Thursday, 31 October 2013

ஆரம்பம்....தல தி மாஸ்...! ( விமர்சனம்)



பொதுவாகவே 'தல' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஆழ்வார், ஆஞ்சநேயா, ஏகன் போன்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. இளையதளபதி படம் எப்போதாவது ஊற்றிக்கொள்ளும் என்றால், தல படம் எப்போதாவது ஹிட்டடிக்கும். ஆனால் இப்போது வரை தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகப்பெரிய ஓபனிங் அஜித்திற்கு இருக்கிறது.  ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்கிறது. வெளிநாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

அஜித்- நயன்தாரா, ஆர்யா- நயன்தாரா  இரண்டு கூட்டணியுமே சமகால தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம்வந்த கூட்டணிகள். இந்த மூன்றுபேரும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்..?  மூன்று  மணிநேர ஆக்சன் பேக். இறுதிவரை தொய்வில்லாமல் அட்டகாசமாக செல்கிறது.தயங்காமல் சொல்லலாம், தல-க்கு இன்னொரு மங்காத்தா..!

ஹாலிவுட் படத்தை சுட்ட மாதிரியும் இருக்கணும்... சுடாத மாதிரியும் தெரியனும். இது விஷ்ணுவரதனுக்கு கைவந்த கலையாச்சே... SWORDFISH படத்தை அப்படியே எடுத்தால், 'அய்யய்யோ இது அட்ட காப்பியாச்சே..' என சொல்லிவிடுவார்கள் என்பதால் அங்கங்கே சுட்டிருக்கிறார். அதே கதைக்களம்.  ஹாலிவுட் பிஸ்ஸாவுடன் நம்மூர் கரம் மசாலாவை தூவி காரம் சாரமாக பரிமாறியிருக்கிறார்.

நம்மூர் அரசியல்வாதிகள் கோடிகோடியாக ஊழல் செய்து சுவிஸ் பேங்கில் போட்டிருக்கும் பணத்தை எடுத்து இந்தியன் ரிசர்வ் பேங்க்-க்கு கொடுப்பதுதான் படத்தின் ஒன் லைன். அதற்காக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட, அதேநேரத்தில் பட வெளியீட்டுக்கு பிரச்சனை வராத ஊழலாக இருக்கவேண்டும் என யோசித்திருக் -கிறார்கள். வாஜ்பாய் காலத்தில் நடந்த சவப்பெட்டி ஊழலை கொஞ்சம் மாற்றி 'புல்லட் புரூவ் ஜாக்கெட்' வாங்கியதில் நடந்த ஊழலாக மாற்றியிருக்கிறார்கள்.

இதில் எங்கே SWORDFISH வருகிறது..? சுவிஸ்பேங்க் அக்கவுண்டை ஹேக் செய்து பணப் பரிமாற்றம் செய்வதாக திரைக்கதை அமைக்கும்போது இந்தப்பெயர் அடிப்பட்டிருக்கலாம். அயன் படத்தில் சூர்யாவிடம் ஒரு இயக்குனர் பேங்க் ராப்பரி சீன் வர்ற மாதிரி படம் சொல்லு என்பார். அவர் சொன்ன பட்டியலில் இந்தப் படமும் வரும். அதுமாதிரி ஒரு டிஸ்கஸனில் இந்தப் படம் சிக்கியிருக்கும்.


தொடக்கத்தில் மும்பையில் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி சின்னாபின்னாமாகிறது. அதற்கு காரணம் கைது செய்து வைத்துள்ள தீவிரவாதி துரானிதான் என்று மும்பை போலிசாக வரும் கிசோர் அறிந்து அவரது நெட்வொர்க்கை கண்டுபிடித்து அழிக்க அலைகிறார். இன்னொருபுறம் அஜித், நயன்தாராவுடன் சேர்ந்து இந்த நெட்வொர்க்கின் மேல்மட்ட அரசியல் தொடர்புகளை குறிவைத்து வேட்டையாடுகிறார். இடைவேளைவரை யார் வில்லன், யார் ஹீரோ என்று வரும் குழப்பத்திற்கு இடைவேளைக்குப் பின் தெளிவு கிடைக்கிறது.

ஆர்யாவின் கிளாஸ்மெட் நயன்தாராவும், டாப்சியும். கல்லூரியில் படிக்கும்போது ஆர்யா செம பிரில்லியண்ட். கம்ப்யூட்டரில் அனைத்தும் அத்துப்படி. கம்ப்யூட்டரை ஹேக் செய்து யுனிவர்சிட்டி மார்க்ஷீட்டில் கைவைக்கும் அளவுக்கு புத்திசாலி.  அப்படி உதவப்போய் டாப்சியின் கடைக்கண் பார்வையில் சிக்குகிறார்.  கல்லூரி மாணவராக ஆர்யா வரும் கெட்டப் செம.. தமிழ் சினிமாவில் புதிய யுத்தி. திரையில் பாருங்கள்,ஆர்யா கலக்கியிருப்பார்.

ஆர்யாவின் ஹேக்கர் மூளையைத்தான் பிற்பாடு நயன்தாரா மூலம் அஜித் பயன்படுத்திக் கொள்வார். அதற்கு டாப்சியை வைத்து பிளாக் மெயில் செய்து அந்தக் காரியத்தை சாதிப்பார்.அஜித் பின்புலம் எதுவும் தெரியாமல் அவரை போலீசில் ஆர்யா சிக்கவைக்க, வேறு வழியில்லாமல் அந்த பிளாஸ்பேக்கை ஆர்யாவிடம் அவிழ்க்கிறார் நயன்தாரா..

அஜித் வழக்கம்போல இதிலும் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். அதுதவிர ஆன்டி டெர்ரரிசம் ஸ்குவாடு (ATS) -ல் 'பாம் எக்ஸ்பெர்ட்'  ஆகவும் இருக்கிறார். மும்பையில் தீவிரவாதிகள் பாம் வைத்தால் அதை செயலிழக்கச் செய்வது இதன் வேலை. அப்படி ஒரு தாக்குதலில் அவரின் சக 'பாம் எக்ஸ்பெர்ட்'டும் உயிர் நண்பனுமாகிய ராணா (திரிஷா கூட சுத்துறதா சொல்றாங்களே.அவரேதான் ) பலியாகிறார்.இவரின் தங்கைதான் நயன்தாரா.

புல்லட் புரூப் ஜாக்கெட்டு போட்டும் எப்படி குண்டு உடலைத்துளைத்தது என ஆராய்கையில்,அது தரமற்ற புல்லட் புரூவ் என தெரியவருகிறது. உடனே மேலதிகாரியிடம் முறையிடுகிறார்.அவரும் இதற்கு உடந்தை என பிறகு தெரியவர, இதில் 200 கோடிக்குமேல் ஊழல் நடந்திருப்பதை அஜித் கண்டறிகிறார். அந்த ஊழலை செய்திருப்பது சாட்சாத் நம்ம எஸ்.எம் கிருஸ்ணா சாயலில் இருக்கும் மத்திய அமைச்சர் என்பதையும் கண்டுபிடித்து, இப்படி ஊழல் செய்த பணம் அனைத்தும் சுவிஸ் பேங்கில் டெபாசிட் செய்திருக்கும் உண்மையும் கண்டறிகிறார். அதை மறைக்க ரானா குடும்பத்தில் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்று,அஜித்தையும் தீவிரவாதிபோல் பிம்பம் உருவாக்கி அவரை ஆற்றில் தள்ளி கொலை செய்கிறது அந்த அமைச்சர் குரூப். எப்படியோ விஷம் குடித்த நயன்தாராவும் ஆற்றில் விழுந்த அஜித்தும் தப்பி இவர்களை பழிவாங்குவதுதான் மீதி கதை. 


படத்திற்கு மையபலம் அஜித் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான்.  ஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி, ஊழல், லஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சனைகளைப் பன்ச் களாக அடித்து பின்னியெடுக்கிறார்.      

வழக்கம் போல இந்தப்படத்திலும்  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை 'நடராஜா' சர்வீஸ் செய்கிறார் அஜித். ஆனால் அதுதான் அவரின் அட்டகாசமான ஸ்டைல் என்பதால் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அதற்கு தல ரசிகர்களிடமிருந்து விசில் பறக்கிறது. சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மங்காத்தாவுக்குப் பிறகு பேஷனாகிவிட்டது சரி.. ஆனால் தல யின் தொப்பை அப்பட்டமாக வயதை கூட்டிக் காண்பிக்கிறதே..

சுவிஸ் பேங்க் அக்கவுண்ட்லிருந்து துபாயிலுள்ள அமைச்சர் மகளின் அக்கவுண்டுக்கு பணம் மாறிவிட,அதை ஆர்யாவும், அஜித்தும் ஹேக் செய்து தன் அக்கவுண்டுக்கு மாற்றும் அந்த பரபர பத்து நிமிடங்கள் அட்டகாசம்.

அமைச்சராக வரும் மகேஷ் மஞ்ச்ரேகர் அச்சு அசல் எஸ்.எம். கிருஸ்ணா போலவே இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த வேறொரு நாட்டின் அறிக்கையை தப்பாகப் படித்தும், தேசியக் கொடியை தலைகீழாக வைத்தும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.எம். கிருஸ்ணாவின் அதே சம்பவங்களை இதில் வேறு மாதிரி கலாய்த்திருக்கிறார்கள். பெங்களூரு மக்களுக்கு புரியாமல் இருந்தால் சரி..

மாநகரக் காவல் படத்தில் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை' என்று கேப்டனுடன் குத்தாட்டம் போட்ட சுமா ரகுநாத், இதில் டிவி ஆங்கராகவும் பின்பு அமைச்சரின் வில்லன் குரூப்பிலும் வந்து செத்துப் போகிறார்.       


SWORDFISH படத்துக்கும் இந்தப்படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பல காட்சிகள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அதில் வந்த நிறைய கேரக்டர்கள் இதிலும் வருகிறது. அஜித் (John Travolta), ஆர்யா (Hugh Jackman) நயன்தாரா (Halle Berry) என்று நீள்கிறது. அதில் FBI வங்கியில் வைத்துள்ள SLUSH FUND என்றால், இந்தப்படத்தில் சுவிஸ் பேங்க் பணம். அந்தப்படத்தில் ஹேக்கரின் மகளை வைத்து பிளாக்மெயில் நடக்கும். இதில் காதலி.

ஆனால் ஹாலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம். SWORDFISH படத்தை அணுவணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம். ஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து.


Saturday, 19 October 2013

இஞ்சி இடுப்பழகி - ஒரு தீவிர ஆராய்ச்சி...(சும்மா அடிச்சி விடுவோம்..-4 )

ராஜா ராணி படம் போன வாரம்தான் பார்த்தேன். இப்படியே போனா .... போன வருசந்தான் பாத்தேன்னு எழுதுற நிலைமையில கொண்டு போயி விட்டுடும். என்னங்க பன்றது. எழுதனும்னு உட்கார்ந்தா ஏதாவது ஏழரை வந்து உச்சத்தில உட்கார்ந்து ஊஞ்சல் கட்டி ஆடுது.அதை பைசல் பண்ணிட்டு வர்றதுக்குள்ள எழுத வந்தது மறந்துடுது. ஒரே குஷ்டமப்பா...

சரி.. என்னசொல்ல வந்தேன்...?  ஆங்... ராஜா ராணி படம். இதுக்கு தனியாக விமர்சனம் எழுதி கழுவி ஊத்த இது மொக்கைப் படமோ அல்லது காட்சிப்படிமங்களில் படிந்திருக்கும் குறியீடுகளை தோண்டி எடுத்து தூசிதட்ட சிறந்த கலைப்படைப்போ அல்ல...  கொஞ்சம் சுமாரான படம்.. சாதாரண கதை. ஆனால் நயன்தாரா -ஜெய் போர்சன் எக்ஸலண்ட்..!  இரவுக்காட்சி சென்றதால் கடைசி ரயிலைப்பிடிக்க படம் முடிவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பே புறப்பட்டு விட்டேன். அதை சமீபத்தில்தான் பார்த்தேன். அதுவரை நெஞ்சில் நின்ற ஜெய் கேரக்டர், மம்மியைப் பார்த்த மினிஸ்டர் மண்டை போல 'டொக்' கென்று விழுந்துவிட்டது. வழக்கம் போல சந்தானம்,  'மச்சி..காதல்ன்றது....' என ஆரம்பிச்சி கழுத்தை அறுக்கிறார். இருவருடைய பிளாஸ்பேக் முடியும்போதும், அதைக்கேட்கும் ஆர்யா, நயன்தாராவின் ரியாக்சனை ஒரே மாதிரியாகத்தான் காண்பிக்கவேண்டுமா அட்லி...? இருவரின் முகமும் ஒரே மாதிரியாக குளோசப்பில் கண்களில் நீர்வடிய எதையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது.

ஆனால் பாருங்க... சிலர் இதை மௌனராகம் படத்தோட லேட்டஸ்ட் வெர்சன் என சொல்றாங்க. அதைத்தான் தாங்க முடியல. அதே கதையமைப்பு,காட்சியமைப்பு இருந்தால் அதற்கு பெயர் ஈயடிச்சாம் காப்பி. அதை முதல்ல புரிஞ்சிக்கணும்.  தம்பி அட்லி, மணிரத்னம் மாதிரி வரணும்னு ஆசைப்படுறாரு போல. அதுக்காக அவர் இயக்கிய  படத்தை ரீமேக் பண்ணக்கூடாது தம்பி. அடுத்த தடவை வித்தியாசமா ஏதாவது ட்ரை பண்ணு.

சரி அதைவிடுங்க.. நான் சொல்ல வந்தது வேற விஷயம். இந்தப்படத்தில நயன்தாரா கூடவே இலவச இணைப்பா ஒன்னு சுத்திகிட்டு இருக்கும். துடைப்ப கட்டைக்கு துப்பட்டா போட்ட மாதிரி. 'வணக்கம்ங்க.. என்ட்ர பேரு புவனாங்க..'.னு ஜெய் கிட்ட ஒரு அம்மணி போனில காலாய்க்குமே. அந்த அம்மணி பெயர்  தன்யா பாலகிருஷ்ணா.. இதைச்சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பானு குறுக்கால கேள்வி கேட்காதிங்க. அப்புறம் சொல்ல வந்தது மறந்துடும்.

சில நாட்களுக்கு முன்னால ஒரு பெங்களூர் அம்மணி சென்னை மக்களை 'பிச்சைக்காரன்' என்கிற ரீதியில்...  ரீதியில் என்ன... நேரடியாவே பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு, நம்ம மக்கள் கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு இனிமே சென்னை பக்கமே வரமாட்டேன்னு சொன்னதே ஞாபகம் இருக்கா...? அப்படியானு ஆச்சர்யகுரியை மூஞ்சில தொங்க விடமா அந்த ஸ்க்ரீன் ஷாட்டை திரும்பவும் போடுறேன் பாருங்க.
இப்போ என்ன  சந்தேகம்னா, இந்தப்பிரச்சனை வருவதற்கு முன்னால அம்மணி 'ஏழாம் அறிவு' படத்தில முக்கியமான ஒரு ரோல்ல நடிச்சது. பிறகு தான் பிரச்சனை வந்து ஓடிப்போனது.. ஓடிப்போன அம்மணியை திரும்பவும் கூட்டிட்டு வந்து வாய்ப்பு கொடுத்து வாழவைத்திருக்கிறார் நம்ம A.R முருகதாஸ்.

அண்ணா முருகதாஸ்ண்ணா...உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி,  'ஏழாம் அறிவு' படத்தில இந்த அம்மணியை பக்கத்தில வச்சிக்கிட்டு சூர்யா ஒரு உணர்ச்சிபூர்வமான டயலாக் பேசுவாப்டி..."தமிழனை மலேசியாவில அடிச்சாங்க....இலங்கையில அடிச்சாங்க.... இப்போ தமிழ்நாட்டுக்கே வந்து அடிக்கிறாங்க.... "

நரம்பு புடைக்க  வசனம் எழுதுன உங்களுக்கு தமிழர்களை பெங்களூர்ல அடிச்சத மறந்து விட்டீங்களா.. அதனாலதான் அந்த துடைப்ப கட்டை அம்மணிக்கு மாஞ்சி மாஞ்சி வாய்ப்பு தருகிறீர்களோ... தமிழ் நாட்ல ஹீரோயினுக்குத்தான் பஞ்சம்னு கேரளா, ஆந்திராவிலிருந்து இம்போர்ட் பண்ணுறீங்க... ஒரு தொப்புளுக்காக கோர்ட் படி கூட ஏறுவீங்க.. இது போன்ற துக்கடா கேரக்டருக்குக் கூடவா தமிழ் நாட்டில் நடிகைங்க இல்ல..? 

என்ன செய்யுறது தமிழர்களில் மறதி குணம் அப்படி... அடுத்த படத்தில 'ஜப்பான்ல ஜாக்கிச்சான் அடிச்சாரு.. அமெரிக்காவில மைக்கேல் ஜாக்சன் அடிச்சாரு'... னு வசனம் எழுதுங்க. நாங்களும் கைதட்டி, விசிலடிச்சி என்ஜாய் பண்றோம்.
டுத்ததும் வில்லங்கமான மேட்டர்தான். கொஞ்சம் பழைய செய்தி. ஆனால் என் பதிவு சம்மந்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில், நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவருடன் புன்னகை நடிகையைத் தொடர்புப் படுத்தி கிசோர் கேசாமி போட்ட ஒரு ஸ்டேடஸ் பெரும் சர்ச்சையானது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கேப்டன் டிவியில் கிசோர் கேசாமியுடன் நடந்த நேர்காணலை சமீபத்தில்தான் பார்த்தேன். 
http://www.youtube.com/watch?v=jztqrHrf3jY
http://www.youtube.com/watch?v=cPYM926Zt5o

அதில் அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட  கேள்வி அந்த நடிகை சம்மந்தப்பட்டதுதான். உலகம் முழுவதும் அது ஒளிப்பரப்பாகும் என்று தெரிந்திருந்தும்,அதில் அவர் பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது. கடைசிவரை அது தவறான பதிவு என்றோ, சரியாக விசாரிக்காமல் போடப்பட்ட நிலைத்தகவல் என்றோ தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த நேரத்தில் திருச்சியில் இருந்ததாகவும்,அதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் அந்தத் தகவலைப் பதிந்தேன் எனவும் தெரிவித்தார். பிரசன்னா தரப்பு காவல்துறையில் புகார் அளிக்க செல்வதாக இருந்தது. இடையில் அன்பான நண்பர் ஒருவரின் பேச்சுவார்த்தையால் புகார் அளிக்கவில்லை. அதனால் என் பதிவையும் நீக்கிவிட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.  அது தொடர்பாக எனக்கெழுந்த சந்தேகம் இதுதான்..

புகார் ஏன் அளிக்கவில்லை என்று  ஊடகவியலார்கள் அன்று பிரசன்னாவிடம் கேட்டபோது, அப்படி யாரும் தவறாக எழுதவில்லை.. நான் யாரிடமும் வாதிடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் கிசோர் அந்த ஸ்டேடசை பதிந்தபிறகு பலரும் அதை நக்கலடித்து எழுத, பிரசன்னா கமெண்ட் போட்ட பிறகுதான் அந்த விவாதம் வேறு திசை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதில் நக்கலடித்தவர்கள் அனைவரின் இன்பாக்சுக்கு சென்று பிரசன்னா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதை கிஷோர் தனது அடுத்த நிலைத்தகவலில், ஸ்டேடஸ் போட்ட என்னிடம் வாக்குவாதம் செய்யாமல் கமென்ட் போட்ட நண்பர்களின் இன்பாக்ஸில் சென்று மிரட்டுவது சரியல்ல எனத் தெரிவித்திருந்தார். பிரசன்னாவின் அந்த கமெண்டில் அவர் பெயரைச் சொடுக்கினால் அது அவரின் பேஸ்புக் பக்கத்திற்குத்தான் சென்றது. அதில், அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'கல்யாண சமையல் சாதம்' படம் பற்றிய அப்டேட்கள் நிறைய இருந்தது. அது அவரது பேஸ்புக் பக்கம்தான்.

ஆனால் அன்று பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்டு குடைந்த போது பிரசன்னா கடைசியாக ஒரு போடுபோட்டார் பாருங்க... 'எனக்கு பேஸ்புக்ல அக்கவுண்டே கிடையாது'னு.. இதிலிருந்து என்ன தெரியுது. ..? உங்களுக்கு என்ன தெரியுதோ அதேத்தான் எனக்கும் தெரியுது. இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நாம வேற வேலையைப் பார்ப்போம்.


அடுத்து அகழ்வாராய்ச்சி(!) ஒன்றில் ஈடுபடலாம்னு இருக்கேன்..

‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...’ -தேவர்மகன் படத்தில் வரும் இந்தப்பாடலைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தப்பாடலுக்கு மட்டும் இரண்டு தேசிய விருதுகள் அள்ளிக் கொடுத்தாங்க... இருக்கட்டும்.

அது என்ன ‘இஞ்சி இடுப்பழகி... மஞ்சச் சிவப்பழகி...? அதற்கான ஆராய்ச்சியிலத்தான் இறங்கப்போறோம். ஆமா இஞ்சிக்கும் இடுப்புக்கும் என்ன சம்மந்தம்...?

பழைய பாடல்களுக்கும் புதிய பாடல்களுக்கும் விளக்கம் சொல்லியே கின்னஸ் ரெகார்டு வரை போன திண்டுக்கல் லியோனி ஒரு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். 'அது என்ன இஞ்சி இடுப்பழகி... இஞ்சி பாத்திங்கனா ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும். ஒன்னு ஐரோப்பா மேப் மாதிரி இருக்கும். அதுமாதிரியா இடுப்பு இருக்கும்..? ரெண்டாவது வரி மஞ்சச் சிவப்பழகி  போட்டாச்சி. மொத வரில இடுப்பப் பத்தி சொல்லணும். இடுப்புக்கு இ-ல ஆரம்பிக்கிற மாதிரி ஒன்ன போடனும். போட்டுவுடு ஒரு இஞ்சை-னு போட்டுடாங்க' அப்படினு சொல்வாரு. 

தென்கச்சி சொன்னதா எங்கேயோ படித்திருக்கேன். 'இஞ்சியை தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பெல்லாம் நீங்கி சிக்-னு சிறியதா நச்சுனு இருக்கும். அப்படி உள்ளவர்களைத்தான் இஞ்சி இடுப்பழகினு சொல்றாங்க' என புது விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு வேறு ஒரு விளக்கம் பேஸ்புக்ல கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கொடுத்திருக்கார்...

இஞ்சுதல்’ என்று தொழிற்பெயர் உண்டாம். இஞ்சுதல் என்றால் ‘சுண்டுதல், இறுகுதல், வற்றுதல்’ என்று அர்த்தம். ‘சர்க்கரைப் பாகை நல்லா இஞ்சுற அளவுக்குக் காய்ச்சனும்’ என்று பேசக் கேட்டுள்ளோம். இஞ்சிய இடுப்புள்ள அழகிதான் இஞ்சி இடுப்பழகி. அடுத்தவரி மஞ்சச் சிவப்பழகி - மஞ்சள் எப்படிச் சிவப்பாகும் ? திரும்பவும் அதே தவறு. மஞ்சள் இல்லை, மஞ்சம். மஞ்சத்தில் நாணத்தால் சிவக்கும் அழகி !

அடேங்கப்பா... இதுக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறதா..?

ஆனால் அந்தப் படத்தையும் பாடலையும் கவனித்தீர்கள் என்றால் இன்னொரு வினா எழுப்பத் தோன்றும். பாடலில் முதலில் பெண் குரல்தான் பாடும். " இஞ்சி இடுப்பழகா... மஞ்சச் சிவப்பழகா.." அப்படி என்றால் இது ஆணுக்கான  வர்ணனை தானே.. ஆணின் இடுப்பை அப்படி வர்ணிக்கலாமா..?  என்றால், இதற்கு பாடல் எழுதிய வாலியே விளக்கம் கொடுத்திருக்கிறார். 'இஞ்சி என்பதற்கு சுவர், மதில் என்ற அர்த்தமும் இருக்கிறது. சுவரைப் போன்ற திடமான இடுப்புடையவன் என்கிற பொருள்கொள்ள வேண்டும்' என சொல்லியிருக்கிறார்.

எனக்கிருக்கும் சந்தேகம் அந்த வரியை உண்மையிலேயே வாலிதான் எழுதியிருப்பாரா என்பதே.பொதுவாகவே இசைஞானி நாட்டுப்புற இசைப்பின்னணியில் பாடல் அமைக்கிறார் என்றால் வேறு பாடலாசிரியர் எழுதினாலும் ராஜாவின் பங்கும் அதில் இருக்கும். ஒரு சில நாட்டுப்புற வரிகளை அதில் கோர்த்து விடுவார். 'ஒத்த ரூவாயும் தாறேன்...' பாடலின் முதல் இரண்டு வரிகள் ஏற்கனவே எங்கள் கிராமப்புற பகுதியில் பாடப்பட்ட பாடல்தான்.

அதேப்போல்  “இஞ்சி இடுப்பழகா, எலுமிச்சங்காய் மாரழகா, மஞ்சச் சிவப்பழகா, மறக்க மனம் கூடுதில்லை” என்ற இவ்வரிகள் நெல்லை ,மதுரைப் பகுதிகளில் பாடப்படும் நாட்டுபுறப் பாடல்களில் இடம்பெற்றதாக ஒரு தமிழர் நாட்டுப்பாடல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இது முதல் வரியிலேயே ரசிகனை கவர்ந்திழுக்க வேண்டும் என்று ராஜா போன்ற மேதைகள் கையாளும் யுத்தி.

இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்வு எழுதப்போகும் 10,+2 மாணவர்கள் இதைப் படித்து மனப்பாடம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிறகு தேர்வில் பதில் தெரியாமல் திண்டாடக்கூடாது ஆமா....(உங்கள் வசதிக்காக சிவப்பு மையால் ஹைலைட் பண்ணியிருக்கேன்..)
 
அரசியல் கலாட்டூன்..  :-)

Wednesday, 16 October 2013

ஒரு போராளியை புறந்தள்ளிய தமிழகம்.


தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரதம் வேண்டுமென்றே தமிழக அரசாலும் ஊடகங்களாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ என்கிற சந்தேகம் வருகிறது.  சமூக வலைத்தளங்களில் தொப்புளுக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட தோழரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு கொடுக்கவில்லை. ஒருவேளை தோழர் கடந்து வந்த போராட்ட பாதையை யாரும் சரிவர அறிந்திருக்கவில்லை போல.

தோழர் தியாகு ஒரு உண்மையான போராளி. காவிரி டெல்டா பகுதிகளில் 60-80 களில் இருந்து வந்த பண்ணை அடிமைமுறையை ஒழிக்க 'அழித்தொழிப்பு ' என்கிற கொள்கை வடிவத்தைக் கட்டமைத்து புரட்சியில் ஈடுபட்டவர். இவரைப்பற்றி அறிந்திராத திருவாரூர்-நாகை பகுதி விவசாய தொழிலாளிகள் யாருமே இருக்க முடியாது. அழித்தொழிப்பு என்பது பயிர்களை அழிப்பது அல்ல. பண்ணையார்களை அழிப்பது. அவர்களைத் தீர்த்துக் கட்டுவது. அது ஒன்றே நிரந்தரத் தீர்வு என்று அன்று ஆயுதத்தை கையிலேந்தியவர். திருவாரூர் பகுதிகளில் ' தோழர் தியாகு பேசுகிறார்' என்கிற சுவரொட்டிகளை பலமுறை பார்த்திருக்கிறேன்.ஆனால் அவர் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு ஒருமுறை கூட கிட்டவில்லை.அன்றையக் காலகட்டத்தில் திருவாருரை மையமாகக் கொண்டுதான் நிறையப் போராட்டங்கள் நடந்திருக்கிறது.

இந்த நிஜப் போராளியைப் பற்றி தெரியாதவர்கள் கீற்று தளத்தில் அவரின் நேர்காணல் வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள். இந்த உலகம் தற்போது கொண்டாடும் மற்ற எந்த போராளிக்கும் இவர் சளைத்தவரல்ல என்பதை உணரலாம். இவர் அதில் குறிப்பிடும் ஏ.எம்.கே. என்பது தோழர் ஏ.எம்.கோபு. சிலமாதங்கள் முன்புதான் அவர் காலமானார். என் மூத்த சகோதரரின் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தினார். அவரும் எங்கள் பகுதி மக்களுக்காக தன் உயிரையே துச்சமெனக் கருதி போராடிய போராளி.

மார்க்சிய சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த இந்த பொதுவுடமைப் போராளி தற்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இவரது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு எற்றுக்கொள்ளவில்லை என்றாலும் காமல்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிற பிரதமரில் நம்பிக்கை வார்த்தை, இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

முதிர்ந்த வயதிலும் இவரது போராட்ட குணத்தைக் கண்டு தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மாபெரும் எழுச்சி(!?)யினால் இனி போராடி என்ன பயன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போல...

தலையில் வெள்ளை நிறக் குல்லாவுடன் காந்தியவாதி என்கிற அடையாளத்துடன் உண்ணாவிரதப்  போராட்டம் நடத்தினால் திரையுலகம்,ஊடகம், அரசியல்வாதிகள் என பலர் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு செல்வார்கள். பாவம் இவர்தான் அடித்தள மக்களுக்காக தன் வாழ்க்கையை மொத்தமாக அர்ப்பணித்தவராச்சே... யார் கண்டுகொள்வார்கள்..?
அடுத்து ஒரு சுயபுராணம்... :-)

இது நேற்றைய புதுச்சேரி பதிப்பு, தினத்தந்தியில் வந்த செய்தி.  இவர் எனது மூத்த சகோதரர்.  இப்படி சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை. நான் அவரது இளைய தம்பி. பத்து வருடத்திற்கு முன்பு பாண்டிச்சேரியில் சிறிய நிறுவனமாக தொடங்கியவர், தன் அயராத உழைப்பினாலும் சொந்த முயற்சியாலும் இன்று மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்து நிற்கிறார்.


இவர் கடந்து வந்த பாதை, சந்தித்த நெருக்கடிகள், எதிர்கொண்ட சவால்கள் என எந்த பில்டப்பும் கொடுக்க விரும்பவில்லை... சும்மா சந்தோசத்தை பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான். தொழில் ரீதியாக உதவியோ தகவலோ வேண்டுமென்றால் தொடர்புகொள்ளலாம்.

இவரின் வெப்சைட்.  http://www.metalandtech.com

அண்ணாச்சிக்கு கொஞ்சம் கலைத்துறையிலும் ஆர்வம் உண்டு... கடந்த வருடம் ஒரு குறும்படத்தை இயக்கி கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்..




Monday, 14 October 2013

ராவண லீலை - உனக்கெல்லாம் என்னய்யா வேண்டும்...?

அரசியல் நிலைப்பாடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்... உங்களுக்கு பிடிக்காத தலைவரை எனக்குப் பிடிக்கும். எனக்கு பிடித்த தலைவர் உங்களுக்கு பிடிக்காமல் போகும்... இது அவரவர்களுடைய  உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. தலையிடவும் முடியாது. அதே மாதிரி உங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதியுண்டு. அவரை எப்படி விமர்சிக்கலாம் என்று கேள்வி கேட்க எவனுக்கும் இங்கே உரிமை கிடையாது... அவரை விமர்சித்து விட்டு இவரை ஏன் விமர்சிக்கவில்லை என்று சண்டை போடவும் எவனுக்கும் உரிமை கிடையாது.

எனக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு. தலைவர் உண்டு. கட்சி உண்டு. அவர்களைப் போற்றுவதும், அவர் எதிர்ப்பாளர்களை விமர்சிக்கவும் எனக்கு உரிமையில்லையா...?   உங்கள் நிலைப்பாடு என்னவோ அதையே நானும் ஒத்துப்போகவேண்டும் என எப்படி நினைக்கலாம்....?

என் அரசியல் பதிவுகளில் நிறைய பேரை விமர்சித்திருக்கிறேன்.எங்கள் குடும்பம் தி.க, திமுக தொடர்புடையது. நன்னிலம் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து எம் .எல்.ஏ வாக இருந்த மணிமாறன் எங்கள் உறவினர். அவர் நினைவாகத்தான் எனக்கு அந்தப் பெயர் வைத்தார்கள்.எனது தாய்வழி தாத்தா, பெரியாருடன் நெருங்கிய தொடர்புடையவர். திருவாருரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் உள்ள நிறைய பெரியார் சிலைகளில் எனது தாத்தா பெயர் இருக்கும்... அந்த வகையில் சிறுவயதிலேயே கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டவன். தவிர எங்கள் மண்ணின் மைந்தன்.ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாடு களில் நிறைய முரண்பாடு உண்டு. என் வலைப்பூவில் நிறைய பதிவுகளில் அவரை விமர்சித்திருக்கிறேன்.

நான் பதிவெழுத வந்த புதிதிலே அவரைக் கண்டித்து பதிவு போட்டிருக்கிறேன். இந்த வருடத்தில் முதல் பதிவிலேயே அவரை நக்கலடித்திருக்கிறேன். நான் கலைஞருக்கு சொம்பு அடிக்கிறேனாம். ஒரு அறிவுஜீவி சொல்லுது.திருக்குவளையில் அவர் வீட்டை விசிட் அடித்தபோது  ஒரு பதிவு போட்டேன் .  அதைத்தவிர அவருக்கு சொம்படித்த ஏதாவது  ஒரு பதிவு இருந்தால் காண்பிக்கட்டும்...என் பிளாக்கை மொத்தமாக மூடிவிட்டு சென்றுவிடுகிறேன்.

மாறாக அவரது அரசியல் நிலைபாடுகளை நிறைய விமர்சனம் செய்துதான் பதிவிட்டிருக்கிறேன்.

 http://www.manathiluruthivendumm.blogspot.com/2011/11/blog-post_22.html

 http://www.manathiluruthivendumm.blogspot.com/2012/11/blog-post_27.html

http://www.manathiluruthivendumm.blogspot.com/2013/01/blog-post.html


சரி என் நிலைப்பாட்டை தீர்மானிக்க நீ யார்...? நான் என்ன மாதிரி பதிவு போடணும்னு முடிவு பண்ண நீ யார்..? நான் யாருக்கு சொம்பு தூக்கினா, யாரைக் கழுவி ஊத்தினா உனக்கு என்னையா... நான் என்ன பேஸ்புக்ல 'டாக்' பன்ற மாதிரி உன் பேருக்கு கோர்த்து விடுறேனா என்ன... ? இல்ல.. தயவுசெய்து என் பதிவை படித்துப் பார்த்து விட்டு கமென்ட் போடவும்னு கெஞ்சவா செய்றேன்.... பிடிக்கிலனா போய்கிட்டே இருய்யா ...

எனக்கு ஊரு திருச்சியாம்..இதையும் அந்த ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்திருக்கிறார். காலேஜ் படிச்ச ஊருதான் எல்லோருக்கும் சொந்த ஊரா...? நான் என்ன ஊருனு என் பிளாக் புரஃபைல்லே இருக்கு... சொந்த ஊரை நான் எதுக்குயா மறைக்கணும்.

என் பையனை இந்தி தாய்மொழியாகக் கொண்டு படிக்க வைக்கிறேனாம். அவனுக்கு ஆறு வயதாம்.இதையும் அந்த ஆராய்ச்சி மணிதான் கண்டுபிடித்திருக்கு. அவன் பிறந்தது 2011-ல் . முதல் கணினி அனுபவம் பற்றி எழுதிய பதிவிலே குறிப்பிட்டிருந்தேன்(அந்தப் பதிவில்தான் இவரையும் ஒரு நண்பனாக மதித்து தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டேன் ). இப்பத்தான் ' பிரி நர்சரி'யே போகிறான். எங்கள் பகுதியில் உள்ள ஏதோ ஒரு பள்ளியைக் குறிப்பிட்டு அங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கிறான் என சொல்லியிருக்கு. 2011ல பிறந்த குழந்தைக்கு ஆறு வயதுனு எந்த கணக்கு வாத்தியாருய்யா உனக்கு சொல்லிக்கொடுத்தாரு  ..?

கல்லூரியில் நான்கு வருடங்கள் 'நார்த் இண்டியன்' மாணவர்களுடன் இணைந்து படித்தேன். ஆனால் ஒரு இந்தி வார்த்தைக் கூட கற்றுக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.ஒரு இந்தி படம் கூட பார்த்தது கிடையாது. எனக்கே விருப்பமில்லாத இந்தியை நான் ஏன் என் மகனுக்கு திணிக்கவேண்டும்...?

மீண்டும் சொல்கிறேன்... இது என் தளம். முழுவதும் என் கருத்து. எந்த கருத்தையும் சொல்வதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் விமர்சிப்பேன். கருத்தியல் ரீதியாக, நாகரீகமாக, பதிவு சம்மந்தமாக அதற்கு எதிர்கேள்வி வைத்தால் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். எந்த வாதம் செய்யவும் ரெடி... அதைவிடுத்து அநாகரிகமாக பின்னூட்டம் இடுவது பதிவரான உனக்கு அழகா...?  அதற்கான பதிலை  நாகரிகமாக தனிப்பட்ட முறையில் தெரிவித்தும் எனக்காக இட்டுக்கட்டி ஒரு பதிவு போடுவது முறையா...?

சிங்கையில் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இணையத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டு வந்தவர்கள் தற்போது பதிவைக் குறைத்துக் கொண்டுள்ளனர். நான் எழுத வரும் முன்பே பதிவர் சந்திப்பு எல்லாம் நடத்தி முடித்துவிட்டார்கள். தற்போது யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மாணவன் சிம்புவிடம் மட்டும் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். ஆனால் இந்த அறிவாளி எட்டு வருசமா பிளாக் எழுதறார். இவரின் நாகரீகம் இந்த லெவலில் உள்ளது.

மறுபடியும் சொல்றேன்... நாகரிகம், அநாகரிகம் என்கிற வரையறை எனக்கும் தெரியும்.  எந்த எல்லைவரையும் நானும் போவேன். போகத்தெரியும். பதிவுலகின் மூலம் நட்பை வளர்க்கவே விரும்புகிறேன். எந்த பதிவிற்கும்  இதுவரை நான் அநாகரிகமான கமென்ட் எதையும் போட்டதில்லை. அது பதிவுலகில் இருக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். உன்னை நான் நேரில் கூட பார்த்ததில்லை. அப்படியிருந்தும் நட்பாக்கிக் கொள்ளத்தான் விரும்பினேன். என் பதிவு சம்மந்தப்பட்ட விசயங்களை விட்டுவிட்டு என் குடும்பத்தைப் பற்றி இட்டுக்கட்டி பதிவில் போட்டு உன் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டாய் .

பதிவுலகில் நீண்ட நாட்களாக எழுதுபவர்கள் ஏதோ அறிவாளிகள் மாதிரியும், சமீபத்தில் எழுத வந்தவர்கள் தற்குறிகள் மாதிரியும் சில மரமண்டைகள் நினைத்துக் கொண்டிருக்கிறது. முகநூளில் போய் பாருங்கள். நிலைத்தகவல் பதிபவர்களை விட அதற்கு கமென்ட் செய்து வாதம் செய்பவர்கள் அவர்களைவிட அரசியல் நுண்ணறிவும் தமிழ்ப்புலமையும் உடையராக இருப்பார்கள். அவர்கள் சுவரில் சென்று பார்த்தால் ஒரு ஸ்டேடஸ் கூட போட்டிருக்க மாட்டார்கள். பதிவுலகிலும் அப்படித்தான். நீண்ட நாட்கள் எழுதுபவர்கள் பெரிய புத்திசாலியும் கிடையாது, சமீபத்தில் வந்தவர்கள் தற்குறியும் கிடையாது, பதிவே எழுதாதவர்கள் முட்டாள்களும் கிடையாது. அவர்களுக்கு எழுத நேரமில்லை. அல்லது  விருப்பமில்லை அவ்வளவுதான், அதற்காக அவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் என்ற முடிவுக்கு வரக்கூடாது. நீண்ட நாட்களாக பதிவுலகில்  இருப்பதால் என் நிலைபாடுதான் சரியானது என்கிற அகங்காரம் கொண்டால், உங்களை விட முட்டாள் இந்த உலகத்தில் எவரும் கிடையாது.

எனக்கு வேலைப்பளு காரணமாக பதிவெழுத நேரம் கிடைப்பதில்லை. வாரத்திற்கு ஒரு பதிவு எழுதுவதே குதிரைக்கொம்பாக உள்ளது. போன வாரம் பார்த்த சினிமாவிற்கு இந்த வாரம்தான் விமர்சனம் எழுத முடிகிறது. இப்படியிருக்கையில் இந்த விளக்கம், வெங்காயம், ம^*&^%$று, மண்ணாங்கட்டினு பதிவெழுத வைத்து ஏன்யா உசிர எடுக்கிறீங்க...

மீண்டும் சொல்றேன்... இது நல்ல மூடுல இருக்கிறப்போ எழுதின பதிவு...என் பதிவு பிடிக்கலனா எல்லாத்தையும் இழுத்து மூடி பொத்திகிட்டு போ...எனக்கு நிறைய வேலை இருக்கு.

Saturday, 12 October 2013

வருகிறது 'தொப்புள் பாதுகாப்பு மசோதா' (18+)


வ்வளவு நாட்களாக மெல்ல மெல்ல மடிந்துக்கொண்டிருக்கும் நம் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை எப்படி பேணிக்காப்பது என்பதில் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டிருந்தோம்.ஆனால் அதைவிட பெரிய சமாச்சாரம் ஓன்று இருப்பதை மறந்துவிட்டோம். அது... இந்த சினிமாக்காரர்களிடமிருந்து நம் பெண்களின் தொப்புளை பாதுகாப்பது.

கடந்த வாரம் ஒரு மனுஷன்... உண்மையச் சொல்லப்போனால் ஒரு நிஜ போராளி, இந்திய அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அதைப்பற்றி யாரும் இங்க பேசக்காணோம். பேஸ்புக்லேயும் டிவீட்டர்லேயும் ஒருத்தனும் பொங்கக் காணோம். ஆனால் நஸ்ரியா தொப்புளுக்கு டூப் போட்டுட்டாங்களாம். உடனே நம் இளைய சமுதாயம் கொதித்து எழுந்திருக்கிறது. அக்கவுண்டே இல்லாதவனெல்லாம் இதுக்காக புதுசா அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பொங்கிட்டு போயிருக்கானுவ. கேட்டால், ஒரு நம்பகத்தன்மை வேண்டாமா என கொதிக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் 'ரிங்கா ரிங்கா' பாட்டுல வர்ற அந்த 'பின் போர்சன்' நஸ்ரியாவோடதுதான் என்பதை சட்டப்படி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு இருக்கிறது என பீதியைக் கிளப்புகிறார்கள்.

கடந்த சில நாட்களாக எத்தியோப்பியாவில் எழுச்சிப் பேருரையாற்றிவிட்டு, நைஜீரியாவில் நடைப்பயணம் மேற்கொண்டு , சோமாலியாவில் சோலாவாக கர்ஜித்துவிட்டு அப்படியே வரும்வழியில் அமெரிக்காவில் ஆயில்பாத் எடுக்கச் சென்ற வாக்கிங் புயல் வைகோவிடம் அமெரிக்கா அதிபர் ஒபாமாவே இதைப்பற்றி விசாரித்ததாக சங்கொலியில் செய்தி வந்திருக்கிறது.  
 

விஷயம் இவ்வளவு சீரியஸாக இருக்க,எழுச்சித்தலைவி பேரவை மீண்டும் எழுச்சிப் பெற இதைவிட வேற சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் உடனடியாக எழுச்சித்தலைவியிடம் தொடர்பு கொண்டபோது அவரும் கடும் கொந்தளிப்பில் இருந்தார். நானெல்லாம் அந்த !#%%#%&&*&%#&^&^ காட்சியிலேயே டூப் போடாமல் நடிக்கிற ஆளு. ஆஃப்ட்ரால் இந்த தொப்புள் சீனுக்கு டூப் போட்டு கேவலப்படுத்திட்டாங்களே... இதை உடனடியாக தலைமைச்செயலகம் சென்று மனு கொடுத்து, முதல்வரை நடவடிக்கை எடுக்கச்சொல்லி வற்புறுத்தணும் என ஆவேசப்பட்டார்.

"என்னது அம்மணி ஒரு தொப்புள் மேட்டருக்கு போயி மனு கொடுக்கணுமா... ?"

"கல்லுல செதுக்கின ஒரு சிலைக்கே ஆண்மை இல்லைன்னு ஒருத்தன் மனு கொடுக்கிறப்போ, ஏன் இதுக்கு கொடுக்கக் கூடாது..?"

"என்னது அம்மணி அரசியல்லாம் பேசுது..?"

"ஆமாய்யா...... உலகம் போற்றும் திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவரை கௌரவிக்கிறதுக்காக குமரிக்கடலில் சிலையை கட்டி வச்சா, அவர் கோணலா நிக்கிறாரு, பேக் சைடு பெரிசா இருக்கு, முன்னால சிறுசா இருக்கு, வெக்கப்பட்டு நிக்கிற மாதிரி இருக்கு, ஆண்மையில்லாம இருக்கு, ஆகம விதிப்படி இல்ல, அதனால கருணாநிதி மேல நடவடிக்கை எடுக்கணும்னு மனு கொடுக்கலாம். ஆனா தொப்புளை பாதுகாக்கணும்னு மனு கொடுக்கக் கூடாதா..? "

அம்மணி இம்புட்டு பேசினதுக்கு அப்புறம் சும்மா இருக்கக் கூடாதுனு பேரவை சார்பா மனு கொடுக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்.. முதல்வரிடமிருந்து உடனடியாக அறிக்கை வந்துவிட்டது.

"என் ஆணைப்படி ஆட்சிப்பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழ் நாட்டில் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து ரவுடிகளும், கொடுங்குற்றம் புரிபவர்களும் ஆந்திராவுக்கு துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்கள். அன்று முதல் என் ஆணைப்படி தமிழ் நாட்டில் ஒரு குற்றச்செயலும் நடைபெறாமல் பாதுகாப்புமிக்க மாநிலமாக திகழ்கிறது. அப்படியிருக்க, தாய்மையின் புனிதமாக கருதப்படுகிற தொப்புளை சில சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்தி வந்துள்ள தாக தெரியவருகிறது. பம்பரம் விடுவது,கத்தியை விட்டு ஆட்டுவது, ஆம்ப்லேட் போடுவது போன்ற சில்லறைத்தனமான விளையாட்டு களில் ஈடுபடுவதாக அறிய நேரிட்டது. அடுத்ததாக சிலர் அங்கே கிரிக்கெட் போட்டி நடத்தவிருப்பதாகவும், சிலர் மாநாடு நடத்தப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் காலங்களில் அவ்வாறு நடைபெறாமல் இருக்க வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 'தொப்புள் பாதுகாப்பு மசோதா' நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."  

தாயுள்ளம் கொண்ட முதல்வரிடமிருந்து அறிக்கை வந்த பிறகு அது சம்மந்தப்பட்ட நபர்கள் கிலிப்பிடித்துப் போய் கதறி அழுவதாக நமக்கு தகவல் கிடைத்தது. விரைவிலே அவர்கள் ' தொடா ' சட்டம் மூலம் கைது செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.

தில் முதலில் மாட்டப்போவது  தவசி அய்யானு பேசிக்கிறாங்க. பதினெட்டுப்பட்டிக்கு பஞ்சாயத்து பன்ற பெரிய மனுஷனான இவர், சங்கரபாண்டி வாத்தியாருனா எல்லாரும் பள்ளிக்கூட வாத்தியாருனு தப்பா நினைச்சிகிட்டு இருக்க, அவர் சிலம்பம் கத்துக்கொடுக்கிற குஸ்தி வாத்தியார் என்கிற வரலாற்று உண்மையை உலகுக்கு உரக்கச் சொன்ன இந்த வில்லேஜ் விஞ்சானி, ஒரு கன்னிப் பொண்ணு தொப்புள சுத்தி பம்பரம் விட்டிருக்கிறாரு. அதுவும் சின்னப்பசங்களை கூட சேத்துகிட்டு... அது என்ன பஞ்சாயத்து திடல்னு நெனைச்சியாயா பம்பரம் வுடுறதுக்கு ...?


காலேஜ் பொண்ணுங்கள 'ஈவ் டீசிங்' பண்ணினதுக்கே மெட்ராஸ் சிட்டியில பஸ் மேல தாவித்தாவி அந்த ரவுடிகளை வெளுத்தெடுத்த இந்த ஒருநாள் முதல்வர், பப்ளிக்கா ஒரு பொண்ணு தொப்புள்ல கத்திய வுட்டு ஆட்டியிருக்காரு.  ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா என்ன செய்வீங்க மிஸ்டர் ஜென்டில்மேன்...?



நானெல்லாம் தோசைக்கல்லுல ஆம்ப்லேட் போட்டாலே ஒன்னு ஆஸ்திரேலியா மேப் மாதிரி இருக்கும்... இல்லனா ஆப்ரிக்கா மேப் மாதிரி இருக்கும். ஒரு குண்டக்க மண்டக்க சர்ஃபேஸ்-ல அதுவும் ஆயில் இல்லாம, பக்காவா ஆம்ப்லேட் போட்டு எடுக்கிறார்னா எவ்ளோப் பெரிய தில்லாலங்கடியா இருக்கணும்..! ?  யோவ்..அது என்ன இண்டக்சன் ஸ்டவ்னு  நெனைச்சியா..?   ஏற்கனவே ஊர்ல கரண்டு பிரச்சனை வேற.. இத பாத்துட்டு அவனவன் சொந்தமா முயற்சி பண்ணினா என்ன ஆவுறது..?




Tuesday, 8 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - இன்னும் மீளவில்லை.

            
டம் வெளிவந்த அன்றே பார்த்தாயிற்று. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்த்த படம். உண்மையில் அன்று ராஜா ராணி படம் பார்க்கலாம் என்கிற முடிவோடுதான் சென்றிருந்தேன். ' SOLD OUT ' என ஒட்டியிருந்தார்கள். ஒரு டிக்கெட்டாவது இருக்குமா என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.  ' படம் போட்டு பதினைத்து நிமிஷம் ஆச்சு சார்.வேணும்னா இன்னொரு படம் ஓடுது' என வேறு ஏதோ ஒரு பெயர் சொன்னார். கண்ணாடித் தடுப்பில் சரியாக கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தேன், மிஷ்கின் படம் போட்டு போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது.

முகமூடி கொடுத்த அனுபவம் அவரின் அடுத்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை.திரும்பிப் போக மனமில்லாமல், ' சரி.. ஓநாயும் நாய்க்குட்டியும் ஒன்னு குடுங்க' என பணத்தை நீட்ட,அவர் சற்று முறைத்து விட்டு டிக்கெட் கொடுத்தார்.திரும்பியபோது தான் கவனித்தேன்.அது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. அடக்கொடுமையே இந்த லட்சனத்தில் விமர்சனம் எல்லாம் எழுதிட்டு இருக்கோமே.  சரி பரவாயில்ல.. இரண்டு குட்டிகளும் என் செல்லப்பிராணிதான் என சமாதானம் படுத்திக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலைகள் தெரிய, கூட்டினால் இரட்டை இலக்கத்தைக்கூட தொடவில்லை.

சிங்கையில் இது ஒன்றும் புதிய அனுபவமில்லை என்பதால் வெளியில் சென்று பாப்கார்ன்,கோக் வாங்கிக் கொண்டு ஆற ஆமர வந்து இருக்கையில் ஐக்கியமானேன். முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்கிற 'டைட்டில் கார்டு கவுரவம்' இசைஞானிக்கு கொடுக்கப்பட்ட போதே, படத்தில் ராஜாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் என்கிற நம்பிக்கைக்கீற்று திடீர் உற்சாகத்தைக் கொடுத்தது.அதற்காக ஒவ்வொரு பிரேமிலும் இப்படி அடித்து விளாசுவார் என  எதிர்பார்க்கவில்லை. ராஜா சோலோவாக பின்னணியில் கோலோச்சும் இது போன்ற படங்களைப் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது.

துல்லியமான திரைக்கதை, அலட்டலில்லாத நடிப்பு, குழப்பமில்லாத காட்சியமைப்பு, கதைசொல்லும் புதிய யுக்தி, இவை எல்லாவற்றுக்கும் உயிர் கொடுக்கும் பின்னணி இசை... இப்படியொரு ஒருங்கிணைப்போடு ஒரு படைப்பு இருந்தால் எந்த  ரசிகனைத்தான் அறிதுயில் நிலையை அடையச்செய்யாது..? இரண்டரை மணிநேரத்தில் மொத்தமாக வசப்பட்டுப் போனேன். சமீப காலங்களில் எந்தப்படமும் இந்தளவு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை.

விமர்சனம் எழுதலாம் என உட்கார்ந்தால்,வார்த்தைகள் வசப்படவில்லை. ஒருவேளை  இந்தப் படைப்புக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு நீ என்ன பெரிய அப்பாடக்கரா என என் மனசாட்சியே என்னைக் கேள்வி கேட்டு குடைந்தது கூட காரணமாக இருக்கலாம்.அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டுவரும் வேளையில், மொக்கைப் படங்களை வஞ்சகமில்லாமல் கழுவி ஊற்றும்போது சமகாலத்திய தமிழ் சினிமாவில் அரிதாக வரும் இதுபோன்ற நல்ல படைப்புகளைப் பாராட்டி இரண்டு வார்த்தைகளாவது எழுதவில்லை என்றால் என் விமர்சனப்பார்வை சமநிலை அடையாது என்கிற சமாதானத்தை மனசாட்சி ஓரளவு ஏற்றுக்கொண்டது.

இன்னும் அந்த கதை சொல்லும் காட்சி கண் முன்னே விஷுவலாக விரிந்துக்கொண்டே இருக்கிறது. அது வெறுமனே கதை சொல்லும் காட்சி என்கிற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. உலக சினிமா அறிவு எனக்கு அவ்வளவாக கிடையாது. ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் தமிழ் சினிமாவில் இது வியக்கத்தக்க முயற்சி.

சமகாலத்திய தமிழ் சினிமாவில் பொதுவாகவே நாயகன், ஆரம்பத்தில் கொடூரமானவனாகவோ அல்லது சைக்கோ மாதிரியாகவோ அல்லது சிறைக் கைதியாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவனாகவோ காண்பிக்கப்பட்டால் கண்டிப்பாக அவனுக்கு ஒரு 'கலர்ஃபுல்'  பிளாஸ்பேக் இருக்கும். இதிலும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். "அவர் யார் தெரியுமா..அவர் எப்படி வாழ்ந்தார் தெரியுமா..." " பூஞ்சோலைனு ஒரு கிராமம்.. வறுமைனா என்னானு தெரியாது.." " எனக்கு இன்னொரு பேரு இருக்கு.." இது மாதிரி வழக்கமான வசனத்தோடு எப்போ பிளாஸ்பேக் ஆரம்பிக்கப் போகுதோ என்றுதான் நினைத்திருந்தேன்.

அதிலும் தொடர்ந்து வுல்ஃப்-ஐ சிக்கலில் மாட்டிவிடும் ஸ்ரீயை எதுவுமே செய்யாமல் மன்னித்துவிடுவது, பிளாஸ்பேக்கை யாரிடமாவது சொல்லவேண்டும் என்கிற வழமையான தமிழ்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை மிஷ்கினும் பிரதிபலிக்கிறாரோ என்கிற என் சந்தேகம் கடைசியில் உடைபட்டுப் போனது. ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ மூலம் தொல்லைகள் வர, எப்படியும் இவரிடம்தான் பிளாஸ்பேக்கை அவிழ்க்கப்போகிறார்...அதை இப்பவே சொல்லித் தொலையவேண்டியதுதானே என்கிற நம் ஆதங்கம், அப்படி ஒரு அவசியமே இல்லை என்பதை அந்தக் கதைமூலம் உணர்ந்து அடங்கிவிடுகிறது

கிளைமாக்சுக்கு நெருக்கமாக வரும் அந்த 'ஓநாய்- ஆட்டுக்குட்டி' கதைக்கு முன், வுல்ஃப் ஆக வரும் மிஸ்கின் மொத்தமாக முப்பது வார்த்தைகள் கூட பேசியிருக்க மாட்டார். நம்மை அப்படியொரு எதிர்பார்ப்புக்குள்ளாக்கி அந்தக் 'குட்டிக்கதை'யில் நம்மை மொத்தமாக லயிக்க வைத்தது மிஸ்கினின் மாபெரும் வெற்றி.


"எட்வர்டு அண்ணா  நீங்களாவது  ஒரு கதை சொல்லுங்களேன் ...."


"ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம். அந்த ஓநாய் ஒரு பெரிய கரடிகிட்ட வேலை செஞ்சிச்சாம். கரடிக்கு பிடிக்காத நரியை எல்லாம் ஓநாய் காட்ல போயி வேட்டையாடுமாம். அப்போ ஒரு நாள்...., ஒரு நரியை  வேட்டையாடும் போது  ஒரு ஆட்டுக்குட்டி குறுக்க வந்திச்சி. ஓநாய் தெரியாம அந்த ஆட்டுக்குட்டியை கொன்னுடிச்சி. அந்த ஆட்டுக்குட்டிய  கொன்னதால என்ன பண்றதுனு தெரியாம அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு அந்த ஓநாய் போச்சாம். அந்த ஆட்டுக்குட்டி வீட்ல ஒரு அப்பா ஆடும், ஒரு அம்மா ஆடும், ஒரு குட்டி தங்கச்சி ஆடும் இருந்திச்சாம். அந்த மூணு பேருக்கும் கண்ணு தெரியாதாம். அவுங்கள பாத்து ரொம்ப கஷ்டப்பட்டு தன் பழைய வேலையெல்லாம் விட்டுட்டு அந்த குடும்பத்தோடயே அந்த ஓநாய் தங்கி அவுங்கள ரொம்ப பத்திரமா பாத்துகிச்சாம் .

வேட்டைக்கு வராத ஓநாயை தேடி ஒரு நாள் கரடி அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்திச்சாம். 'வேட்டைக்கு வா.. வேட்டைக்குவா...' னு கூப்பிட, நான் வரமாட்டேன்னு அந்த ஓநாய் சொல்ல, கோபமான அந்த கரடி அந்த அப்பா, அம்மா ஆட்டுக்குட்டிங்ககிட்ட உங்க ஆட்டுக்குட்டிய இந்த  ஓநாய்தான் கொன்னிச்சுனு சொன்னுச்சாம்.அதை கேட்டு அந்த ஓநாய், ஒரு மூலையில் உட்கார்ந்து ஒடஞ்சி அழுதுச்சாம். அப்போ அந்த அம்மா ஆடும், அப்பா ஆடும் அந்த ஓநாய் பக்கத்தில வந்து ' நீ அந்த ஆட்டுக்குட்டிய வேணும்னு கொன்னுருக்க மாட்டேடா கண்ணா. அழாதடா..'னு சொல்லி கட்டிப்புடுச்சி நீதான்டா அந்த ஆட்டுக்குட்டினு சொல்லிச்சாம்.

அந்த ஓநாய் மூணு போரையும் கூட்டிட்டு வேற இடத்துக்கு போச்சாம். போற இடத்துக்கெல்லாம் அந்த கரடி ஓநாயை தேடிவந்து 'வேட்டைக்கு வா... வேட்டைக்கு வா...' னு சொல்லிச்சாம். வராட்டினா, அந்த அம்மா,அந்த அப்பா,அந்த குட்டி ஆடுகளை கொன்னுடுவேன்னு பயமுடிச்சிதாம். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஓநாய் அந்த கரடியை கடிச்சிபோட்டுடுச்சாம். அப்பறம் அந்த மூணு பேரையும் கூட்டிட்டு அந்த ஓநாய் எங்கெங்கோ போச்சாம்..

காட்டை காவல் காக்கிற புலிகள் எல்லாம் அந்த ஓநாயை தேடித்தேடி அலைஞ்சிச்சாம். எப்படியோ ஓநாய் இருக்கிற இடத்தைத் தேடிக் கண்டுபுடிச்சி அத கொல்ல வர, திரும்பவும் ஓநாய் ஓட, அதுகூட ஓட முடியாம அந்த அப்பா ஆடும்,அம்மா ஆடும், குட்டி ஆடும் ஒரு பத்திரமான இடத்தில ஒளிச்சி வச்சிட்டு அந்த ஓநாய் ஓடிச்சாம். ஆனா ஒரு புலி அந்த ஓநாயை கடிச்சி போட, அந்த ஓநாய் தப்பிச்சி நொண்டி நடத்து போயி ஒரு  மூலையில கீழ விழுந்திடுச்சாம்...

அப்போ இன்னொரு குட்டி ஆடு வந்து அந்த ஓநாயை வீட்டுக்கு கூட்டிட்டு போயி காயத்துக்கு மருந்து போட்டுச்சாம். ஆனா மறுநாள் காலையில அந்த ஓநாய், அப்பா,அம்மா,குட்டியை
த் தேடி போச்சாம். அவங்கள கூட்டிட்டு ஓடறதுக்குள்ள, அந்தக் கரடி... அந்தக் காயம்பட்ட வெறிப்புடிச்ச கரடி அவுங்க எல்லோரையும் கொல்றதுக்கு தொரத்தி தொரத்தி வர, இன்னொரு பக்கம் புலிகளெல்லாம் தொரத்த, இப்போ ஒவ்வொரு இடமா ஓடிகிட்டு இருக்காம்.

எங்க ஓடுமோ....எப்படி ஓடுமோ....???? "


இந்த ஒரு காட்சிக்காகவே என் வாழ்நாளில் ஒரு முறையேனும் மிஷ்கினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கட்டிப்பிடித்து கதறவேண்டும் போல இருக்கிறது.



இந்தப்படத்தில் குறிப்பிட்டு சொல்ல நிறைய காட்சிகள் இருக்கிறது.ஏற்கனவே பாராட்டி நிறைய விமர்சனங்கள் வந்துள்ளதால் இந்த ஒரு காட்சியை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

படத்தில் சில இடங்களில் தர்க்கப்பிழைகள் இருக்கலாம். இது போன்ற சிறந்த கலைப்படைப்புகளில் அதை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வது நாகரிகமற்றது.

இணையத்தில் சில இலக்கிய ஓநாய்கள் திரிந்துக்கொண்டிருக்கிறது. கூடவே சில ஊடக நரிகளும். இவர்கள் சாமானிய மக்களின் சராசரிப் பார்வையிலிருந்து விலகி நிற்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் மொக்கை என்று உலகமே கழுவி ஊற்றும். ஆனால் அதுதான் தமிழின் ஆகச்சிறந்த படம் என்று குருட்டு வாதம் செய்து மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்புவார்கள். நல்ல படம் என்று நிறைய பேர் பாராட்டிவிட்டால் போதும், அதுதான் தமிழ் சினிமாவின் அவமானச்சின்னம் என்கிற ரீதியில் விமர்சனத்தை அடுக்குவார்கள்.

ஒரு விஷயம் கவனிக்கலாம். படம் வெளிவந்த உடனையே விமர்சனம் செய்ய மாட்டார்கள். படத்திற்கு பொதுவான விமர்சனம் எப்படி இருக்கு என்று சில நாட்கள் நோட்டம் விடுவார்கள். பிறகு, "இன்னிக்குதான் அந்த படம் பார்த்தேன்.இப்படி ஒரு குப்பையை எப்படித்தான் இவர்கள் கொண்டாடுகிறார்களோ தெரியில..." என்றவாறு விமர்சனத்தை ஆரம்பிப்பார்கள். அதுவும் சொந்தமா காசு கொடுத்து தியேட்டர்ல பார்க்காம திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலேயோ பார்த்துவிட்டு,'அந்த காட்சியில லைட்டிங் சரியில்ல, அவர் பேசுற வசனம் தெளிவாவே இல்ல... படம் ஒரே இருட்டா இருக்கு.. அப்படி இப்படினு அளந்து விடுவதைப் பார்க்கும் போது இந்த ஓநாய்களையும்  நரிகளையும் எந்த புலியாவது வந்து கடிச்சி வைக்கக் கூடாதா என தோன்றும்.