்பார்."முதல்ல நம்ம ஹீரோவை ஒரு ஹரிஜனா காண்பிக்கிறோம்.அப்ப ஆடியன்சுக்கு நம்ம ஹீரோமேல வெறுப்பு வரும். கிளைமாக்சில நம்ம ஹீரோ ஹரிஜன் அல்ல அவன் ஒரு பிராமின் என்று 'டிவிஸ்ட்'வைக்கிறோம்.அப்போ ஆடியன்சுக்கு நம்ம ஹீரோ மேல நல்ல மதிப்பு வந்திடும்".இது தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் அடிமட்டதிற்கு கொண்டு செல்லும் கதைக் கருவல்லவா? அவர்கள் இடத்திலிருந்து இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா? தாழ்த்தப் பட்டவர்களை இதைவிடக் கேவலப்படுத்தி  யாரும் கதை எழுத முடியாது.பிறப்பால் தான் ஒரு பிராமிணன் என்று தெரிந்தப்பிறகும் ஒரு ஹரிஜனப் பெண்ணை மணந்தால்,அதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்...

 இந்தப்படம் வெளிவந்தபிறகு பிரபல பத்திரிகைகளில் இதைப்பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்களா என்று தேடினேன்.வழக்கம் போலவே..பாடல்கள் நன்றாக வந்திருக்கலாம்...ஹீரோயின் முதிர்ச்சியாக தெரிகிறார்...ஹீரோவின் தங்கையின் ஜாக்கெட்டில் ஒரு பட்டன் மிஸ்ஸிங்..காமெடியில் சுவாரஸ்யம் இல்லை என்ற ரீதியிலே இருந்தது.
 
   ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிப்பது தணிக்கை அதிகாரிகள் அல்ல. அவர்களின் நோக்கமே,இரட்டை அர்த்த வசனம் வருகிறதா,தாவணி விலகுகிறதா,சரச சல்லாப கட்சிகள் இருக்கிறதா என்பதை கவனிப்பதில் இருக்குமேத் தவிர,அந்தப் படத்தின் கதைக்கரு மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கும் வகையில் இருக்காது. அவர்கள் விட்ட அந்தப் பணியைத்தான் பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள்.

    தற்போதுள்ள காலகட்டத்தில்,படம் வெளியாகி அடுத்த சில மணித்துளிகளில் கடுமையான விமர்சனங்கள் பதிவுலகில் பதிவேற்றப்படுகிறது.அதில் ஒரு சில அறிவுஜீவிகளின் விமர்சனங்கள் இவ்வாறாகத்தான் இருக்
கிறது."படம் செம மொக்க","உலக மகா கடி","ஒரு முழம் கயிறு இருந்தா அங்கேயே மாட்டிருப்பேன்". அதற்கு வரும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும்  "நல்லவேளை..படத்திற்கு போலாம்னு இருந்தேன்.. என்னைக் காப்பாற்றிடீரே.." .இது போல விமர்சனங்கள் வேண்டுமானால் அந்தப் படத்தை பாதிக்கலாம்.

    ஆனால் இந்த மூன்றாந்தர வார்த்தைகள் எதுவும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாகத்தான் திரு மனுஷ் அவர்களின் விமர்சனம் இருக்கிறது. வழக்கு எண்- சமீபத்திய தமிழ் சினிமாவின் ஆச்சர்யம். போற்றிக் கொண்டாடப் படவேண்டிய படம்தான்.அதற்காக அதை விமர்சிக்கவே கூடாது என்பது உலகத் தரம் வாய்ந்த தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விசயமா?.. உண்மையச் சொல்லப்போனால்..படம் நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னாலும் பணிச்சுமை காரணமாக படம் பார்ப்பதை தள்ளி வைத்த நான், திரு மனுஷ் அவர்களின் விமர்சனத்தைப் படித்தப் பிறகுதான் அன்று இரவே அந்தப் படத்தைப் பார்த்து முடித்தேன்.ஒரு நல்ல,ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனம் எந்த ஒரு சினிமாவின் வெற்றியையும் கண்டிப்பாக பாதிக்காது என்பதே  என் கருத்து.... 



 -----------------------------------(((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))-------------------------













Friday, 22 June 2012

கின்னஸ் சாதனையை நோக்கி ஒரு தன்மானத் தமிழன்....T.ராஜேந்தரின் மறுபக்கம்



புதுக்கோட்டை இடைத்தேர்தல்...ஆளுங்கட்சி மீண்டும் அமோகமாக அறுவடை செய்திருக்கிறது.!

         தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவல், வெற்றிக்களிப்பின் உற்சாக மிகுதியில் இருந்த அம்மாவின் நெஞ்சில் நஞ்சுண்ட ஈட்டியாக பாய்ந்தது.கடந்த ஒரு வருடகாலமாக தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகள் மீது ஏவப்பட்ட விலையேற்றத் தாக்குதலினாலும்,அத்தியாவசியத் தேவைகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பற்றாக்குறை வன்முறையாலும் மக்கள்,அரசின் மீது கடுஞ்சினம் கொண்டிருப்பதாக அம்மாவுக்கு தகவல் கிட்டியது.

   முப்பத்திரெண்டு மாண்புமிகுகளும் புதுக்கோட்டை மக்களை மிகுந்த அக்கறையோடும் அதீத சிரத்தையோடும் 'கவனி'க்கும் பொருட்டு களத்தில் இறங்கி தீயாய் வேலை செய்தாலும் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைத்தாலே பெரிய  விஷயம் என்று செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தது.அதிமுகவின் பினாமி கட்சியான சமக வின் அகில அன்டத்தலைவர் சித்தப்பு சரத்குமார் கூட நெஞ்சில் தெம்பும் கையில் சொம்புமாய் பிரச்சாரத்துக்கு சென்றவர் வாடிய முகத்துடன் தான் திரும்பி வந்தார்.புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என்பதால்,இந்தியாவே இதன் முடிவை உற்று நோக்கிக் கொண்டிருக்க,கேப்டனோ மிகுந்த உற்சாகத்தில் தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமோ என்று அறிவாலயம் கலக்கத்தில் களையிழந்திருந்தது.தாளா துயரத்திற்கு ஆளான அம்மா,வலுவிழந்த முகத்தோடு இடிவிழுந்த மரமாய் இடிந்து போய் உட்கார்ந்திருக்க, கன நேரத்தில் தோன்றிய அந்த யோசனை அவர் கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சமாய் மின்னியது. அதுதான் அவர் நம்பியிருந்த ஒரே பிரமாஸ்திரம்.அது...சகலகலாவல்லவரும் அகில உலக லட்சிய திமுகவின் லட்சியத் தலைவருமான விஜய T.ராஜேந்தர்.!

    கடைசிநேரத்தில் ரத்தத்தின் ரத்தங்களுக்கு உற்சாகத்தைப் பீய்ச்சி,துவண்டு போன அவர்களின் முகத்தை செங்குத்தாக நிறுத்தி,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய விஜய T.ராஜேந்தர் அவர்களை பேட்டியெடுக்க அவரது இல்லத்திற்கு விரைந்தோம்.வெற்றிக் களிப்பில் யாரிடமோ அலைபேசியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்.ஒரு கை, அலைபேசியை அடக்கி வைத்திருக்க,மறு கை காற்றை தாறுமாறாக கிழித்துக்கொண்டிருந்தது.எதிர் முனையில் வறுபடும் அந்த அப்ரானிக்காக கொஞ்சம் பரிதாபப் பட்டுவிட்டு,நெஞ்சில் தைரியத்தை வைத்துக் கொண்டு "சார் ........ " என்றோம்.

  அசுர வேகத்தில் 'U' டேர்ன் அடித்து அவர் திரும்ப,கருங்காட்டு தேசத்தில் விருட்டென்று இடுட்டில் அடித்த மின்னல் போல் மொத்தப் பற்களும் எட்டிப்பார்க்க "வாயா...கார்டனிலிருந்து வரீங்களா ..." என்றவர்,எங்கள் கைகளில் சூட்கேஸ் எதுவும் இல்லாததைக்கண்டு கொஞ்சம் வாடிப்போனார்.

  "என்னய்யா கட்சியில சேர வந்திருக்கீங்களா? " இவரின் அடுத்தக்கேள்வி எங்கள் கபாலத்தை கடுமையாகத் தாக்க,இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் நிலைகுலைந்து போனோம்.தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தற்போது அப்படியென்ன அவசியம் என்று தேற்றிக்கொண்டு,வந்த விஷயத்தை நாசுக்காகத் தெரியப்படுத்தினோம்.சற்றுத் தயங்கியவரை மீண்டும் மடக்கினோம்.

    "சார்...புதுக்கோட்டை வெற்றியே உங்களால்தான் சாத்தியமானது என்று 'நமது எம்ஜியார்' ல தலையங்கமே எழுதியிருங்கலாமே சார்..." என்று அவிழ்த்து விட,மீண்டும் அந்த கருங்காட்டு தேசத்தில் மின்னலுடன் உற்சாகமும் பீறிட, எங்களை உள்ளே அழைத்து
ச் சென்று பேட்டிக்கு தயாரானார்.


-

'நாங்கள் வரும்போது போனில் யாரிடமோ தீவிராமா சண்டைப் போட்டீங்களே.. யாரு சார்?'

"சண்டையெல்லாம் ஒன்னுமில்லையா....அடுத்த மாசம் உகாண்டாவில உள்ளாச்சி தேர்தல் வருதாம்.எங்க ஆதரவு யாருக்கும் இல்லைன்னு அறிக்கை விட்டுகிட்டிருந்தேன்.போன மாசம் கூட சவுத் ஆப்ரிக்காவில கூட சட்ட மன்றத் தேர்தல் நடந்தது.மொதல்ல தனித்து போட்டினுதான் முடிவு பண்ணினோம். ஆனா தேர்தல் கமிசனின் செயல்பாடு எங்களுக்கு திருப்தி இல்லாததால கடைசி நேரத்தில போட்டியிலிருந்து விலகிட்டோம்"

(இவர் பேசிக்கொண்டிருந்த போது உள்ளேயிருந்து வெளிப்பட்ட குறளரசன், "அப்பா..உங்க செல்போன் ஒரு வாரமா வேலை செய்யிலன்னு சொன்னீங்களே. நான் கடைக்குத்தான் போறேன்.. .'.போன குடுங்க.." என்று கேட்க,கடுப்பான டி.ஆர்,கொசுவை அடித்து துரத்துவது போல் அவரை துரத்தி விட்டார்.) 

திடீர்னு அம்மா மேல என்ன சார் கரிசனம்?

(கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டவராய்..) "ஏய்..உன்னப் பெத்ததும் ஒரு அம்மா.. என்னப் பெத்ததும் ஒரு அம்மா..அவ அலைவா காடு கரை கம்மா... அவ இல்லனா எல்லாம் இங்க சும்மா ...போதுமாயா ங்கொம்மா .."

சார்...சார்...வெயிட்..நான் கேட்டது முதல்வர் அம்மா....

(தன் சட்டைப் பையை எட்டிப் பார்க்கிறார்.உள்ளே காந்தியார் சிரிக்க,இவருக்கு கண் கலங்குகிறது..நா தழுக்கிறது.)..இந்த உலகத்தில் ஒரு அணுவும் அசையாது அம்மாவின்றி....நான் என்றும் அவர் வீட்டு வாசலில் கிடக்கும் பன்றி...மறக்க மாட்டேன் என்றென்றும் நன்றி...

 

புரிஞ்சிடுச்சு சார்...அப்பறம் உங்க குடும்பத்தில இருக்கிற ஒவ்வொருத்தரின் பெயரை மாற்றிக்கிட்டே வாறீங்களே..ஏதாவது வேண்டுதலா? 'சிம்பு...' நல்லாத்தானே இருந்தது எதுக்கு எஸ் டி ஆர்?

( நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்...தனது ஏழாம் அறிவை யுஸ் பண்ணி எதோ சொல்லப்போகிறார் என்பது மட்டும் தெரிந்தது ) யோவ்...நான் யாரு?....டி ஆரு.என் பையன் யாரு 
எஸ் டி ஆரு... நாளைக்கு என் பையன் பெரிய சூப்பர் ஸ்டார்  ஆன  பிறகு அவன் படத்தில இப்படித்தான் பஞ்ச டயலாக் இருக்கும். My father is டி ஆரு...My name is எஸ் டி ஆரு...Iam a சூப்பர் ஸ்டாரு.....எனக்கு இங்க போட்டி யாரு...எப்படியா இருக்கு இது? அடுத்ததா குறளரசனுக்கு TTR -னும் இலக்கியாவுக்கு ECR -னும் பேரை மாத்தி இதோட சேர்த்திடுவேன்.ஒரு தன்மானமுள்ள தமிழனா இதைவிட வேற என்ன செய்ய முடியும்.


எங்களுக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு சார்...நீங்க இதுவரைக்கு எந்தப் பெண்ணையும் தொட்டதே இல்லைன்னு... ஐ மீன் தொட்டே நடிச்சதில்லைன்னு பேசிக்கிறாங்க..ஆனா உங்க பையன் தொடாத பெண்ணே இல்லைன்னு.. அதாவது தொட்டு நடிக்காத பெண்ணே இல்லேங்கிராங்கிலே.. ஏன் இந்த முரண்பாடு?

(ரொம்ப பீல் பண்ணுகிறார்...) இப்ப நான் ஒன்ன ஒரு கேள்வி கேட்கிறேன்...உன் பையன் உன்னை மாதிரி இருக்கனா? இந்த உலகத்தில உள்ள எல்லா அனிமல்சும் போடுற குட்டிகள் எல்லாம் அவுங்க பாதர் மாதிரி இருக்கா?.. ஏன்யா வயித்தெரிச்சல கெளப்புற.. என்னாலதான் முடியில.அவனாவது என்ஜாய் பண்ணட்டுமே...விடுயா   

அதெப்படி சார் ஒரே படத்த ஒன்பது தடவை ரீமேக் பண்ணுனீங்க? ஓடிப்போன தங்கச்சி..விட்டுட்டு போன காதலி..குடிகார அப்பா....செண்டிமெண்ட் அம்மா... இந்த நாலு கேரக்டர வச்சே பத்து வருஷம் தமிழ் நாட்டையே படுத்தி எடுத்தீங்களே..ஆனால் இப்ப நீங்க காமெடி பண்ணினா மக்கள் அழுவுறாங்க.. செண்டிமெண்ட் சீனில விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க..மக்களின் இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணும்னு நெனைக்கிறீங்க?

ஏன்யா.. இப்ப டிவி  காரங்க மட்டும் என்ன பன்றாங்க? என் கதையை  காப்பி பண்ணி சீரியலா போட்டுத் தள்ளுறாங்க.அதைப் பார்த்து அழுததே போதும்னு என் படத்த பார்க்க வரமாட்டேங்கிறாங்க.சரித்திரம் வாய்ந்த என் கதையை திருடியதற்காக நான் போடப்போறேன்  எல்லா டிவி சேனல் மீது கேஸ்...அதுக்குப் பிறகு உங்களுக்கு புடுங்கப்படும் பியுஸ்...அப்பத்தெரியும் இந்த டி ஆரோட மாஸ்..

அது எப்படி சார் அடுக்கு மொழி வசனத்தை அப்படியே அடுக்கிகிட்டேப் போறீங்க..இதுக்கு தனியா ஏதாவது கோர்ஸ் படிச்சீங்களா? இல்ல..இது உங்கள் பரம்பரை ஜீனில் இருந்து வந்ததா? இதை மக்கள் கற்றுக் கொள்வதற்கு சுலப வழி இருக்கா? 

( புன்னைகைத்துக் கொண்டே அந்த கருங்காட்டை மெல்ல நீவி விடுகிறார்..) இது ஒரு பெரிய கலையா....அதுக்கு ஸ்பெசல் பயிற்சி வேணும். எல்லோராலையும் இது முடியாது.இப்ப உதாரணமா..செருப்பு னு எடுத்துக்க... அதிலிருந்து என்னென்ன வார்த்தையை உருவாக்குறேன் பாரு...(சொடக்கு போடுகிறார்..) செருப்பு,நெருப்பு,கருப்பு,பருப்பு,அரிப்பு...இப்ப இத வச்சி ஒரு கவிதை நடையில வசனம் பேசுறேன் பாரு.. நான் இருக்க மாட்டேன் எப்போதும் உன் காலுக்கு செருப்பு...தண்ணி தெளிச்சா அணைஞ்சிடும் நெருப்பு...அதனால் ஆகிடும் அதன் கலர் கருப்பு...அப்பறம் வேகாது உன் பருப்பு...இதப் பார்த்து உனக்கு எதுக்கு பொச்சரிப்பு? இப்ப நான் ஒரு சவால் விடுறேன்....இது மாதிரி வசனத்தை இப்ப உள்ளவங்களால எழுத முடியுமா?


 
சான்சே இல்ல சார்..யாராலையும் முடியாது.பின்னிடீங்க சார்.இன்னொரு முக்கியமான கேள்வி.அரட்டை அரங்கத்தில சின்னப் பசங்களை வைத்து கொடுமைப் படுத்துவதாக மனித உரிமை கமிசனுக்கு யாரோ புகார் செய்திருக்கிறாங்கலாமே? அதனால் உங்கள் மீது சிறுவர் வன்கொடுமை சட்டம் பாயப்போவதாக பேச்சு அடிபடுகிறதே ?


 இது யாரோட சதியென்று எனக்கு தெரியும்.நாக்கை மடித்து பேசினால் நீ பெரிய அரசியல்வாதியா? என் கூட மேடையில ஒத்தைக்கு ஒத்தை நின்னு உன்னால பேசமுடியுமா ? எத்தனை பிகர் வந்தாலும் அத்தனையும் கரக்ட் பண்ணுவான்  என் பையன் சிம்பு...அதுல ஒன்னையாவது தேத்த உன் பையனுக்கு இருக்கா தெம்பு... அப்பறம் என்னா ம......க்கு என் கூட வம்பு?

சார்.. நீங்க இப்போதெல்லாம் வாத்தியக் கருவிகள் இல்லாமலே மியுசிக் போடுறீங்க.அதுக்கு என்ன காரணம்? பணப் பற்றாக்குறையா? இல்ல தீராத உடம்பு வலியா..? இல்ல யார் மீதாவது கோபமா?  ஏன் இந்த விபரீத முயற்சி...?

யோவ்...இந்த உலகத்தின் முதல் வாத்தியக் கருவி என்ன தெரியுமா?.. வாய் தான்.சொரனையே இல்லாத மாட்டுதோலில இவ்வளவு சத்தம் வரும்போது...நான் ஒரு தன்மானமுள்ள, தமிழ் உணர்வுள்ள தமிழன்யா.என் தோலில் எவ்வளவு சத்தம் வரும்? உயிரே இல்லாத நாலு நரம்பு உள்ள வீணையில டொயிங்..டொயிங்.. னு சத்தம் வருதுனா..தமிழ் ரத்தம் ஓடுற லட்சக்கணக்கான நரம்பு உள்ள உடம்புயா இது...இதுல இசைஅப்படியே அருவி மாதிரி கொட்டும்...போன வருஷம் கூட சவுத் ஆப்ரிக்கா காட்டுவாசிகளுக்காக ஒரு மியுசிக் ஆல்பம் போட்டேன்.அது செம ஹிட்.அடுத்ததா அமேசான் காட்ல இருக்கிற ஆதிவாசிகளுக்கு ஆல்பம் போடப் போறேன்.அது ஆகும் சூப்பர் ஹிட்.தட் ஈஸ் மை நெக்ஸ்ட் டார்கெட்..


போன வருஷம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன "ஆப்பரிக்க காட்டில் அரைச்ச மாவு" ஆல்பத்திலிருந்து சிறு பகுதி..
(ஒரு முன் எச்சரிக்கை.. இதயம் பலகீனமா உள்ளவர்கள்,பயந்த சுபாவம் உள்ளவர்கள்,குழந்தைகள்,கர்பிணிப் பெண்கள் இந்த விடியோவைப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கைப் படுகிறார்கள்.ஏனையோர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு பிறகு பார்க்கலாம்.)
 

 
(மீண்டும் ஒரு தடவை சொல்லிபுட்டேன்...உங்களுக்கு எது ஆனாலும் அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது)
 
விரைவிலே வெளியாகப் போகும் "அமேசான் ஆற்றில் தொவைச்ச துணி" ஆல்பத்திலிருந்து சில பகுதிகள்..


(இதைப் பார்த்தபிறகு உங்களுக்கு திருநீறு பூசி வேப்பிலை அடிக்க நேர்ந்தால் அதன் முழு பொறுப்பு டி.ராஜேந்தர் அவர்களையே சாரும்)
 
அடுத்தது அரசியல் சம்மந்தமான கேள்வி...ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் லதிமுக கட்சியை ஆரம்பித்து தேர்தல் முடிந்தவுடன் கலைத்து விடுகிறீர்கள். உலக அரசியல் வரலாற்றிலேயே ஒரே கட்சியை பத்து தடவை கலைத்து அதே பெயரிலே பத்து தடவை தொடங்கியதற்காக உங்கள் கட்சி கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாமே?

ஆமாயா.. நானும் கேள்விப்பட்டேன்.இது என் அரசியல் ராஜதந்திரத்திற்காக கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.ஒவ்வொரு தமிழனும் இதை எண்ணி பெருமைபட வேண்டும்.(கண்கலங்குகிறது..) இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியல......


 ((நல்லாத்தான் போய்கிட்டு இருந்ததுங்க..என் கூட கேமரா தூக்கிகிட்டு வந்த பையன்  என் காதுல கிசுகிசுத்து, "இத கேளுங்கண்ணே.." அப்படீன்னான்.நானும் சாதரணமாகத்தாங்க கேட்டேன்...)
 
சார்...கடைசியா ஒரு கேள்வி...புதுக்கோட்டை இடைத்தேர்தலில்,கடைசி நேரத்தில அம்மாவுக்கு ஆதரவா கடுமையா பிரச்சாரம் செஞ்சீங்க.நீங்க போறதுக்கு முன்பு வரை அதிமுக வேட்பாளர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்றும்,தேமுதிக வேட்பாளருக்கு ஐயாயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காதென்ற நிலைமையும் இருந்ததாமே.நீங்க பிரச்சாரம் செய்ததால்தான் இப்படி ஆயிடிச்சுன்னு பேசிகிறாங்களே..உங்கள் பிரச்சாரத்தின் போது பயந்துபோயி வீட்டுக்குள் பதுங்கிய  நிறைய பெண்கள் கடைசி வரை ஓட்டுப் போட வரவே இல்லையாமே....உங்களாலதான் வாக்குப் பதிவில் கூட்டமே இல்லன்னு சொல்றாங்க..இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

(அடப்பாவமே.. மனுஷன் இப்படி டென்சன் ஆவாருனு நாங்க எதிர்பார்க்கவே இல்லீங்க...அவரு கர்ர்ரர்ர்ர்ர் ...புர்ர்ர்ர் னு உறுமினதை வீடியோவா போட்டிருக்கோம்.பாத்து பக்குவமா பாருங்க....)




 
( இனிமே இன்டர்வியு அது இதுன்னு வீட்டுப் பக்கம் வந்தே...உன் கால வெட்டிப் புடுவேன்டாருங்க......)
------------------------------------------------------------((((((((((((((((((())))))))))))))))))))----------------

Monday, 11 June 2012

கலகலவென்று சிரியுங்கள்-கலக்கலான காமெடி கும்மி.


 ---------------------------------------------------------------X--------------------------------------------------



----------------------------------------------------------------X---------------------------------------------------





 -------------------------------------------------------------------X-----------------------------------------------



--------------------------------------------------------------X------------------------------------------------------

 ----------------------------------------------------------------------X----------------------------------------------




 ----------------------------------------------------------X--------------------------------------------------------


 ---------------------------------------------------------------X-----------------------------------------------------



------------------------------------------------------------X---------------------------------------------------------
-

 --------------------------------------------------------X-------------------------------------------------------




-----------------------------------------------------((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))---------------------------------------

Wednesday, 6 June 2012

மனைவி போனால் என்ன? மச்சினிச்சி இருக்கே.!!! வெளங்குமாயா இந்தக் கலாச்சாரம்?



    
  இப்போதெல்லாம் தினசரி செய்திகளைப் படித்தாலே தலையே சுத்துதடா சாமி...சமூகம்,அரசியல்,சினிமா தொடர்புடைய  செய்திகளைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துத் தொலைக்கிறது,நம் கலாச்சார சனாதனத்தை கட்டுடைக்கும் சில நிகழ்வுகள். அது சரி,கலாச்சாரம் என்பது என்ன?அதன் வரையறைதான் என்ன? நமக்குக் கற்பிக்கப்பட்ட கலாச்சார விழுமியங்கள் நம்மைக் கட்டுப்படுத்துகிறதா?

           விஞ்ஞானமும்,தொழில் நுட்பமும் அதி அற்புத வளர்ச்சி கண்டுள்ள இந்த யுகத்தில் நம் கலாச்சார கட்டமைப்பின் விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம்கூட ஏற்படலாம்.இங்கே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நாம் எடுத்துக்கொள்ளும் விதம் அதைத்தான் உணர்த்துகிறது.

     கள்ளத்தொடர்பு,தகாத உறவு,கண்ணியமற்ற நடத்தை,கட்டுப்பாடற்ற வாழ்க்கை இவைகளின் மூலம் உருவாகும் பிரச்சனைகள்,இதன் இறுதி வடிவமாய் விழும் உயிர்ப்பலிகள் எல்லாமே ஊடகங்கள் மூலம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது.இது மிகப்பெரிய கலாச்சார சீர்கேடு என்று அதே ஊடகத்தாலும் சமூக அக்கறையுடைய சில ஆர்வலர்களாலும் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டாலும்,இது எனது தனிப்பட்ட விஷயம் என்று உதாசீனப்படுத்தும் தறுதலைகள் இருக்கும் வரை இதற்கு முற்றுப்புள்ளி மட்டுமல்ல,முதல் புள்ளி கூட வைக்க முடியாது.

    'கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக்கொலை....' 'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கழுத்து நெரித்துக் கொலை....' 'மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி...' ஏதோ கவிதை போல் எதுகை மோனையோடு மேலே சொல்லப்பட்டவை யாவும், சர்வ சாதரணமாக நம் நாட்டில் நடக்கும் சம்பிரதாயம் போன்ற நிகழ்வுகள். இச்சம்பவங்கள் எல்லாமே காவல்துறை மூலம் ஊடகத்திற்கு தெரியப்படுத்தப் படுவதால்,நிச்சயமாக இது  வழக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது மட்டும் ஊர்ஜிதமாகிறது.  

   ஆனால் நம் சமூகத்தால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஊடகங்களின் பார்வைக்கு வெறும் செய்தியாக மட்டும் போன ஒரு சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது இதுதான்.நம் நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது போல் கலாச்சாரத்திருத்தம் என்று ஏதாவது வந்துவிடுமோ?
      
   இப்படி என்னை ஆதங்கப்பட வைத்த சம்பவம் இதுதான்."காதலனுடம் அக்கா ஓடிப்போனதால் மணப்பெண்ணான தங்கை." எப்போதாவது நடக்கும் இந்தச்சம்பவம் தற்போது அடிக்கடி நடக்கிறது.நேற்று வேலூரில் நடந்திருக்கிறது இந்தச் சம்பவம்.ஓடிப்போன அந்தப் பெண்ணின் வயது 17. பலிகடாவாக்கப்பட்ட அவள் தங்கையின் வயது 13.எட்டாம் வகுப்பு படிக்கிறாராம்.திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு இவளது அக்கா,காதலனுடம் ஓடிப்போய் விட்டாளாம்.
     
       கிராமங்களில்,திருமணத்திற்கு முதல் நாளோ அல்லது சில நாட்களுக்கு முன்போ இவ்வாறு நடந்தால்,உடனே ஊர் பஞ்சாயத்து ரகசியமாகக் கூட்டப்படும்.சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் கூட தீர்த்து வைக்க முடியாத வழக்குகள் எல்லாம் கனநேரத்தில் இங்கே பைசல் பண்ணப்படும்.இது மாதிரி சம்பவங்களுக்கு எல்லாம் ஒரே தீர்ப்புதான்.இந்த பஞ்சாயத்தாரின்  தீர்ப்பாக, ஓடிப்போனவளின் குடும்பத்தில் அடுத்த நிலையில் இருக்கும் பெண்ணுக்கு,தன் அக்காவுக்கு கணவராக வரவேண்டியவரிடம் சேர்ந்து வாழ ஆயுள் தண்டனை வழங்கப்படும்.  

     ஏதோ 25 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த வழக்குக்கு தீர்ப்பு கிடைத்தது போல் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டு,அடுத்த வேலைக்கு தயாராகி விடுவார்கள்.இது கிராமங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும்.

 சரி....தண்டிக்கப்பட்ட அந்தப்பெண் என்ன மனநிலையில் இருப்பார்? உடலாலும் உள்ளத்தாலும் தாம்பத்திய வாழ்க்கைக்கு முழுமையாக தயாராகி இருப்பாளா? நேற்று வரை தன் அக்காவின் கணவர் என்ற மதிப்பில் வைத்துப்  பார்க்கப்பட்டவரை,இன்று கணவர் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க முடியுமா? அந்தப் பெண்ணுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லையா? ஒருவேளை அவள் மனதில் கட்டியிருந்த,எதிர்காலத்தைப்பற்றி மிகப்பெரியக் கோட்டை சிதறி விடாதா? தனக்கு மனைவியாக வரப்போகிறவளின் தங்கை தனக்கு மகள் ஸ்தானமல்லவா? அவளுடன் எப்படி படுக்கையை பகிர்ந்துக்கொள்வது?..இது போன்று எழும் வினாக்கள் எல்லாமே "மானம் மரியாதை" என்கிற ஒரே விசயத்திற்காக குழிதோண்டி புதைக்கப்படுகிறது.

     மற்ற கலாச்சார சீர்கேடுக்கெல்லாம் கொதித்தெழும் ஊடகங்கள்,பெற்றோர்களின் சம்மதத்துடன் நடந்தாலும்,இந்த நிகழ்வுகளை ஒரு செய்தியாக பத்திரிகைகளில் வெளியிடாமல்,ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்ற ரீதியில் ஏன் வன்மையாக கண்டிக்கக்கூடாது? என்பதுதான் என்னுளிருக்கும் ஆதங்கம்.

Saturday, 2 June 2012

திருந்தவே திருந்தாதா தினமலர்...?

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு சென்று திரும்பியபோது வழியில் ஒரு சுவரொட்டியில் இருந்த வாசகம் என் கண்ணில்பட்டு உற்று நோக்கவைத்தது. அது ஒரு கண்டன வாசகம்.கருப்பு வண்ணத்தில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. "இனி நீ தினமலர் அல்ல..தினமலம்".இந்தக் கீழ்த்தரமான செயலை செய்தது யார்? எதனால் எழுதப்பட்டது? என்று ஆராய்வதற்கு அது ஓன்றும் ஆச்சர்யமான விசயமாக தெரியவில்லை. ஆனால் ஓன்று மட்டும் சர்வ நிச்சயம்.எந்த ஒரு தினசரி நாளிதழும் இந்த அளவிற்கு கண்டனத்துக்கு உட்பட்டிருக்காது.

  இணைய ஊடக வெளிகளில் கிட்டத்தட்ட முதல் இடத்தில் இருக்கும் தமிழ் இணையதளம்.அலெக்ஸா தரவரிசையில் உலக அளவில் இரண்டாயிரத்துக்கு கீழ்,இந்திய அளவில் ஒன்பதாவது இடம் என்று இதன் இணையவேர் உலகம் முழுவதும் மிக ஆழமாக ஊடுருவியிருக்கிறது.அதேவேளையில்,தான் ஒரு 'உண்மையின் உரைகல்' என்று சூளுரைக்கும் இதன் தரத்திற்குப் பின்னால் மிகப்பெரிய கேள்விக்குறி இடவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

     பொதுவாகவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெரும்பான்மையான தினசரி நாளிதழ்கள் சுதி தப்பாமல் தாளம் போடுவது உலக இயல்புதான்.ஆனால் அந்தக் கட்சி சார்ந்த பத்திரிக்கையே பொட்டலம் கட்டி பார்சல் அனுப்பும் அளவுக்கு நடுநிலை நாளிதழ் என தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஒரு பத்திரிகை, சுதி,ஜதி,லயம் மாறா ஜால்ரா போடுகிறதென்றால் அது 'பொய்மையின் பொறைக்கல்' தினமலர் தான் என்பது மிகையல்ல.
   
   நமது எம்ஜியார் வெர்சன் -9 ஆக தன்னை உலக அளவில் பிரபலப்படுத்திக் கொள்ளவும்,அம்மாவின் அடி வருடிகளின் ஆசீர்வாதத்தைப் பெறவும்,இணைய வெளி வாசர்களை அதிகப்படுத்திக் கொள்ளவும் இது கையாளும் தந்திரம்,ஒரு பாரம்பரியமிக்க பத்திரிக்கைகளுக்கென்றே இருக்கும் நியாயமானத் தகுதிகளைக்  கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

இதன் இணையதளத்தில் ஒரு செய்தியோ அல்லது கட்டுரையோ வெளியிடப்படுகிறதென்றால் அதன் ஆயுட்காலம் ஒருநாள்.சமூக பிரச்சனைப் பற்றிய பதிவென்றால் இரண்டு நாள்.ஆனால் கடந்த நான்கு நாட்களாக வெறும் கற்பனையில் வடிக்கக் கூடிய ஒரு செய்தியை வெளியிட்டு அதன் மூலம் யாரையோ திருப்திப்படுத்தும் துர்பாக்கிய நிலைமைக்கு இது தள்ளப்பட்டிருக்கிறது.  

      அப்படியென்ன சமூகம் சார்ந்த பிரச்சனை அது....?.அதன் வழ(ள)மையான வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்...

"கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை"

அரசியல் புலனாய்வுப்பழம் தின்று,கிசு கிசு கொட்டைப்போட்ட பல இரண்டாம் தரப் பத்திரிக்கைகளுக்குக் கூட எட்டாத இந்த யோசனை,அன்றாட  நிகழ்வுகளையும் செய்திகளையும் வெளியிடும் ஒரு தினசரிப் பத்திரிக்கைக்கு எப்படி உதித்தது?
      
இந்தப்பத்திரிக்கையின் தலையாயப் பணியே,அன்றாட நிகழ்வுகளை ஏதோ ஒரு வழியில் கருணாநிதியுடனும்,அவரது குடும்பத்தினருடனும் சம்மந்தப்படுத்தி அசிங்கமாக எழுதி அதன் மூலம் ஜென்ப சாபல்யம் அடைவதே!.ஒருவேளை,இப்படியொரு யோசனை இவர்கள் வெளியிட்டப் பின்பு தான் கருணாநிதிக்கே உதித்திருக்கும்.

ஒருவேளை "கருணாநிதியின் பிரதமர் ஆசை" என்று தலைப்பிட்டிருந்தால் கூட ஓரளவு நம்பும்படியாக இருந்திருக்கும்.அதிலும் இவர்கள் கருணாநிதியைக் கேவப்படுத்தி எந்த செய்தி வெளியிட்டாலும் உடனே சொம்பைத்தூக்கிக் கொண்டு கமென்ட் போட ஒரு கூட்டம் தலைதெறிக்க ஓடிவரும்.செய்தியில் என்ன இருக்கிறது என்று கூட படிக்க நேரமிருக்காது இவர்களுக்கு.ஆனால் வாய்க்கூசும் அளவுக்கு கமென்ட்களை அங்கே வாந்தி எடுத்து விட்டு ஓடி ஒளிந்து விடும்.உடனே இவர்களும் 'எலியைப்பிடிக்க பதுங்கியிருக்கும் பூனை போல, 'அது மாதிரி' கமென்ட்களைகளை மட்டும் 'லபக்கி' பிரசுரித்து விட்டு,அடுத்த எலி வரும் வரைக் காத்திருப்பார்கள்.ஆனால் நடுநிலைமையான,நியாயமான கமெண்டுகளுக்கு இங்கே அனுமதி இல்லை. அதிலும் சிங்கப்பூரிலிருக்கும் ஒரு பக்கிதான் இதன் வாடிக்கையான கமென்டாளர்.கலைஞரைத் தாக்கியோ அல்லது அம்மாவைப்போற்றியோ எந்த செய்திவந்தாலும் கழிவறையில் இருந்தாலும் இவர் மூக்கு வியர்த்து விடும். பாதியிலே ஓடிவந்து இதிலும் கொஞ்சம் கக்கிவிட்டு போனால் தான் அவருக்கும் நிம்மதி. இவர்களுக்கும் ஆத்மதிருப்தி.இவ்வாறாக வெளியிடப்படும் செய்திகளும்,அடிவருடிகளின் கமெண்டுகளும் மேலிடத்தை ஓரளவு திருப்தி படுத்திவிட்ட செய்தி இவர்களின் செவிகளுக்கு எட்டிய பிறகுதான் இந்தப் பதிவு முற்றிலுமாக நீக்கப்படும்.

    அதிலும் இதன் முதல் பக்கத்தில் வெளியிடப்படும் கார்ட்டூன் எல்லாமே கருணாநிதியை சம்மந்தப்படுத்தியே இருக்கும்.இதற்கு மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவதாக தகவல்(நாங்களும் எழுதுவோம்ல..)இன்னும் சில மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிறது.கண்டிப்பாக இப்படியொரு தலைப்பை அந்த பத்திரிகையில் நீங்கள் எதிர்பார்க்கலாம். "கருணாநிதியின் அமெரிக்க ஜனாதிபதி ஆசை".

அதன் உள்செய்தி இவ்வாறு இருக்கலாம்."வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக நமக்கு செய்தி கிடைத்தது.அதற்காக ஆறுபேர் கொண்ட எம்பிக்களின் குழு நேற்று அமெரிக்க சென்று மோனிகா லெவின்ஸ்கி மூலம் பில் கிளிண்டனை சந்தித்தது.அவர் ஷாக்காகி கட்டிலில் சாய்ந்தவர்தான் (தனியாத்தான்.....). இன்னும் எழுந்திரிக்கவேயில்லை.இந்த வயதில் கருணாநிதிக்கு இது தேவையா?"  

இந்த செய்தியப் படித்த சொம்புகள்,உடனே "ஆமா இது கிழத்திற்கு தேவையா ?" என்ற ரீதியில் கக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  


சமகால மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போவதுதான் ஊடகம்.ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த நேரம். தமிழமே கொந்தளிப்பில் இருந்தது.தமிழ் அச்சு ஊடகங்களனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக சீற்றத்துடன் எழுதித் தள்ளியது.ஆனால் இவர்கள் மட்டும் பிரபாகரனைப்பற்றி தவறான செய்திகளை, "துரோகி கருணா"வின்  பேட்டியின் மூலம் பாகம்,பாகமாக வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

கடந்த வருடம் கேரளாவில் ரயிலில் சென்ற ஒரு கல்லூரி மாணவியை, பாலியல் துன்புறத்தல் செய்யும் நோக்கோடு,ரயில் இருந்து  கீழே தள்ளிவிட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நிலையிலும் அந்தப்பெண்ணை  பலாத்காரம் செய்து கொன்ற ஒரு பிக்பாக்கட் பொருக்கி காமுகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.அவன் நம் மாநிலத்தை சேர்த்தவன் என்பதால்,ராஜீவ் கொலையாளிகளிக்கு போராடும் தமிழர்கள் இதுக்கு ஏன் போராடவில்லை என்று "நமது சிறப்பு நிருபர்" மூலம் ஒரு கட்டுரை வெளியிட்டு,பல பேரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது.

இப்படி மக்களின் எண்ணங்களோடு ஒத்துப்போகாத விசயங்களை வெறும் பரப்பரப்புக்காக எழுதி,இது என்ன தமிழ்மணத்தின் சூடான செய்திகளில் இடம்பிடிக்கப் போகிறதா?

கிராமங்களில்,செழுமையான மரங்களின் கிளைகளில் திடீரென்று ஒட்டுண்ணி வகை தாவரம் தொற்றிக் கொள்ளும்.நாளடைவில் இது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அந்த மரத்தையே அழித்துவிடும்.அதற்காக முன் கூட்டியே அந்தக்கிளைகளை வெட்டி எறிந்து விடுவார்கள்.அதுபோல இந்த நாளிதழில் "நமது சிறப்பு நிருபர்"என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஒட்டுண்ணிகளை அப்புறப்படுத்தினால் தான் 'உண்மையின் உரைகல்' உண்மையிலேயே உரக்க ஒலிக்கும்.

----------------------------------------------(((((((((((((((()))))))))))))))))))))))))))))))------------------------