நாளை இந்நேரம் இரண்டாம் தமிழ் பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கும். வெளிநாடுகளில் வசிப்பதால் நெருங்கிய உறவினர்களின் விஷேசங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கமும் வருத்தமும் முன்பு இருக்கும்.தற்போது அதோடு பதிவர் மாநாடும் சேர்ந்துவிட்டது. தன் ரசனைமிக்க எழுத்துகளால் வாசிப்பவர்களை வசியம் செய்த பதிவர்களையும் ஊடகவியலார்களையும் நேரில் சந்திப்பதென்பது நெகிழ்ச்சியான நிகழ்வல்லவா...! அந்தக் கொடுப்பினைக்கும் கொஞ்சம் அதிஷ்டம் வேண்டும் போல...
இணையத்தில் முகம் காட்டாமல் எழுத்தின் மூலம் பரிட்சையமான பதிவர்கள் பலர். அவர்களை வெளிக் கொணரும் நிகழ்வாகவும் இந்தப் பதிவர் திருவிழா அமைவது அதன் தனிச்சிறப்பு. சிலர் தன் எழுத்தின் மூலம் பலரது மனதில் குடிகொண்டுவிட்டு பின்பு முகத்தைக் காண்பித்து பரவசப்பட வைப்பார்கள். சமீபத்தில் செங்கோவி, மாத்தியோசி மணி போன்றவர்களின் நிஜ முகத்தைப் பார்க்கும் பாக்கியம்(போட்டோவில்தான்) கிட்டியது.
சென்ற ஆண்டு பதிவர் திருவிழாவில் நகைச்சுவைச்செம்மல் சேட்டைக்காரனின் தரிசனம் கிடைத்தது. இந்த ஆண்டு மங்குனி அமைச்சர்,பன்னிக்குட்டி ராமசாமி உட்பட சில பிரபல பதிவர்கள் வரக்கூடும் என்கிற தகவல் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. நேரில் பார்க்க முடியாவிட்டாலும் 'லைவ் டெலிகாஸ்ட்' இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு பதிவராக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...
லட்சம் ஹிட்ஸ் என்கிற லட்சியத்தை நோக்கி போலந்து அம்மணி...
தமிழ் வலைப்பூவில் முதன்முதலில் ஒரு லட்சம் ஹிட்சை எட்டியது கேபிள்ஜி என நினைக்கிறேன்.வலைப்பூ எழுதுவதற்கு முன் அவரது பதிவுகளை ஒரு வாசகனாக தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். லட்சம் ஹிட்சை வாரிவழங்கிய வாசகர்களுக்கு நன்றி அப்படின்னு ஒரு பதிவு போட்டார். அடேங்கப்பா லட்சம் ஹிட்சா என அன்று வாயைப் பிளந்தேன். பிறகு நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது லட்சம் ஹிட்ஸ் என்பதை ஒரு லட்சியமாக கொண்டு பதிவெழுத ஆரம்பித்தேன்.எப்படியோ அந்த மைல் கல்லை தாண்டிவிட்டேன்னு வச்சுக்குங்க.. இப்போ எதுக்கு இந்த வெட்டி டீடைல்ஸ்னு கேட்குறீங்களா...
நம்மைப்போலவே போலந்து நாட்டு அம்மணி ஒன்னு, லட்சம் ஹிட்சை அடைந்தே தீருவேன் என வெறியோடு கிளம்பியிருக்கு. இதுவரை 284 ஹிட்சை தாண்டிவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது...அந்த அம்மணியோட வலைப்பூ என்ன... நானும் ஒரு ஹிட்சை போட்டுட்டு வந்துடுறேன் என உள்ளங்கை லேசாக நமைச்சல் எடுத்தால், அடுத்து சொல்லப்போகும் சங்கதியைக் கேட்டுவிட்டு பின்பு முடிவு செய்யவும்...
அந்த போலந்து நாட்டு பெண்ணின் பெயர் அனியா. 21 வயதே நிரம்பிய இவருக்கு ஒரு வினோத ஆசை. அதை ஆசை என்பதைவிட லட்சியம்(!) என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் சுற்றி ஒரு லட்சம் ஆண்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் இவருடைய தனியாத தாகம்.இது என்ன பெரிய விசயம்னு கேக்க தோணுமே..
இவர் சொல்கிற ''சந்திப்பு'' வேற.. சினிமாவில் 'நான் சந்தித்ததில நீ ஒருத்தன்தான் ஆம்பளை' என மேட்டரா வர்ற வில்லிக்கு ஒரு டெம்ப்ளேட் டயலாக் வச்சிருப்பாங்களே.. அதே சந்திப்புதான். லட்சம் பேரை 'சந்தித்து' கின்னஸில் இடம்பெறப்போவதாக வேற சொல்லியிருக்கு... என்ன ஒரு லட்சியம்..!
இதுவரையில 284 பேர 'சந்திச்சிருக்கிறதா' தன்னோட முகநூல் பக்கத்தில தெரிவிச்சிருக்கு. இதற்காக தனி முகநூல் பக்கமே இருக்கிறதாம்... அங்க சில பயபுள்ளைக WE WILL MEET IN SRILANKA..THAILAND..INDIA..என அட்வான்ஸ் புக்கிங் வேற பண்ணியிருக்காணுவ. (நல்லா வருவீங்கடா...)
பாவம் அந்த பொண்ணுக்கு சரியா விவரம் பத்தல. எதுக்கு அம்மணி உலகம் பூரா சுத்தணும்...? எங்க தலைநகர் டெல்லி, பம்பாய் ..அப்படியே கொஞ்சம பீகார்,ஆந்திரா வழியா தமிழ் நாட்டை ஒரு ரவுண்டு அடிச்சா பத்தாது..? உங்க லட்சியத்தை சொல்லாமலே நிறைவேற்றி வைப்பானுக..
சிறுமிகளைக் கூட விட்டுவைக்காத வெறிப்பிடித்த மிருகங்கள் இங்க நிறைய இருக்கு அம்மணி... உங்க லட்சியத்தை நிறைவேற்றின மாதிரியும் இருக்கும்... எங்க பிஞ்சுகளை காப்பாற்றின மாதிரியும் இருக்கும்.
துலைக்கோ போறியள்.....
வலையுலகில் நீண்ட காலமாக எழுதிவரும் சில பதிவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறார்கள். கேபிள் சங்கர், கருந்தேள்.. என இந்த பட்டியல் நீளும். இதில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஈழத்திலிருந்து எழுதும் மதியோடை மதிசுதா..
தன் சொந்த முயற்சியில் "துலைக்கோ போறியள்" என்கிற குறும்படத்தை எடுத்துள்ளார். இதற்கு திரைக்கதை, வசனம், இயக்கம் என்கிற மூன்று பொறுப்புகளையும் ஏற்று, மண்மணம் கமழ ஒரு குறுங்காவியத்தை படைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.
தெனாலி படத்தில் கமலும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சில கதாபாத்திரங்களும் பேசியதைத்தான் ஈழத்தமிழ் என இவ்வளவு நாட்களாக நம்பிக்கொண்டிருந்தேன்.அவர்கள் மிமிக்கிரி செய்ய முயற்சித்திருக் கிறார்கள் என்பதை இந்தக் குறும்படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.
விளிம்புநிலை மனிதர்களின் சின்னச்சின்ன உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். பின்னணி இசை அபாரம்.முதல் படைப்பு என்பதால் சிறு தவறுகள் இருக்கலாம். அதைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் ஈழப் பதிவர்கள் மத்தியில் இது ஒரு மைல் கல். மென்மேலும் வளர சக பதிவர் என்கிற வகையில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
(துலைக்கோ போறியள்--->எங்கே போகிறீர்கள்)