Saturday 12 October 2013

வருகிறது 'தொப்புள் பாதுகாப்பு மசோதா' (18+)


வ்வளவு நாட்களாக மெல்ல மெல்ல மடிந்துக்கொண்டிருக்கும் நம் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை எப்படி பேணிக்காப்பது என்பதில் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டிருந்தோம்.ஆனால் அதைவிட பெரிய சமாச்சாரம் ஓன்று இருப்பதை மறந்துவிட்டோம். அது... இந்த சினிமாக்காரர்களிடமிருந்து நம் பெண்களின் தொப்புளை பாதுகாப்பது.

கடந்த வாரம் ஒரு மனுஷன்... உண்மையச் சொல்லப்போனால் ஒரு நிஜ போராளி, இந்திய அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அதைப்பற்றி யாரும் இங்க பேசக்காணோம். பேஸ்புக்லேயும் டிவீட்டர்லேயும் ஒருத்தனும் பொங்கக் காணோம். ஆனால் நஸ்ரியா தொப்புளுக்கு டூப் போட்டுட்டாங்களாம். உடனே நம் இளைய சமுதாயம் கொதித்து எழுந்திருக்கிறது. அக்கவுண்டே இல்லாதவனெல்லாம் இதுக்காக புதுசா அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பொங்கிட்டு போயிருக்கானுவ. கேட்டால், ஒரு நம்பகத்தன்மை வேண்டாமா என கொதிக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் 'ரிங்கா ரிங்கா' பாட்டுல வர்ற அந்த 'பின் போர்சன்' நஸ்ரியாவோடதுதான் என்பதை சட்டப்படி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு இருக்கிறது என பீதியைக் கிளப்புகிறார்கள்.

கடந்த சில நாட்களாக எத்தியோப்பியாவில் எழுச்சிப் பேருரையாற்றிவிட்டு, நைஜீரியாவில் நடைப்பயணம் மேற்கொண்டு , சோமாலியாவில் சோலாவாக கர்ஜித்துவிட்டு அப்படியே வரும்வழியில் அமெரிக்காவில் ஆயில்பாத் எடுக்கச் சென்ற வாக்கிங் புயல் வைகோவிடம் அமெரிக்கா அதிபர் ஒபாமாவே இதைப்பற்றி விசாரித்ததாக சங்கொலியில் செய்தி வந்திருக்கிறது.  
 

விஷயம் இவ்வளவு சீரியஸாக இருக்க,எழுச்சித்தலைவி பேரவை மீண்டும் எழுச்சிப் பெற இதைவிட வேற சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் உடனடியாக எழுச்சித்தலைவியிடம் தொடர்பு கொண்டபோது அவரும் கடும் கொந்தளிப்பில் இருந்தார். நானெல்லாம் அந்த !#%%#%&&*&%#&^&^ காட்சியிலேயே டூப் போடாமல் நடிக்கிற ஆளு. ஆஃப்ட்ரால் இந்த தொப்புள் சீனுக்கு டூப் போட்டு கேவலப்படுத்திட்டாங்களே... இதை உடனடியாக தலைமைச்செயலகம் சென்று மனு கொடுத்து, முதல்வரை நடவடிக்கை எடுக்கச்சொல்லி வற்புறுத்தணும் என ஆவேசப்பட்டார்.

"என்னது அம்மணி ஒரு தொப்புள் மேட்டருக்கு போயி மனு கொடுக்கணுமா... ?"

"கல்லுல செதுக்கின ஒரு சிலைக்கே ஆண்மை இல்லைன்னு ஒருத்தன் மனு கொடுக்கிறப்போ, ஏன் இதுக்கு கொடுக்கக் கூடாது..?"

"என்னது அம்மணி அரசியல்லாம் பேசுது..?"

"ஆமாய்யா...... உலகம் போற்றும் திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவரை கௌரவிக்கிறதுக்காக குமரிக்கடலில் சிலையை கட்டி வச்சா, அவர் கோணலா நிக்கிறாரு, பேக் சைடு பெரிசா இருக்கு, முன்னால சிறுசா இருக்கு, வெக்கப்பட்டு நிக்கிற மாதிரி இருக்கு, ஆண்மையில்லாம இருக்கு, ஆகம விதிப்படி இல்ல, அதனால கருணாநிதி மேல நடவடிக்கை எடுக்கணும்னு மனு கொடுக்கலாம். ஆனா தொப்புளை பாதுகாக்கணும்னு மனு கொடுக்கக் கூடாதா..? "

அம்மணி இம்புட்டு பேசினதுக்கு அப்புறம் சும்மா இருக்கக் கூடாதுனு பேரவை சார்பா மனு கொடுக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்.. முதல்வரிடமிருந்து உடனடியாக அறிக்கை வந்துவிட்டது.

"என் ஆணைப்படி ஆட்சிப்பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழ் நாட்டில் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து ரவுடிகளும், கொடுங்குற்றம் புரிபவர்களும் ஆந்திராவுக்கு துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்கள். அன்று முதல் என் ஆணைப்படி தமிழ் நாட்டில் ஒரு குற்றச்செயலும் நடைபெறாமல் பாதுகாப்புமிக்க மாநிலமாக திகழ்கிறது. அப்படியிருக்க, தாய்மையின் புனிதமாக கருதப்படுகிற தொப்புளை சில சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்தி வந்துள்ள தாக தெரியவருகிறது. பம்பரம் விடுவது,கத்தியை விட்டு ஆட்டுவது, ஆம்ப்லேட் போடுவது போன்ற சில்லறைத்தனமான விளையாட்டு களில் ஈடுபடுவதாக அறிய நேரிட்டது. அடுத்ததாக சிலர் அங்கே கிரிக்கெட் போட்டி நடத்தவிருப்பதாகவும், சிலர் மாநாடு நடத்தப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாமல் இருக்க வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 'தொப்புள் பாதுகாப்பு மசோதா' நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."  

தாயுள்ளம் கொண்ட முதல்வரிடமிருந்து அறிக்கை வந்த பிறகு அது சம்மந்தப்பட்ட நபர்கள் கிலிப்பிடித்துப் போய் கதறி அழுவதாக நமக்கு தகவல் கிடைத்தது. விரைவிலே அவர்கள் ' தொடா ' சட்டம் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.

தில் முதலில் மாட்டப்போவது  தவசி அய்யானு பேசிக்கிறாங்க. பதினெட்டுப்பட்டிக்கு பஞ்சாயத்து பன்ற பெரிய மனுஷனான இவர், சங்கரபாண்டி வாத்தியாருனா எல்லாரும் பள்ளிக்கூட வாத்தியாருனு தப்பா நினைச்சிகிட்டு இருக்க, அவர் சிலம்பம் கத்துக்கொடுக்கிற குஸ்தி வாத்தியார் என்கிற வரலாற்று உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன இந்த வில்லேஜ் விஞ்சானி, ஒரு கன்னிப் பொண்ணு தொப்புள சுத்தி பம்பரம் விட்டிருக்கிறாரு. அதுவும் சின்னப்பசங்களை கூட சேத்துகிட்டு... அது என்ன பஞ்சாயத்து திடல்னு நெனைச்சியாயா பம்பரம் வுடுறதுக்கு ...?


காலேஜ் பொண்ணுங்கள 'ஈவ் டீசிங்' பண்ணினதுக்கே மெட்ராஸ் சிட்டியில பஸ் மேல தாவித்தாவி அந்த ரவுடிகளை வெளுத்தெடுத்த இந்த ஒருநாள் முதல்வர், பப்ளிக்கா ஒரு பொண்ணு தொப்புள்ல கத்திய வுட்டு ஆட்டியிருக்காரு.  ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா என்ன செய்வீங்க மிஸ்டர் ஜென்டில்மேன்...?



நானெல்லாம் தோசைக்கல்லுல ஆம்ப்லேட் போட்டாலே ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும்... இல்லனா ஆப்ரிக்கா மேப் மாதிரி இருக்கும். ஒரு குண்டக்க மண்டக்க சர்ஃபேஸ்-ல அதுவும் ஆயில் இல்லாம, பக்காவா ஆம்ப்லேட் போட்டு எடுக்கிறார்னா எவ்ளோப் பெரிய தில்லாலங்கடியா இருக்கணும்..! ?  யோவ்..அது என்ன இண்டக்சன் ஸ்டவ்னு  நெனைச்சியா..?   ஏற்கனவே ஊர்ல கரண்டு பிரச்சனை வேற.. இத பாத்துட்டு அவனவன் சொந்தமா முயற்சி பண்ணினா என்ன ஆவுறது..?




12 comments:

  1. பதிவும் படக்காட்சிகளும் புதுமையாக அருமையாக உள்ளது ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துக்கு முதற்கண் நன்றி பாஸ்

      Delete
  2. வணக்கம்
    எது நடக்கிறதோ அது நன்றாக நடந்தால் சரி...பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..

      Delete
  3. கற்பனைக்கு அளவே இலாமபோச்சு

    ReplyDelete
  4. very good time pass.... wonderful imagination.... keep it up...

    ReplyDelete
  5. நையாண்டி படத்தை விட நையாண்டி சூப்பரோ சூப்பர் !
    கடைசியா ,நன்றி நஸ்ரியா ன்னு போட்டிருக்கலாம் !

    ReplyDelete
  6. நல்ல வேளை தொப்புல்ல ,இதையெல்லாம் உட்டதோடு நிறுத்தினாங்களே...

    ReplyDelete