நம்ம செந்தப்ளர் சீமான் அண்ணாச்சி தமிழ் கூறும் நல்லுலகே பெருமைப்படத்தக்க ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுருக்கிறார். அது என்னான்னு சொன்ன உடனையே எல்லோரும் கைதட்டி ஆதரவு தெரிவித்து தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாத்தனும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.
அதாவது "தோற்றோர் இயல்" எனும் தமிழ் சொல்லே "Tutorial" என்னும் ஆங்கில சொல்லாக மாறி இருக்கிறது. இதுதான் அந்த அரிய கண்டுபிடிப்பு....சரி தட்டினது போதும்.. அடுத்த மேட்டருக்கு வருவோம்.(அப்போ ' TUTOR ' என்கிற சொல் ' தோற்றார் ' என்கிற சொல்லிலிருந்து வந்ததா என கேள்வி எல்லாம் எழுப்பக் கூடாது.) இதையடுத்து அண்ணனின் அடுத்த ஆராய்ச்சியைப் பற்றி விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல்கள் இதோ...
FACIAL - பேசா இயல் ( அதாவது இது போடும்போது யாரும் பேசாமல் இருப்பதால்)
BACTERIAL - பாக்க முடியா இயல்...
PRINCIPAL -பிரிச்சி மேய்ஞ்ச ஆள்.(இதுவே காலப்போக்கில் பிரிஞ்ச ஆள் என மாறி கடைசியில் பிரின்சிபால் ஆனது)
VICTORY -வெற்றியைத்தான் அப்படி விரிச்சி சொல்றானுவ....
DONKEY -தாங்கி ( பொதி சுமக்கும்போது தாங்கி தாங்கி நடப்பதால் தமிழில் தாங்கி என அழைக்கப்பட்டு பிற்பாடு ஆங்கிலத்தில் டாங்கி என மாறியது.)
MONKEY - மரத்துக்கு மரம் தொங்குவதால் தமிழில் 'மர தொங்கி' என்பது பின்பு ஆங்கிலத்தில் மங்கி ஆனது.
-இன்னும் அண்ணனின் ஆராய்ச்சி தீவிரமாக போய்க்கொண்டிருப்பதாக தகவல்.
இதாவது பரவாயில்ல.. நம்ம ஃபரூக் அப்துல்லா அதைவிட அருமையான மேட்டர கண்டுபிடிச்சிருக்கார். அவர் என்ன சொல்றார்னா ஒரு ரூபாய் இருந்தாலே போதும் நம் இந்தியாவில் வயிறு நிறைய சாப்பிடலா ங்கிறார். இது இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணினாலும் ஏன் அப்படி சொன்னார் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாக்கணும்..
சரி இதப்பத்தி நம்ம விஐபி எல்லாம் என்ன சொல்றாங்கன்னு கேக்குரதுக்காக ஒரு ரவுண்டு வந்தேன்.
ஜெயா:.இதில் ஒன்றும் ஆச்சர்யம் இருப்பதாக எனக்குப் படவில்லை. என் ஆணைப்படி... மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய நான் பிறகு என் ஆணைப்படி... எப்படி ஐந்தே வருடத்தில் அறுபது கோடிக்கு மேல் சொத்து சேர்க்க முடிந்தது என கேள்வி கேட்ட கோர்ட்டையே என் ஆணைப்படி நான் வாய்தா மேல வாய்தா வாங்கி இழுத்தடிக்க வில்லையா...? பிறகு என் ஆணைப்படி....
கேப்டன்: (நாக்கை நான்காக மடிக்கிறார்.) எவண்டா சொன்னது ங்கொய்யால. ஒரு ரூபாயை வச்சு சரக்குக்கு சைடு டிஷ் கூட வாங்க முடியாதுடா ங்கொம்மால. இதுல புல் மீல்ஸ் சாப்பிட முடியுமா.. தமிழ் நாட்டுல மொத்தம் 8658 சாப்பாடு கடை இருக்கு. அதுல நான் வெஜ் 6854. வெஜ்....................(குதிச்சிடுடா கைப்புள்ள...)
கமல்:ஒரு ரூபாய் என்பது மிகச்சிறிய தொகையாக இருந்தபோதிலும் அது நம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், அனைவருக்கும் ஒருவேளை உணவு கிடைப்பதரிதான இந்த அசாதாரண சூழலில் ஒரு ரூபாய்க்கான உணவை கற்பனையாக வடிக்கும் பட்சத்தில்,அது உணவுத் தேவையை எந்த அளவுக்கு நிறைவு செய்யும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டிய காலகட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து யோசிக்க வேண்டியது இங்கே மிக கட்டாயமாகிறது. இன்னும் சொல்லப்போனால்.... (என்னது இன்னுமா...? )
கவுண்டமணி செந்தில்
'அண்ணே ... ஒரு ரூவாய்க்கு சோறு தர்றாங்கலாமே.. நான் வேணா வாங்கியாரவாண்ணே...? '
'யாரு..நீயி ..? டேய் கோமுட்டித்தலையா நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்... நான் ஒரு ரூவா கொடுப்பேன்.நீ வாங்கி தின்னுட்டு கீழ கெடக்கிற ஒரே ஒரு பருக்கையை எடுத்து வந்து ஒரு ரூவாய்க்கு இதாண்ணே கொடுத்தாங்கன்னு சொல்லுவ.. இந்த டகால்டில்லாம் என்கிட்டே நடக்காது மகனே . ஓடிப்போயிடு நாயே...'
கடைசியா நம்ம தலகிட்ட போனோம்...
ஒரு மணிநேரமா எப்படி கொடைஞ்சும் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரல. ஆனா கண்ணு மட்டும் சிவந்து போறத வச்சி தல ரொம்ப கோபமா இருக்கிறத உணர முடிஞ்சது. ஒரு கட்டத்துக்கு மேல பொறுமை இழந்து...
'இந்தாயா ஒரு ரூபாய்...இதுல போயி ஒரு புல் மீல்ஸ் வாங்கி வா...'
'ஒரு ரூபாய்க்கு எங்க தல புல் மீல்ஸ் கிடைக்கும்..?'
'தெரியுதுல...பின்ன எதுக்கு இங்க வந்து கேக்குற....?'
'இல்ல..அந்த பாரூக்..............'
'ஆமாயா....அந்த ஆளுதான் சொன்னான்.. டெயிலி ஒரு வேலையும் செய்யாம வெட்டியா சோறு திங்கிறேன்ல. அந்த வயித்தெரிச்சல்ல குத்திக் காமிக்கிரான்யா அந்த ஆளு.. உண்மை தெரிஞ்சிடுச்சுல... கிளம்பு கிளம்பு ."