Thursday 4 July 2013

நீ ஏன்டா செத்த இளவரசா...




'முடிவு திவ்யாவின் கையில்தான் உள்ளது'..'முடிவு திவ்யாவின் கையில்தான் உள்ளது'..என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இறுதிமுடிவை திவ்யா எடுத்த அடுத்த சில மணி நேரங்களில் இளவரசன் தன் இறுதி மூச்சை நிறுத்திவிட்டான்.

தன் தாயின் பொட்டழிய காரணமாகி விட்டேனே என நெஞ்சுக்குள் விம்மிக்கொண்டிருந்தவர், தற்போது தானே தன் பொட்டை அழித்துக் கொண்டு விட்டார். இளவரசனின் இறப்புக்கு திவ்யா காரணமே இல்லையென பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. இளவரசனோடு ஆறு மாதங்களுக்கு மேல் குடும்பம் நடத்தியவர். இளவரசன் எந்த அளவுக்கு தன் மீது பிரியம் வைத்திருக்கிறான் என திவ்யாவுக்கு மட்டுமே தெரியும். மாண்புமிகு சமூக நீதிகாத்த தமிழ்
க்குடிதாங்கி ஐயா ராமதாஸ் சொன்னது போல இது ஒன்றும் நாடகக் காதலல்ல.. ஆறுமாத தாம்பத்யம் சலித்து விட்டதென்று இளவரசன் திவ்யாவைக் கைவிடவில்லை. மாறாக திவ்யா மனது மாறி எந்த நேரமும் தன்னை மீண்டும் கைப்பிடிப்பாள் என காத்திருந்தான்.. நம்பியுமிருந்தான்.

ஆனால் தாலி போனாலும் பரவாயில்லை,ஒரு தலித் தன் இனப்பெண்ணோடு இணைந்து வாழக்கூடாது என இந்த கேடுகெட்ட சமூகம் எடுத்த வெறித்தனமான முடிவால் ஒரு உயிரல்ல.... இரண்டு உயிர் இன்று நம்மோடு இல்லை.

தன் வாழ்க்கைத் துணையை சுயமாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அந்த சின்னஞ்சிறிய இதயத்திற்கு பலமிருக்கலாம். சாதியா அல்லது குடும்பமா..., அம்மாவா அல்லது கணவனா, காதலா அல்லது சமூகமா... , வாழ்வா அல்லது வாழாவெட்டியா என பல குழப்பங்களை அந்தப் பெண்மீது இந்த சமூகம் திணித்து அவரை உளவியல் ரீதியாக நடை பிணமாக்கியிருக்கிறது.

இளவரசனின் முடிவு,இனி வாழ்நாள் முழுவதும் திவ்யாவை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்லும். அல்லது இந்த சாதி வெறிப்பிடித்த சமூகம் அவரை குற்றம் சொல்லியே சாகடிக்கும்.இரண்டு உயிர்கள் போனதோடு இருக்கட்டும். இனி இந்த ஊடகங்களும் சமூகமும் திவ்யாவிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் அவரையாவது காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்...

ஒடுக்கப்பட்ட சமூகமெல்லாம் ஓங்கி அடித்தவனை ஏறி மிதித்து விட்டு உசந்து நிக்கயில.....
நீ ஏன்டா செத்த இளவரசா...

ஜாதி வெறிபிடிச்ச நாய்களெல்லாம் ஊர் குடியை கெடுத்துவிட்டு உசிரோடு இருக்கையில...
நீ ஏன்டா செத்த இளவரசா...



---------------------------------------((((((((((((((())))))))))))))))))-----------------------------------------

20 comments:

  1. சாதி வெறி பிடித்த தமிழ் சமூகத்தின் மற்றுமொரு துன்பியல் வடு, மனம் நோகின்றது. ஏண்டா இப்படி சாதி வெறிப் பிடித்த வாழ வேண்டியவர்களின் வாழ்வை சீரழிக்கின்றனரே !

    ReplyDelete
    Replies
    1. இந்த சனியன்களை எத்தனைப் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது சார்.. தற்போது மருத்துவர் ஐயா நிம்மதியாக தூங்குவார் என நினைக்கிறேன்

      Delete
  2. மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.
    http://www.hooraan.blogspot.com/2013/07/blog-post.html

    ReplyDelete
  3. இந்த கொடுமை எப்போது தீரப் போகிறதோ...? மிகவும் வருந்த வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. பீறிட்டுக்கொண்டு வருகிறது கண்ணீர்... சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

      Delete
  4. இளவரசனின் சாவுக்கு சாதி காரணமோ, அதே அளவு ஊடகமும் காரணம்.

    அதை விட இளவரசனின் சாவுக்கு பின் குறிப்பிட சாதியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பத்திரிகையில் படித்தேன். அந்த சாதிப் பேய்களை சட்டம் கொல்லுமா?????
    மனிதத்தை சாதி கொன்று விட்டது.. ச்சே... ச்சே... ச்சே....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பிரகாஷ்... இரண்டு பேரையும் ஒன்றாக அமரவைத்து கவுன்ஸ்லிங் செய்திருந்தாலே இந்த பிரச்னையை சுமூகமாக முடித்திருக்கலாம். ஏதோ இருவரும்தான் இரண்டு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருவருக்கும் உளவியல் ரீதியான அழுத்தத்தைக் கொடுத்தது ஊடகங்கள்தான்..

      Delete
  5. இளவரசன் சாகவில்லை. கொல்லப்பட்டுள்ளான்

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்... ஒருவேளை தற்கொலை என்றாலும் அது கொலைதான்...குற்றவாளி இந்த சமூகம்தான். காதலுக்காக எத்தனையோ தற்கொலைகள் நடந்தாலும் இதை அந்த வகையில் சேர்க்க முடியாது. இது தன் இனத்துக்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து அந்த வெறிப்பிடித்த கும்பல் நகர்த்திய ஒவ்வொரு காயும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள்.

      Delete
    2. இது தற்கொலை அல்ல. சாதி வெறியார்களால் இளவரசன் செய்த கொலை. சாதி வெறியார்கள் பட்டாசு கொழுதுவதாக எங்கேயோ வாசித்தேன். ஒரு சமுதயமே இவ்வாறு இருப்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

      Delete
    3. அந்த கும்பல் எதிர்பார்த்தது இதுதானே... இனி அந்த சமூகத்தில் யார் தலித் இனத்தவரை காதலித்தாலும் உதாரணமாக காட்ட அவர்களுக்கு ஒரு சம்பவம் கிடைத்துவிட்டது. இது கொலைதான் என்றால் இன்னமும் அவர்களுக்கு சந்தோசம்தான்.என் சாதிப்பெண்ணை காதலித்தவனுக்கு வந்த நிலைமையைப் பார்த்தாயா எனக் கொக்கரிப்பார்கள். முறையான நீதிவிசாரணை நடத்த வேண்டும்.

      Delete
  6. அரசியல் ஆதாயத்திற்காக சாதி எனும் விஷ ஆயுதத்தை அந்த கும்பல் கையிலெடுத்திருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் சம்மட்டியால் அடிகொடுப்பார்கள்..

    ReplyDelete
  7. இனி இந்த ஊடகங்களும் சமூகமும் திவ்யாவிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் அவரையாவது காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்...
    >>
    நிஜம்தான், அவள் தப்பான முடிவெடுத்து அதை செயல்படுத்தாம யாராவது தாயன்போட கவனிச்சுக்கிட்டா நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி..நிச்சயமாக எல்லோருடைய வேண்டுதலும் இதுதான்

      Delete

  8. பள்ளி கூட மாணவர்களே எவனும் படிக்க வேணாம். முதல்ல சாதி வெறியை ஒழிப்போம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக இருக்கும் போது மடியும். அந்த பொண்ணு ஒத்துகிட்டா , அப்புறம் அது காதல். இழுத்து கிட்டு ஓடி கல்யாணம்.


    ஆஹா ...
    கஷ்டப்பட்டு படிக்க வேணாம்
    சுய கட்டுப்பாடு வேணாம்
    பெத்தவங்களை மதிக்க வேணாம்

    நெட்டுல நாயிங்க போடுற கமெண்ட்ஸ் போதும் . வயிறு நிரம்பிவிடும்.

    பஞ்ச் வசனம் வேணுமா ?

    பின்னல் சுத்து .....
    விடாமல் துரத்து .....
    இஸ்துகினு ஓடு .....

    ReplyDelete
  9. சாதி இரண்டுழிய வேறில்லை என்ற சொன்னவர்கள் வாழ்ந்த மண்ணில் இரண்டு சாதிகள் என்ற கற்பிதத்தில் முட்டிக்கொள்வது சரியா உண்மையில் இங்கே ஒரு சாதி பெரிதும் இழந்துள்ளது. இன்னொரு திமிர் பிடித்த சாதியோ இழவிலும் எதையோ சாதித்த நினைப்பில் உள்ளது. இங்கே நான் இழந்த சாதியென்று சொல்வது பெண் இனத்தை. வெட்கமாக வேதனையாக இருக்கிறது நானுன் ஒரு ஆண் என்று சொல்ல. பெண் இனமே எங்களை மன்னித்துவிடுங்கள். சகோதரர்களே இதுவே நமது கடைசி முட்டாள்தனமாக இருக்கட்டும் சாதி வெறிக்கு முற்றுபுள்ளி வைக்க உறுதி ஏற்போம்.

    ReplyDelete
  10. உங்களது 100வது பாலோவர் ஆகிய நானும் உங்கள் கருத்தை நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நூறாவது பாலோவர் ஆனதுக்கு நெஞ்சார்ந்த நன்றி சார்..

      Delete
  11. நூறாவது என்று கொண்டாட வேண்டிய பல விஷயங்கள் நம்மிடம் இருக்கும்போது, இந்த சூழ்நிலையில் நாம் கொண்டாட என்ன பெரிய விஷயம் சாதித்து விட்டோம்?,இப்போதும் சாதியும் அதை சார்ந்த சில தலைவர்களும், தாம் வளர்த்து வந்த சில முட்டாள்தனங்களை எப்படியாவது இந்த இழவிலும் விளம்பரப்படுத்தவும் வியாபாரப்படுத்தவும் விக்ரமாதித்யனின் வேதாளம் போல துணிகின்றனர். அவர்களின் முகத்திரையை கிழிக்கத்தான் இன்று இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது இப்போது நம் அவசிய தேவை சமூக அமைதி தயவு செய்து அதை நோக்கி செல்ல அடியெடுத்து வைக்க முயல்வோம்.

    ReplyDelete